சினிமாவிலேயே இதுதான் முதல்முறை; சிம்பு-யுவன் புது முயற்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு அடுத்த நடிக்கவுள்ள படத்திற்கு யுவன் இசையமைக்கவிருக்கிறார் என்பதை பார்த்தோம்.

இப்படத்தில் எவரும் செய்யாத புதிய முயற்சியாக இடைவேளை இல்லை என்பதை தெரிவித்திருந்தார்.

இன்னும் சில தினங்களில் இப்படத்தின் சூட்டிங் தொடங்கும் எனத் தெரிகிறது.

இதற்காக பின்னணி இசை பணியில் யுவன் சங்கர் ராஜா ஈடுப்பட்டு வருகிறார்.

இசைப் பணிகளை முழுவதுமாக முடித்து விட்டு சூட்டிங்குக்கு செல்கிறோம்.

இப்படி செல்வது இதுதான் முதன்முறை எனவும், உங்கள் ஆதரவு படத்திற்கு தேவை எனவும் சிம்பு தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இப்படத்தில் பாடல்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Simbu plans to start his movie shoot once BGM is over

STR‏Verified account @iam_str
@thisisysr has already started composing the background score. First time finishing the score and then shooting. Need all ur support n love

அஜித்திடம் பேசுவதும் நல்ல புத்தகத்தை படிப்பதும் ஒன்று – கபிலன் வைரமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கவிஞர் வைரமுத்துவின் மகன், பாடலாசியர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் கபிலன் வைரமுத்து.

இவர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் படத்தின் திரைக்கதையிலும் பங்காற்றியுள்ளார்.

இதுகுறித்து கபிலன் கூறியுள்ளதாவது…

இப்படத்தில் இரண்டு பாடல்கள் இயற்றியதும் மட்டுமில்லாமல் இப்படத்தின் கதை விவாதத்திலும், திரைக்கதை எழுதுவதிலும் பங்கேற்று எனது எனது பங்களித்தேன்.

இயக்குனர் சிவா என் மீது முழு நம்பிக்கை வைத்து வேண்டிய சுதந்திரத்தை தந்தார்.

இப்படத்தின் மூலமாக அஜித் ஸாரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவருடன் உரையாடியது ஒரு நல்ல புத்தகத்தை படித்த உணர்வை தந்தது.

அவரது தொலைநோக்கு பார்வை,தொழில் பக்தி, உணவு பழக்க வழக்கம், கடுமையான உடல் பயிற்சி ஆகியவை அவர் மேல் நான் கொண்டு உள்ள மரியாதையை மேலும் பெரிதாக்கியது.

விவேகம் படத்தின் சில காட்சிகளை பார்க்க நேர்ந்தது.நான் எதிர்பார்த்ததை விட காட்சி அமைப்புகள் அருமையாக அமைந்து உள்ளன.

ரசிகர்களுடன் இணைந்து ஆகஸ்ட் 24 ஆம் தேதி திரை அரங்குகளில் பார்க்க உற்சாகத்துடன் தயாராக உள்ளேன்” என்கிறார் கபிலன் வைரமுத்து.

16-36-96 மூன்று கெட்டப்பில் அசத்தும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சி.பிரேம்குமார் இயக்கும் 96 படத்தில் விஜய்சேதுபதி மற்றுத் த்ரிஷா இணைந்து நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், காளி வெங்கட் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

இதன் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.

இதில் விஜய்சேதுபதி போட்டோகிராபராக நடிப்பதாகவும், அவரது காதல் கதையை மையப்படுத்தியே இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இதன் பர்ஸ்ட் லுக் நேற்றுமுன் தினம் வெளியானது.

இதில் 16 வயது பையன், 36 வயது இளைஞர் மற்றும் 96 வயது முதியவர் என மூன்று கெட்டப்புகளில் விஜய்சேதுபதி நடித்து வருகிறாராம்.

எனக்கு பிடிக்காத வார்த்தை ஸ்டிரைக்; பெப்சி பிரச்சினை குறித்து ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெஃப்சி தொழிலாளர்கள் இடையே பிரச்சினை எழுந்துள்ளதால், நேற்றுமுதல் பெஃப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

இதனால் ரஜினியின் காலா, விஜய்யின் மெர்சல் உள்ளிட்ட 37 படங்களின் சூட்டிங் ரத்தானது.

ஆனால் பெப்சி சாராத தொழிலாளர்களை வைத்து விஷால் தான் நடிக்கும் துப்பறிவாளன் பட சூட்டிங்கை நடத்தி வந்தார்.

இந்நிலையில் பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி இப்பிரச்சினை குறித்து கமலிட்ம் பேசினார்.

அவர் சில ஆலோசனைகளை வழங்கியதாக தெரிவித்தார்.

இந்நிலையில் சற்றுமுன் ரஜினிகாந்தை சந்தித்தார் ஆர்.கே.செல்வமணி.

அவர்கள் சந்திப்பையடுத்து ரஜினி ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது…

எனக்கு பிடிக்காத சில சொற்களில் வேலை நிறுத்தம் (ஸ்டிரைக்) என்கிறது ஒன்று.

எந்த பிரச்சினையாக இருந்தாலும் சுயகௌரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி, அன்பான வார்த்தைகளிலே பேசி, தீர்வு காணலாம்.

தயாரிப்பாளர் சங்கமும், பெப்சி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமூகமான தீர்வு காண வேண்டுமென்று மூத்த கலைஞன் என்கிற முறையில் அன்பான வேண்டுகோள்.

என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Rajinikanth statement about FEFSI strike

விஐபி2 ரிலீஸ் தேதியை கன்பார்ம் செய்தார் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேலையில்லா பட்டதாரி படம் வெற்றிப் பெற்றதையடுத்து, அதன் இரண்டாம் பாகத்தை தயாரித்து நடித்து வருகிறார் தனுஷ்.

இப்படத்தை சௌந்தர்யா ரஜினி இயக்க, கலைப்புலி தானுவும் இணைந்து தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ஹிட் அடித்துள்ள நிலையில், இதன் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் இருந்தனர்.

ஆனால் ரிலீஸ் தேதி குறித்த பல யூகங்கள் வந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் இதன் ரிலீஸ் தேதியை ஆகஸ்ட் 11ஆம் தேதி என அவரே உறுதிப்படுத்தி ட்வீட் செய்துள்ளார்.

Dhanush confirmed VIP2 release date

25 ஆண்டு சாதனை; 500 அடிக்கு அஜித் ரசிகர்கள் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் நடிக்கத் தொடங்கி நாளை மறுநாள் ஆகஸ்ட் 3ஆம் தேதியோடு 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறார் அஜித்.

எனவே அஜித்தை கௌரவிக்கும் வகையில் அன்றைய தினத்தில் விவேகம் டிரைலர் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த
வீர சென்னை கிங் மேக்கர் தல அஜித் ரசிகர்கள் 500 அடியில் பிரமாண்ட சுவா் ஓவியத்தை வரைந்து உள்ளனர்.

அவ்வழி செல்லும் மக்கள் இதனை ஆச்சரியத்துடன் பார்த்த படியே செல்கின்றனர்.

More Articles
Follows