தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இருந்தபோதிலும் சுந்தர் சி இயக்கும் வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் சிம்பு. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
சிம்புக்கு தடை என்ற செய்திகள் பரவ தொடங்கிய நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷாலுக்கு எதிராக சிம்பு ரசிகர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சற்றுமுன் சிம்புவின் மக்கள் தொடர்பாளர் சி.என். குமார் அவர்கள் சிம்பு தரப்பில் இருந்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில்.. என் அன்பான ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். தற்போது திரைத்துறையில் நடந்து வரும் தகவல்கள் பற்றி கவலைப்பட வேண்டாம்.
தனிப்பட்ட எந்த நபரும் முடிவு எடுக்க முடியாது. அதற்கு என்று ஒரு குழு உள்ளது. எந்த ஒரு குறிப்பிட்ட தனி நபரையும் தாக்கி பேச வேண்டாம்.
அன்பை பகிருங்கள். உங்கள் அன்பிற்கு நன்றி. நீங்க இல்லாம நானில்லை.
நம் கடமையை செய்வோம். முடிவு தானாக வரும். இறுதியாக பொங்கலுக்கு வர்றோம் என அந்த அறிக்கையில் சிம்பு குறிப்பிட்டுள்ளார்.
சற்றுமுன் தான் ரஜினியின் பேட்ட படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்பின் ஒரு மணி நேர இடைவெளியில் சிம்பு இந்த அறிக்கையை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டது இங்கே கவனிக்கத்தக்கது.
Simbus statement regarding his next movie release on 2019 Pongal
