ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைக்க சிம்பு திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 5 நாட்களாக சிம்பு தன் புதிய படம் பற்றிய தகவல்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார்.

இப்படத்தில் பாடல்கள் இல்லை; இடைவேளை இல்லை உள்ளிட்ட புதுமைகளை இதில் புகுத்தவிருக்கிறார்.

மேலும் எவரும் செய்யாத புதிய முயற்சியாக படத்தின் பின்னணி இசை கம்போஸிங்கை முடித்துவிட்டு சூட்டிங்கு செல்லவிருக்கிறார் என்பதை பார்த்தோம்.

இப்படம் பயங்கர திகில் படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தில் எதிர்பாராத ட்விஸ்ட்களை வைத்து படம் முழுவதும் சீட் நுனியில் ரசிகர்களை உட்காரவைத்து அசத்த போகிறாராம்.

இதில் ஒரு திகில் படம் எனவும் சொல்லப்படுகிறது.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, யுவன் இசையமைக்கிறார்.

Simbu plans his next movie should be with seat edged scenes

பிக்பாஸை தடை செய்யனும்; கமல்-சக்தி மன்னிப்பு கேட்கனும்… கோர்ட்டில் மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தினமும் 4 கோடி மக்கள் பார்த்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மற்றொரு புறம் இந்நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என புகார் மனுக்கள் குவிந்து வருகின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கெட்ட வார்த்தைகள் பேசப்படுவதால் அதை வீட்டில் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்க முடியவில்லை என்பதால் தடை செய்ய வேண்டும் என இசை வேளாளர் சங்கம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் நாதஸ்வரம் வித்வான்களை நடிகர் சக்தி அவமதித்துவிட்டதால், அவரும் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Bigg Boss show should be banned Case filed

விவேகம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு தேதி உறுதியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அஜித், இயக்குனர் சிவா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரின் வெற்றிக் கூட்டணியில் உருவாகியுள்ள படம் விவேகம்.

மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தை ஆகஸ்ட் 24ஆம் தேதி ரிலீஸ் செய்கின்றனர்.

இதில் இடம் பெற்றுள்ள சர்வைவா, தல விடுதலை, காதலாடா ஆகிய 3 பாடல்கள் இதுவரை வெளியாகிவிட்டது.

இந்நிலையில் மற்ற நான்கு பாடல்களை வருகிற ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

பாடல்கள் பற்றிய முன்னோட்டத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அனிருத்.

Vivegam song preview released and Audio release date confirmed

இதோ அந்த பாடல்கள் குறித்த முன்னோட்டம்….

தனுஷ் கேரவனுக்கு மின்சாரம் திருட்டு; ரூ.15 ஆயிரம் அபராதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குல தெய்வ வழிபாட்டுக்காக தேனி மாவட்டத்துக்கு சென்றார் நடிகர் தனுஷ்.

தனது பாட்டனார் பிறந்த ஊரான ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துரெங்கபுரத்தில் இருக்கும் கஸ்தூரி மங்கம்மாள் கோயிலுக்கு வழிபட சென்றிருந்தார்.

தனது மனைவி மற்றும் குழந்தைகள், பெற்றோர்களுடன் வந்த தனுஷின் பயன்பாட்டுக்காக ஏ.சி வசதியுடன் கேரவன் வேன் ஒன்றும் சென்றிருந்தது.

அப்போது கேரவன் பயன்பாட்டிற்காக ஊர் பொது மின் கம்பத்தில் இருந்து அரசின் அனுமதியின்றி மின்சாரம் கொண்டு செல்லப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இந்த விவகாரம் அதிகாரிகளுக்கு தெரிவதற்குள் தனுஷ் அங்கிருந்து கிளம்பிவிட்டதாக கூறப்படுகிறது.

இதகுறித்து ஆண்டிபட்டி மின்சார வாரியத்தின் தெற்கு மண்டல உதவி பொறியாளர் ராஜேஷ் கூறியதாவது…

“காலை 8 மணிமுதல் மாலை 3 வரை மின்சாரத்தை பயன்படுத்தி உள்ளனர். கிட்டதட்ட 7 ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, கேரவன் ஓட்டுநருக்கு ரூ.15,670 அபராதம் விதித்து, மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.” என்றார்.

Illeagal electricity taken for Dhanushs Caravan

மெர்சல் ஆடியோ விழாவில் இதான் ஹைலைட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தன் 100வது படைப்பாக மெர்சல் படத்தை உருவாக்கியுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதன் இசை வெளியீட்டு விழாவை மிகப்பிரம்மாண்டமாக வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி நடத்த உள்ளனர்.

அந்த விழாவின் போது படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களை மேடையிலேயே பாடவிருக்கிறாராம் ஏஆர். ரஹ்மான்.

நிச்சயம் இந்த விழாவின் ஹைலைட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ARRahman perform live in Mersal Audio launch

அஜித் படத்தலைப்பில் விமல்-வரலட்சுமி-நிவின்பாலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மைகாலமாக அஜித்தின் படங்கள் ஆக்ஷன் ரூட்டில் சென்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால் இவரது ஆரம்ப காலத்தில் காதல் படங்களால் ரசிகர்களை கவர்ந்தார்.

அதில் சரண் இயக்கத்தில் அஜித் நடித்த காதல் மன்னன் படமும் ஒன்று.

இந்நிலையில் புதுமுக இயக்குநர் முத்துக்குமார் இயக்கத்தில் விமல் நடிக்கும் படத்திற்கு ‘காதல் மன்னன்’ என்று பெயரிட்டுள்ளன்ர.

குற்றாலம், தென்காசி ஆகிய இடங்களில் இந்தப் படத்துக்கான ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது.

விமலின் ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார். விமலின் தந்தையாக பாண்டியராஜன் நடித்துள்ளார்.

இவர்களுடன் சாம்ஸ், ரோபோ சங்கர் உள்ளிட்ட நகைக்சுவை பட்டாளமே நடிக்கிறதாம்.

கெஸ்ட் ரோலில் நடிக்க நிவின் பாலியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறார்களாம்.

அவர் ஒப்புக் கொள்வார் எனவும் சொல்லப்படுகிறது.

Vimal Varalakshmi starring in Ajith movie title Kadhal Mannan

More Articles
Follows