தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஆனால் எதைப்பற்றியும் கவலைக் கொள்ளாமல் அவர் தன் வழியில் சென்றுக் கொண்டே இருப்பார். தற்போது மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு, சிம்புவை வைத்து அரசன் என்ற படத்தை எடுக்க பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் போட்டது.
அதற்காக சிம்புவிடம் ரூ.50 லட்சத்தை அட்வான்ஸாக கொடுத்திருந்தாம்.
ஆனால் அந்த நிறுவனத்திற்கு நடிக்க இதுநாள் வரை தேதிகள் ஒதுக்கவில்லையாம் சிம்பு.
இதனையடுத்து தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை வட்டியுடன் திருப்பி தர வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே சிம்பு பணத்தை திருப்பி தர உத்தரவாதம் அளிக்க வேண்டும், இல்லையேல் சிம்புவின் கார், செல்போன் போன்றவை ஜப்தி செய்யப்படும் என கோர்ட் எச்சரித்து, நான்கு வாரம் காலம் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சொன்னபடி சிம்பு செய்யவில்லை.
இந்த வழக்கு இன்று (அக்., 10) மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அக்., 31-ம் தேதிக்குள், பேஷன் மூவி நிறுவனத்திற்கு வட்டியுடன் ரூ.85 லட்சம் பணத்தை திருப்பி தர, சிம்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
இல்லையேல், அவரின் வீட்டு உபயோக பொருட்களை ஜப்தி செய்ய வேண்டும் என கோர்ட் எச்சரித்துள்ளது.
