தமிழக அரசு விருது வென்ற சரத்குமாரின் ‘சிம்மராசி’ பட இயக்குனர் காலமானார்

தமிழக அரசு விருது வென்ற சரத்குமாரின் ‘சிம்மராசி’ பட இயக்குனர் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simmarasi director Erode Soundar passed awayகேஎஸ் ரவிக்குமார் இயக்கிய ‘சேரன் பாண்டியன்’, நாட்டாமை, சமுத்திரம் உள்ளிட்ட பல படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர் ஈரோடு சௌந்தர்.

மேலும் சிம்மராசி, சீதனம் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.

இவர் ‘சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’, படத்தின் கதைக்காகவும், ‘சிம்மராசி’ படத்தின் வசனத்துக்காகவும் தமிழக அரசு விருதை வென்றுள்ளார்.

கடந்த ஆண்டு 2019ல் தனது பேரன் கபிலேஷை நாயகனாகவும் தனது தம்பி மகன் பாலசபரீஸ்வரனை வில்லனாகவும் ‘உள்ளேன் அய்யா’ என்ற படத்தில் அறிமுகப்படுத்தி இயக்கியிருந்தார் ஈரோடு சவுந்தர்.

இவருக்கு தற்போது 62 வயதாகிறது.

இவருக்கு ஏற்கனவே சிறுநீரக கோளாறு இருந்துள்ள நிலையில் நேற்று இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

எனவே சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி ஈரோடு சௌந்தர் உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Simmarasi director Erode Soundar passed away

கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு அனுமதி.; மருந்தை கண்டுபிடித்த நிறுவனர் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்தார்

கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு அனுமதி.; மருந்தை கண்டுபிடித்த நிறுவனர் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Biontech founderஉலகையே அச்சுறுத்தும் நோயாக கொரோனா உருவெடுத்துள்ளது.

இதற்கு தடுப்பூசி & மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து, 95 சதவீதம் பலனளிக்கும் கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளன.

இந்த தடுப்பூசிக்கு, இன்னும் சில நாட்களில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகத்தின் அனுமதி கிடைத்துவிடும்.

இதனிடையில், இந்த நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு சில தினங்களுக்கு முன்னர் தான் அங்கீகாரம் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் கொரொனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்த முதல் நாடு என்ற பெருமையை பிரிட்டன் பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து பயோஎன்டெக் நிறுவனத்தின் பங்குகள் ஒரே வாரத்தில் 9% உயர்ந்துள்ளதாம்.

அந்நிறுவனத்தின் பங்குகளை தன் வசம் வைத்திருக்கும் பயோஎன்டெக் நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவரான ஜெர்மனியின் உகுர் சாஹின் (Ugur Sahin) உலகின் டாப் 500 உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் நுழைந்துள்ளார்.

அதாவது ஃபுளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 493-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

கணஅதிகாரிகளாக இருந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Biontech founder ugur sahin joins worlds 500 richest people

ரஜினி கட்சி குறித்து தமிழக முதல்வர் என்ன சொன்னார் தெரியுமா..?

ரஜினி கட்சி குறித்து தமிழக முதல்வர் என்ன சொன்னார் தெரியுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Edappadi Palanisamyசிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

“முதலில் நடிகர் ரஜினிகாந்த் கட்சியை பதிவு செய்யட்டும் அதற்கு பிறகு அதுகுறித்து பதில் தருகிறேன்.” என்று தெரிவித்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

Edappadi Palanisamy about Rajinikanth political entry

பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக ஸ்ரீதிவ்யா

பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக ஸ்ரீதிவ்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sri divya gautham karthikபத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார்

எல்.சிந்தன், ராஜேஷ்குமார் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.

இவர்கள் தயாரிப்பில் பத்ரி வெங்கடேஷ் ஏற்கனவே ‘பிளான் பண்ணி பண்ணணும்’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய படத்தை பற்றி டைரக்டர் பத்ரி வெங்கடேஷ் கூறியதாவது:-

“ஒரு படம் தயாரிப்பில் இருக்கும்போதே அந்த படத்தின் டைரக்டருக்கு அதே தயாரிப்பாளர்கள் இன்னொரு புதிய படத்தையும் இயக்கும் வாய்ப்பை தருவது அபூர்வம்.

எனக்கு அப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி.

வடசென்னையைச் சேர்ந்த ‘வெரலு’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கௌதம்

அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா, ‘பிசியோதெரபிஸ்ட்’ வேடத்தில் வருகிறார்.

கதாநாயகன் கவுதம் கார்த்திக் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அதில் இருந்து அவர் எப்படி வெளியே வருகிறார்? என்பதுதான் கதை.

இதன் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கிறது. சென்னை, ராஜஸ்தான், குஜராத், கேரளா ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.”

இவ்வாறு பத்ரி தெரிவித்துள்ளார்.

Gautham Karthik and Sri Divya joins for Badri Venkatesh film

கட்சி கன்பார்ம்..; ரஜினியை வாழ்த்தி அட்வைஸ் கொடுத்த இயக்குனர் தங்கர் பச்சான்

கட்சி கன்பார்ம்..; ரஜினியை வாழ்த்தி அட்வைஸ் கொடுத்த இயக்குனர் தங்கர் பச்சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Thangar Bachchanநடிகர் ரஜினிகாந்த் தன் அரசியல் பிரவேசத்தை நேற்று உறுதிப்படுத்தினார்.

அடுத்தாண்டு 2021 ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும் இதே ஆண்டில் டிசம்பர் 31-ம் தேதி கட்சி அறிவிப்பு வெளியாகும் எனவும் ட்விட்டரில் அறிவித்தார் ரஜினிகாந்த்.

“மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என கூறியிருந்தார்.

அப்போது… “தமிழக மக்கள் நலனுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை.

நான் வென்றால் அது மக்களின் வெற்றி, நான் தோற்றால் அது மக்களின் தோல்வி“ என்றார்.

இதனையடுத்து தமிழக அரசியல் களம் பரபரப்பானது.

இந்த நிலையில் ரஜினி அரசியல் கட்சி குறித்து இயக்குனரும் நடிகருமான தங்கர் பச்சான் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது…

“வளர்த்துவிட்ட தமிழக மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக அரசியல் தொண்டு ஆற்ற வரும் அண்ணன் ரஜினிகாந்த் அவர்களை வரவேற்கிறேன்!

தமிழக அரசியலை வணிகமாக மாற்றிய அரசியல்வாதிகள், அரசியல் தரகர்கள், அரசியல் கட்சிகளின் இணையக்கூலிகள் கலக்கத்தில் உறக்கமில்லாமல் கதறுவார்கள், புலம்புவார்கள்! அவர்களை எல்லாம் புறந்தள்ளி மக்கள் குறித்து மட்டுமே கவனம் செலுத்துங்கள்.”

இவ்வாறு ரஜினியை வாழ்த்தி அறிவுரை கொடுத்துள்ளார்.

Thangar Bachchan wishes and advice to Rajinikanth

ரஜினியும் மோடியும் சேர்ந்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம்.. – துக்ளக் குருமூர்த்தி

ரஜினியும் மோடியும் சேர்ந்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம்.. – துக்ளக் குருமூர்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tuglaq gurumurthyநடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றி துக்ளக் இதழாசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்…

“25 வருடங்களாக தமிழகத்தில் ஒரு சாபம் உள்ளது.

இரண்டு பெரும் தலைவர்கள் இருந்ததால், (கருணாநிதி & ஜெயலலிதா) அவர்கள் கட்சி செய்யும் தவறுகள் மக்களுக்கு தெரியாமல் போனது.

அவர்கள் இல்லாததால் தற்போது கட்சிகளுக்கிடையே போட்டி உருவாகியுள்ளது.

ரஜினிகாந்தை மக்கள் சினிமா நடிகராக பார்க்கவில்லை; அவரை நல்லவராக பார்க்கிறார்கள்.

மோடியும் ரஜினியும் இணைந்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உருவாகும் என்பது என் நிலை. அதுதான் ரஜினியின் நிலைப்பாடா? என எனக்கு தெரியாது.” என்று கூறினார்.

Rajinikanth should ally with BJP says Gurumurthy

More Articles
Follows