தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் நாட்டு ரசிகர்களைப் போலவே சூர்யாவிற்கு ஆந்திராவிலும் நல்ல மாஸ் உருவாகியுள்ளது.
எனவே இவரது நடிப்பில் உருவாகும் படங்கள் இரு மாநிலத்தை மையப்படுத்தியே உருவாகி வருகிறது.
சிங்கம் 3 படத்தின் தெலுங்கு உரிமையை தயாரிப்பாளர் மல்காபுரம் சிவகுமார் என்பவர் ரூ. 18 கோடிக்கு வாங்கியுள்ளார் என்பதை முன்பே பார்த்தோம்.
இந்நிலையில் கேரளாவிலும் சூர்யாவுக்கு ரசிகர்கள் அதிகளவில் கூடி வருவதால், அங்கும் சிங்கம் 3 படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
இப்படத்தின் கேரள உரிமையை சொப்னம் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் ரூ. 5.3 கோடி கொடுத்து பெற்றுள்ளதாம்.
மேலும் தற்போதே தென்னிந்தியா மற்றும் ஓவர்சீஸ் வியாபாரம் ரூ. 100 கோடி அளவுக்கு பேசப்பட்டு வருவதாக செய்திகள் வந்துள்ளன.