#Big News ரஜினி-சிம்ரன் கூட்டணியில் பாலிவுட் பிரபலம்

#Big News ரஜினி-சிம்ரன் கூட்டணியில் பாலிவுட் பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

IMG_20180718_181250கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தன் 165 படத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

படத்தின் நாயகியாக சிம்ரன் இணைந்துள்ளார் என்பதை பார்த்தோம்.

கமல், விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்துவிட்ட சிம்ரன் தற்போதுதான் ரஜினியுடன் இணைந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது முக்கிய வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நவாஸ்தீன் சித்திக் அவர்களும் இணைந்துள்ளார்.

இதனை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதையும் கொஞ்சம் படிங்க  – சின்னத்திரையில் இளைய தளபதி !! 

அஜித்தின் *ஆழ்வார்* படத்தை இயக்கியவரின் அடுத்த படம்!

அஜித்தின் *ஆழ்வார்* படத்தை இயக்கியவரின் அடுத்த படம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aalwarஅஜித் நடித்த ஆழ்வார் படத்தை இயக்கிய இயக்குனர் செல்லா அவர்கள் அடுத்த படத்தை இயக்குகிறார்.

திருச்சித்திரம் தயாரிப்பு நிறுவனம் மரு.மா.திருநாவுக்கரசு அவர்கள் தயாரிக்கிறார்.

கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.

ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார்.

Breaking: போலீஸாக பிரபுதேவா நடிக்கும் பட டைட்டில் லுக் வெளியானது

Breaking: போலீஸாக பிரபுதேவா நடிக்கும் பட டைட்டில் லுக் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

prabhu deva in pon manickavelசில ஆண்டுகளாக இயக்குனர், தயாரிப்பாளர் என பிஸியாக வலம் வந்த பிரபுதேவா தற்போது நடிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது டிக் டிக் டிக் படத்தயாரிப்பாளர் ஹித்தேஷ் ஜபக் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இதில் பிரபுதேவா முதன்முறையாக போலீஸாக நடிக்கிறார். இசையமைக்கிறார் இமான்.

முகில் செல்லப்பன் இயக்கும் இப்படத்தில் நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.

இந்நிலையில் சற்றுமுன் இப்பட தலைப்பை அறிவித்துள்ளனர்.

பொன் மாணிக்கவேல் என டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

கௌதம் கார்த்திக் – மஞ்சிமா இணையும் *தேவராட்டம்* பட தகவல்கள்

கௌதம் கார்த்திக் – மஞ்சிமா இணையும் *தேவராட்டம்* பட தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

devarattamமுத்தையா இயக்கி வரும் படம் ‘தேவராட்டம்’.

‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் படம் இது.

கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்க, மஞ்சிமா மோகன் நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் பூஜை கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்றது.

தற்போது மதுரையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

முத்தையா இதற்கு முன் இயக்கிய படங்களைப் போல் இப்படமும் கிராமத்து பின்னணி கதை தான்.

இந்த படத்திற்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார்.

முதன்முறையாக ரஜினியுடன் இணைந்தார் சிம்ரன்; டேராடூனில் சூட்டிங் !!

முதன்முறையாக ரஜினியுடன் இணைந்தார் சிம்ரன்; டேராடூனில் சூட்டிங் !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini simranகார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

நேற்று முன்தினம் இதன் 2ஆம் கட்ட சூட்டிங்கில் கலந்துக் கொள்ள டேராடூனுக்கு சென்றார்.

ரஜினி தங்குவதற்காக ஜே.பி ஹோட்டலில் அறை எடுத்துக் கொடுத்திருக்கின்றனர். தினசரி அங்கிருந்து படப்பிடிப்புக்குச் செல்கிறார்.

தற்போது சிம்ரனும் சென்றுள்ளார்.

டேராடூனில் நடக்கும் படப்பிடிப்புக்காக ஜூலை 17-ம் தேதி புறப்பட்ட சிம்ரன், இன்று (18-ம் தேதி) நடைபெறும் படப்பிடிப்பில் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கிறாராம்.

டேராடூனில் உள்ள ரிசார்ட்டை சிம்ரன் வீடு போன்ற தோற்றத்துடன் ஆர்ட் டைரக்டர் உருவாக்கியிருக்கிறார்.

அங்கேதான் ரஜினி, சிம்ரன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன் சினிமாவில் கோலோச்சிய சிம்ரன் ரஜினியுடன் இணைவது இதுதான் முதன் முறையாகும்.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

ரிலீசுக்கு தயாராக 3 படங்கள்; எதை வெளியிடுவது என குழம்பும் தனுஷ்.?

ரிலீசுக்கு தயாராக 3 படங்கள்; எதை வெளியிடுவது என குழம்பும் தனுஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushதனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’.

அந்தப் படம் வெளியாகி கிட்டதட்ட 1 வருடத்தை நெருங்கி வருகிறது.

இவரது நடிப்பில் அடுத்த வெளியீடாக ‘வட சென்னை’ படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

செப்டம்பர் மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது பாலாஜி மோகன் இயக்கி வரும் ‘மாரி 2’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

கௌதம் மேனன் இயக்கி வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பும் நடந்து வருகின்றன.

வடசென்னை மற்றும் மாரி 2 படங்கைளை தனுஷே தயாரித்துள்ளார்.

வடசென்னை படத்தின் மீது அதிக நம்பிக்கையில் இருப்பதால் அந்த வெற்றியின் எதிரொலியில் மாரி 2 படத்தை வெளியிடலாமா? என யோசிக்கிறாராம்.

அதற்குள் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ரெடியாகிவிட்டால் எதை முதலில் வெளியிடலாம் என குழப்பத்தில் இருக்கிறாராம்.

காரணம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் இவருடைய தயாரிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையில் தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படமும் திரைக்கு வரவுள்ளது.

More Articles
Follows