கௌதம் கார்த்திக்கு சிம்பு கொடுத்த இன்ப அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா, கார்த்தி நடித்த பல படங்களை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தற்போது சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கவுள்ளது என்பதை பார்த்தோம்.

இப்படம் கன்னடத்தில் உருவான ‘மப்டி’ படத்தின் ரீமேக் ஆக உருவாகவுள்ளது.

இயக்குனர் நர்த்தன் என்பவர்தான் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் சிம்பு ஒரு நெகட்டிவ்வான ரோலில் நடிக்கிறாராம்.

இந்நிலையில், கௌதம் கார்த்திக்கு நடிகர் சிம்பு சிறப்பு பரிசு ஒன்றை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

ஓர் அழகான கூலிங் கிளாசை ஒன்றை கொடுத்திருக்கிறார்.

இளையராஜா இசையில் ”முன்பதிவு”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆலயா கிரியேஷன்ஸ் சார்பில் அன்பரசன் தயாரிக்கும் படம் ‘முன் பதிவு ‘. இப்படத்தை ஜி.எம். துரைபாண்டியன் இயக்குகிறார்.இவர் பல குறும்படங்கள், விளம்பரப் படங்களை இயக்கியவர் .கதை திரைக்கதை சார்ந்து தீவிரமாக இயங்கிய அவர் நண்பர்கள் மூலம் மலையாளப் பக்கம் போய் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார் .சென்ற ஆண்டு ‘ திரைக்கு வராத கதை’ என்றபடம் தமிழில் வந்தது. அது மலையாளத்தில் ‘கேர்ள்ஸ்’ என்ற பெயரில் வெளியானது. அதில் கதை வசனம் எழுதியிருக்கிறார்.
துரைபாண்டியன் இயக்கும் முதல் படம் தான் ‘முன்பதிவு’.டைரக்டர் துளசிதாஸ் எனது நண்பர் அவரிடம் பல படங்களுக்கு நான் பணிபுரிந்துள்ளேன்.

படத்தின் கதை என்ன என்ற போது, “இன்று இளைஞர்களைப் படுகுழியில் தள்ளிவிடும் ஒரு பிரச்சினை பாலினக் கவர்ச்சி என்கிற பிரச்சினைதான். பால்யப்பருவத்தில் அறியாத வயதில் புரியாத மனதில் எழும் பாலினக் கவர்ச்சியை காதல் என்று தவறாகப்புரிந்து கொண்டு தங்கள் எதிர்காலத்தையும் நண்பர்கள் பெற்றோர்களுக்கு இடையேயான உறவுகளையும் கெடுத்துக்கொள்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனின் கதைதான் முன்பதிவு .இந்தக் கதையை இசைஞானி இளையராஜா கேட்டதும் அவருக்குப் பிடித்து விட்டது.

கதையைக் கேட்டவர் ஒரு நிபந்தனை விதித்தார். சொன்ன கதையை அப்படியே சொன்னபடி படமாக எடுக்க வேண்டும் என்பதுதான் அது.

இளையராஜா இசை அமைக்கச் சம்மதித்ததும் படத்தின் மீது அனைவருக்கும் நம்பிக்கை வந்துவிட்டது.” என்கிறார் இயக்குநர் துரைபாண்டியன்.

இளையராஜா ஒரு பாடலைப் பதிவு செய்து கொடுத்துவிட்டார். ஜூன் 26ஆம் தேதி மற்ற பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்படவுள்ளன.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் கௌதமனின் மகன் தமிழ் நடிக்கிறார் .தமிழ் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தவர். பிற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. கூத்துப்பட்டறைக் கலைஞர்களும் பங்கேற்கிறார்கள்.

படத்திற்கு ஒளிப்பதிவு மஞ்ச்லால். இவர் மலையாளத்தில் நிறைய படங்களில் பணி பற்றியவர். எடிட்டிங் பீட்டர் பாபியா.

‘முன்பதிவு’ விரைவில் படப்பிடிப்பு .

ஹவுஸ் ஓனர் எனக்கு ஒரு உணர்ச்சிகரமான அனுபவம் – நடிகர் கிஷோர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கிஷோர் அவர்களிடம் ஏதோ ஒரு சிறப்பு வாய்ந்த சக்தி உள்ளது. ஒவ்வொரு முறையும், அவர் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுகிறார். பன்முகப்பட்ட கதாப்பாத்திரங்களிலும் மிக இயல்பாக நடித்து நம் பாராட்டுக்களை பெறுகிறார். அது ஒரு நேர்மறையான கதாபாத்திரமாக இருந்தாலும் அல்லது வில்லத்தனம் கலந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அவர் ஒருபோதும் தன் மீது கவனத்தை திருப்புவதை தவறவிடமாட்டார். வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகும் “ஹவுஸ் ஓனர்” படத்தில் தனது புதிய அவதாரத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

ஒரு திரைப்படத்தில் அந்தந்த திரைப்பட இயக்குனர்களுடன், கலைஞர்களும் எப்போதுமே மிகுந்த பாராட்டுக்களை பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது வெளிப்படையானது. ஆனால் நடிகர் கிஷோரின் மேற்கோள்கள் மிகவும் உணர்ச்சிவசமானது. அவர் கூறும்போது, “ஆம், ஹவுஸ் ஓனர் பயணம் எனக்கு ஒரு உணர்ச்சிகரமான அனுபவமாக இருக்கிறது. இந்த படத்தில் எனது கதாபாத்திரம் சிறியது என்றாலும், நான் ஒரு நடிப்பு பயிற்சி வகுப்பில் இருந்ததை போலவே நிறைய கற்றுக்கொண்டேன். லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் ஒரு அசாதாரண இயக்குனர், இது 100% உண்மை. வெளிப்படையாக, அவருடன் பணிபுரிந்த எவரும் அதை ஏற்றுக் கொள்வார்கள். இது வெறுமனே அவரது இயக்குனர் திறமை பற்றியது மட்டுமல்ல, அவர் படப்பிடிப்பு தளத்தில் எல்லாவற்றையும் கையாண்ட விதத்தை பற்றியது. “ஹவுஸ் ஓனர்” போன்ற ஒரு சுயாதீன படத்தில் வேலையாட்கள் மிகக்குறைவு, பல பணிகளிலும் அவரே ஈடுபட்டார், இது நம்பமுடியாத ஆச்சரியமாக இருந்தது. இன்றைய சினிமாவில் நாம் தொழில்நுட்பரீதியில் புத்திசாலித்தனமான, ஆனால் வாழ்க்கை அனுபவம் இல்லாத பல இளம் திரைப்பட இயக்குனர்களை சந்திக்கிறோம் என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். அவர்களில் பெரும்பாலோர் தங்கள் பார்வையை பகிர்ந்து கொள்ள கஷ்டப்பட்டிருக்கிறார்கள், சில சமயங்களில், நான் அவர்களிடம் நடித்து காட்ட சொல்லுவேன், அப்போது தான் நான் அதை பின்பற்ற முடியும். இருப்பினும், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் திரையில் வரும் ஒவ்வொரு ஃபிரேமிலும் வாழ்க்கையை வழங்கியுள்ளார். ஒரு கலைஞராக, நாம் நடிக்கும் கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை முற்றிலும் உணர்வது என்பது பொதுவானது. ஆனால் என் மனைவி ராதாவின் கதாபாத்திரத்தில் (நடிகை ஸ்ரீரஞ்சனி நடித்தது) இருக்கும் வலி, சோகம் மற்றும் அன்பை என்னால் உணர முடிந்தது. படம் பார்க்கும்போது பார்வையாளர்கள நிச்சயமாக அதே அனுபவங்களை அனுபவிப்பார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். ஸ்ரீரஞ்சனி மிக அற்புதமாக நடித்துள்ளார். நான் சொன்னது போல, அவரது கதாபாத்திரம் அவ்வளவு உணர்ச்சிகளை கொண்டுள்ளது, அதை அவர் பாராட்டத்தக்க வகையில் வெளிப்படுத்தியுள்ளார். கிஷோர் மற்றும் லவ்லின் இருவரும் தான் “ஹவுஸ் ஓனர்” படத்தின் ஆன்மாக்கள், அவர்கள் தான் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றுள்ளனர்” என்றார்.

மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரித்துள்ள இந்த “ஹவுஸ் ஓனர்” படத்தை வரும் ஜூன் 28ஆம் தேதி ஏஜிஎஸ் சினிமாஸ் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது. லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்தில் கிருஷ்ணா சேகர் டி.எஸ். (ஒளிப்பதிவு), சி.எஸ்.பிரேம் குமார் (படத்தொகுப்பு), தபஸ் நாயக் (ஆடியோகிராபி), கார்க்கி, அனுராதா (பாடல்கள்) மற்றும் எம்.வி. ரமேஷ் (தயாரிப்பு நிர்வாகம்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர்.

பிக் பாஸில் சீசன் 3 இல் மிஸ் சவுத் இந்தியா, நடிகை மீரா மிதுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக்பாஸ் 3 தான் இப்போதைக்கு தமிழ்நாட்டின் ஒரே பரபரப்பு. நடிகர் கமலஹாசன் இந்த சீசனையும் தொகுத்து வழங்க வருகிறார். முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட செட்டில் இம்முறை அதிக கேமராக்களுடன் 17 போட்டியாளர்களுடன் களமிறங்குகிறது பிக்பாஸ்.

இதுவரை 15 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில் 16 வது சிறப்பு போட்டியாளராக மாடல், நடிகை, மிஸ் சவுத் இந்தியா புகழ் மீரா மிதுன் களமிறங்க உள்ளார்.

மீராமிதுன் இவர் எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்தவர். சென்னையை சேர்ந்த இவர் படிக்கும் காலத்தில் இருந்தே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். படிப்பிற்கு பின் மாடலிங் துறையில் நுழைந்து மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு உட்பட நான்கு அழகி பட்டங்களை வென்றவர். படிக்கும் காலத்தில் இருந்தே மாடலிங்கில் வெகுவாக ஆர்வம் கொண்டிருந்த இவர் ஒரு தமிழ்ப்பெண்ணாக கார்பரேட்கள் கொடிகட்டி பறக்கும் மாடலிங் துறையில் தனியாளாக மோதி ஜெயித்தவர். ஐந்து வருடங்களாக மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்தவர். அதைத்தொடர்ந்து சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார்.

தமிழ்ப்பெண்ணாக மாடலிங் துறையில் ஜெயித்த இவர் தன்னைப்பொன்றே மாடலிங் ஆசை கொண்ட தமிழ்ப்பெண்கள் எந்தக் கஷ்டங்களும் படக்கூடாது என்றே மிஸ் தமிழ்நாடு திவா அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார்.

தற்போது மாடலிங் துறையில் இருந்து முதல் தமிழ்ப்பெண்ணாக பிக் பாஸிக்குள் நுழைந்துள்ளார். மாடல் என்றாலே வெளிநாட்டு, வெளி மாநில பெண் என்ற நிலையை மாற்றி ஒரு தமிழ்ப்பெண் மாடலாக பிக் பாஸுக்குள் நுழைகிறார். இவரது சாதனைகள் கேள்விப்பட்டே பிக் பாஸில் கலந்து கொள்ள பிக்பாஸ் குழு சிறப்பு போட்டியாளராக இவரை அழைத்துள்ளது.

இன்றைய எபிஸோட் முதல் இவர் பிக்பாஸ்3 ல் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜாவில் விவேக் பிரசன்னாவின் ‘சர்ப்ரைஸ்’ அவதாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் கிடைத்த பாராட்டுக்கள் மற்றும் நேர்மறையான வரவேற்பு ஒட்டுமொத்த குழுவையும் மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஒவ்வொரு யூடியூபர் (அ) கலைஞர்களும் தங்களது திரை இருப்பு மூலம் கைதட்டல்களையும் பாராட்டுகளையும் கொண்டிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் ஒரு ஆச்சரியமான ஷோஸ்டாப்பராக மாறியிருக்கிறது. அவர் வேறு யாருமல்ல நடிகர் விவேக் பிரசன்னா. மிகக்குறுகிய காலத்தில் நகைச்சுவை, வில்லத்தனம் மற்றும் குணச்சித்திர வேடம் என தனது பன்முக கதாபாத்திரங்கள் மூலம் தனக்கென ஒரு முக்கிய அந்தஸ்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த படத்தில் அவர் நடித்திருப்பதை பற்றிய விஷயத்தை வெளிப்படுத்தால் வைத்திருந்தனர் படக்குழுவினர். அவர் கதாபாத்திரம் படத்தின் மிகவும் ஆச்சரியமான அம்சமாக மாறியிருக்கிறது.

இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இது குறித்து கூறும்போது, “படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பாராட்டப்பட்டதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஸ்கிரிப்டை எழுதும்போது, வில்லன் கதாபாத்திரம் எங்கள் அனைவரையும் கவர்ந்தது. ஏனெனில் அவர் மீது தான் படத்தின் மையக்கருவே பபயணிக்கிறது. மற்ற கலைஞர்களை இறுதி செய்து, முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த பிறகும், இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஒருவரை எங்களால் இறுதி செய்ய முடியவில்லை. தற்செயலாக, நகைச்சுவை கலந்து வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் விவேக் பிரசன்னா பொருத்தமான தேர்வாக இருக்கும் என்று நாங்கள் அனைவரும் உணர்ந்தோம். மேலும், ‘மேயாத மான்’ படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து நாங்கள் வியந்தோம். அதனால் அவர் சரியானவராக இருப்பார் என்று உணர்ந்தோம். அவர் நாங்கள் சொல்வதை ஆர்வத்துடன் கேட்டு, எங்கள் எதிர்பார்ப்புகளை மீறி, மிகச்சிறந்த நடிப்பை வழங்குகிறார். அந்த கதாபாத்திரத்தின் ஆடை மற்றும் கண்ணாடி உடன் ஸ்கிரீன் டெஸ்ட் செய்தபோது, நாங்கள் கற்பனை செய்த கதாபாத்திரத்திற்கு முழுமையான வாழ்க்கையை அவர் அளித்ததால் நாங்கள் முழு திருப்தி அடைந்தோம். விவேக் பிரசன்னா “நூறாவது நாள்” சத்தியராஜை நினைவுபடுத்துகிறார் என்பது மக்களிடமிருந்து கிடைத்த பொதுவான தீர்ப்பாகி விட்டது” என்றார்.

“எந்த இடமாக அல்லது எந்த நேரமாக இருந்தாலும், அவர் தனது நடிப்பை மேம்படுத்தி வழங்குவதில் சிறந்தவர். ரயில் நிலையம் போன்ற நெரிசலான இடங்களில் கூட, அவர் மிகவும் எளிமையாக இருந்தார். அந்த காட்சி சரியானதாக இருந்தபோதும், இன்னும் சிறப்பாக தர தானாக முன்வந்து பரிந்துரைப்பார். பெரும்பாலும் யூடியூபில் இருந்து வந்த புதிய கலைஞர்களை கொண்ட எங்கள் குழுவில், அவர் ஒரு போதும் தனது சீனியாரிட்டி மூலம் எந்த ஈகோவையும் காட்டவில்லை. அவரது அளவு கடந்த முயற்சி இல்லையென்றால், இந்த கதாபாத்திரம் இவ்வளவு முக்கியத்துவத்தைப் பெற்றிருக்காது. அவரது நடிப்பை மக்கள் மிகவும் ரசிக்கிறார்கள் என்பதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, குறிப்பாக ‘கொடியிலே மல்லிகைப்பூ’ பாடலில். அவர் ஏற்கனவே ஒரு சிறந்த நடிகர். சிறந்த குணசித்திர கலைஞராக அவரது அந்தஸ்து நிச்சயம் உயரும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் ரியோ ராஜ், ஷிரின் காஞ்ச்வாலா, ராதாரவி, ஆர்ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத், விவேக் பிரசன்னா மற்றும் பல யூடியூப் நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ நல்ல வரவேற்புடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

லயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பில் புகழ் பெற்ற ‘சிம்பா’ கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்கும் நடிகர் சித்தார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் இதயங்களை வென்ற டிஸ்னி, தனது புகழ்பெற்ற திரைப்பட வரிசையும் மற்றும் மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட ஒரு வைரக்கல்லான ‘தி லயன் கிங்’ படத்தை அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் ரசிகர்களுக்கு வழங்குகிறது. அனிமேஷனில் உருவாக்கப்பட்ட அதன் முந்தைய பதிப்பானது அதன் வலுவான மற்றும் உணர்ச்சி ரீதியான கதை சொல்லல் மற்றும் புகழ்பெற்ற கதாபாத்திரங்களுக்காக புகழ் பெற்றது. அது எல்லா இடங்களிலும் ரசிகர்களின் இதயங்களை வென்றது.

அழகிய சிங்க குட்டி சிம்பா ஒரு வீர மகனாக எழுந்து, பழிவாங்கி, அரியணையில் தன்னுடைய சரியான இடத்தை பிடித்தது தான், தலைமுறைகள் தாண்டியும் அனைவருக்கும் பிடித்த கதாபாத்திரமாக இருந்து வருகிறது.
லைவ் ஆக்ஷன் பதிப்பை பெரிய திரையில் காண பார்வையாளர்கள் மிக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். குறிப்பாக தமிழ் ரசிகர்களுக்கு, ஒரு அருமையான செய்தியை வழங்கியிருக்கிறது டிஸ்னி இந்தியா. வரலாற்றில் மிகவும் விரும்பப்படும் திரைப்பட கதாபாத்திரங்களில் ஒன்றான சிம்பாவிற்கு, அதன் தமிழ் பதிப்பில் நடிகர் சித்தார்த் குரல் கொடுக்க இருக்கிறார்.

“லயன் கிங்கை திரையில் மற்றும் மேடையில் நான் முதன்முதலில் பார்த்ததை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது. இந்த காலத்தால் அழியாத கிளாசிக் படத்தின் தமிழ் பதிப்பில் சிம்பாவாக நான் பேசுவதும், பாடுவதும் எனக்கு மறக்க முடியாத அனுபவம். சினிமாவில் எனது புதிய அவதாரத்தை எனது பார்வையாளர்களுடன் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்”என மிக உற்சாகமாக பேசுகிறார் சித்தார்த்.

‘அயர்ன் மேன்’ மற்றும் ‘தி ஜங்கிள் புக்’ புகழ் இயக்குனர் ஜான் ஃபேவ்ரூ இயக்கத்தில் உருவாகியுள்ள, டிஸ்னியின் ‘தி லயன் கிங்’ சமீப காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். ஒரு ஹீரோ உருவாகும் பயணம் தான் இந்த மியூசிக்கல் ட்ராமா படத்தை பெரிய அளவில், முன்னோடியான, மிகச்சிறந்த ஃபோட்டோ ரியல் அனிமேஷன் தொழில்நுட்பத்துடன் மீண்டும் பெரிய திரையில் உயிர் பெற்று வர காரணமாக அமைந்திருக்கிறது.

ஜான் ஃபேவ்ரூ இயக்கியிருக்கும் ‘தி லயன் கிங்’ கதை வருங்கால மன்னர் பிறக்கும் ஆப்பிரிக்க சவன்னாவுக்கு பயணிக்கிறது. சிம்பா தனது தந்தை மன்னர் முஃபாசாவை வழிபட்டு, தனது சொந்த அரச விதியை மனதில் கொள்கிறார். ஆனால் ராஜ்யத்தில் உள்ள எல்லோருமே புதிய மன்னரின் வருகையை கொண்டாடுவதில்லை. முஃபாசாவின் சகோதரரரும், சிம்மாசனத்தின் முன்னாள் வாரிசுமான ஸ்கார் வேறு சில திட்டங்களைக் கொண்டுள்ளார். பிரைட் ராக் (Pride rock) போரானது துரோகம், சோகம் மற்றும் ட்ராமாவை கொண்டிருக்கிறது, இதன் விளைவாக சிம்பா நாடுகடத்தப்படுகிறது. புதிதாக வந்த நண்பர்களின் உதவியுடன், சிம்பா வளர்ந்து எவ்வாறு தனது உரிமையை கைப்பற்ற வேண்டும் என்பதை அறிந்து கொள்கிறது.

சிம்பாவாக டொனால்ட் குளோவர், நாலாவாக பியோனஸ் நோல்ஸ்-கார்ட்டர், முஃபாசாவாக ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ், ஸ்காராக சிவெட்டல் எஜியோஃபர், பம்பாவாக சேத் ரோஜென் மற்றும் டிமோனாக பில்லி ஐச்னர் ஆகியோரை உள்ளடக்கியிருக்கிறது நட்சத்திர குழு. பொக்கிஷமான கதாபாத்திரங்களை ஒரு புதிய வழியில், முன்னோடி திரைப்பட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உயிர்ப்பித்திருக்கும், டிஸ்னியின் “தி லயன் கிங்” வரும் ஜூலை 19, 2019 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது.

More Articles
Follows