‘தல-தளபதி’யை தொடர்ந்து சிம்புவின் நியூ இயர் ட்ரீட்

‘தல-தளபதி’யை தொடர்ந்து சிம்புவின் நியூ இயர் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu Yuvan2017 புத்தாண்டை முன்னிட்டு அஜித், விஜய் ஆகியோரின் படங்களை சில திரையரங்குகளில் திரையிட உள்ளனர்.

இதனால் புதிய வருடம் பிறக்கும் அன்றே தங்கள் அபிமான நடிகரின் படங்களை பார்க்க உள்ள சந்தோஷத்தில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

இவர்களைத் தொடர்ந்து தன் ரசிகர்களுக்கு நியூ இயர் அன்று விருந்து வைக்க உள்ளார் சிம்பு.

சிம்பு நடித்துள்ள “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” என்ற படத்தில் உள்ள ட்ரெண்ட் பாட்டை அன்று வெளியிட இருக்கிறார்களாம்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

நாயகிகளாக ஸ்ரேயா, தமன்னா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த 2016ஆம் ஆண்டு பிறந்த தினம் அன்று தள்ளிப்போகாதே என்ற பாடலை வெளியிட்டார் சிம்பு என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஜல்லிக்கட்டு ட்வீட்டால் ரசிகர்கள் கோபம்… ஆர்யா இது தேவையா?

ஜல்லிக்கட்டு ட்வீட்டால் ரசிகர்கள் கோபம்… ஆர்யா இது தேவையா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kadamban Aryaதமிழ் சினிமாவில் கட்டுக் கோப்பான உடலை வைத்திருக்கும் ஆர்யாவுக்கு இளம் ரசிகைகள் அதிகம்.

இவர் தற்போது கடம்பன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவருடைய ட்விட்டர் பக்கத்தில் ‘ஜல்லிக்கட்டு என்றால் என்ன?’ என கேட்டு இருந்தார்.

  • இது தெரியாமலா? தமிழ்நாட்டில் இருக்கிறாய்?
  • தமிழர்களின் வீர விளையாட்டை அசிங்கப்படுத்தி விட்டாயே.. கேரளாவுக்கு ஓடு
  • நடிகைகளுடன் டூயட் பாடும் உனக்கு ஜல்லிக்கட்டை பற்றி என்ன தெரியும்?

என்று பல கேள்விகளை சரமாரியாக கேட்டிருந்தனர்.

அதன்பின்னர் அந்த ட்வீட்டை நீக்கி விட்டார் ஆர்யா.

இந்நிலையில், ‘நான் ஜல்லிக்கட்டிற்கு எதிரானவன் இல்லை. ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன்.

ஆனால் என்னுடைய ட்வீட்டை வேறு திசைக்கு கொண்டு சென்று விட்டனர்” என தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

எதற்கு ஜல்லிக்கட்டை பற்றி பேசனும். ஆர்யா இது தேவையா? என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

Arya into trouble because of Jallikattu tweet

மனைவி, குழந்தைகளுக்காக அஜித் எடுத்த முடிவு

மனைவி, குழந்தைகளுக்காக அஜித் எடுத்த முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith familyசிவா இயக்கும் தல 57 படத்தில் நடித்துவருகிறார் அஜித்.

இதன் சூட்டிங் பல்கேரியா நாட்டில் நடந்துவருகிறது.

இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாட அஜித் சென்னை திரும்பியுள்ளார்.

அஜித்துடன் பட இயக்குனர் சிவாவும் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் ஜனவரியில் இதன் படப்பிடிப்பு இந்தியாவிலேயே துவங்கப்பட உள்ளதாம்.

இதுவரை 85% சூட்டிங் முடிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எம்ஜிஆர் நினைவுநாளுக்கும் விஜய்சேதுபதிக்கும் என்ன சம்பந்தம்?

எம்ஜிஆர் நினைவுநாளுக்கும் விஜய்சேதுபதிக்கும் என்ன சம்பந்தம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiமக்கள் திலகம் எம்ஜிஆர் மறைந்து இன்றோடு (டிசம்பர் 24) 29 வருடங்கள் ஆகிவிட்டது.

இதே போன்று விஜய்சேதுபதி நடிக்கத் தொடங்கி இன்றோடு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

ஹீரோவாக அவர் நடித்த தென்மேற்கு பருவக்காற்று இதே நாளில் கடந்த 2010ஆம் வெளியானது.

எனவே விஜய்சேதுபதி ரசிகர்கள் 6வது ஆண்டு விழாவை கொண்டாடி வருகின்றனர்.

இப்படம் சிறந்த நடிகை, சிறந்த பாடல் ஆசிரியர், சிறந்த படம் உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளை குவித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Fans celebrate 6 years of hero Vijay Sethupathi  on December 24

தமிழகத்திற்கும் தாய்லாந்திற்கும் தலைவர் தரும் விருந்து

தமிழகத்திற்கும் தாய்லாந்திற்கும் தலைவர் தரும் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajiniரஜினிக்கும் சரி ரசிகர்களுக்கும் சரி மறக்க முடியாத படம் பாட்ஷா.

இப்படத்தை எத்தனை முறை டிவியில் ஒளிப்பரப்பினாலும் அன்றைய டிஆர்பி ரேட் எகிறும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தை டிஜிட்டலுக்கு மாற்றி 5.1 ஒலி வடிவத்துடன் உருவாக்கியுள்ளனர்.

அண்மையில் இந்த ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஜனவரியில் வெளியிடவுள்ளனர்.

மேலும் ஜப்பானிய மொழி உள்ளிட்ட சில மொழிகளிலும் இதனை வெளியிட வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இவையில்லாமல் ரஜினியின் மற்றொரு சூப்பர் ஹிட்டான கபாலி படத்தை தாய் என்ற மொழியில் டப் செய்து, தாய்லாந்து நாட்டில் ஜனவரியில் ரிலீஸ் செய்யவிருக்கிறார்களாம்.

சௌந்தர்யா ரஜினி விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு

சௌந்தர்யா ரஜினி விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soundarya rajinikanthரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும் நான்கு வருடங்களுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு வேத் என்ற மகனும் உள்ளார்.

சௌந்தர்யா இருவரும் மனமுவந்து இந்தப் பிரிதலை விரும்புவதாக சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுக் கொடுத்திருப்பதாகவும் கூறப்படு கிறது.

இதற்கிடையே, அஸ்வின்- சௌந்தர்யா தம்பதியிடையே சின்ன சண்டை தான் என்றும் அதைச் சரி செய்ய ரஜினி குடும்பத்தின் நலம் விரும்பிகள் அவர்களுக்கு அறிவுரை கூறி வந்தனர்.

இருவரும் மீண்டும் இணைந்து வாழ்வார்கள் என்று நம்பப்பட்டது.

ஆனால் இருவரும் விவாகரத்து செய்வதில் உறுதியாக உள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்த இவர்களது திருமண உறவில் பிறந்த மகன் வேத்துக்கு அண்மையில் முதல் பிறந்த நாளைக் கொண்டாடினர்.

திருமணத்திற்கு பின்னர் சௌந்தர்யா தனது பெயரை சௌந்தர்யா ரஜினிகாந்த் என்றே தொடர்ந்தபோது எழுந்த சர்ச்சைக்கு ‘என்றுமே நான் ரஜினியின் மகள் என்று சொல்வதையே விரும்புகிறேன்’ என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்தார்.

சௌந்தர்யாவுக்கும் அஸ்வினுக்கும் பிரச்சினை என்று வந்த செய்திகளை இரு தரப்பும் மறுத்து வந்தனர்.

ஆனால் சில மாதங்களுக்கு முன் அவர் பகீரங்கமாக தனது நிலையை அறிவித்தார். கடந்த ஏழு மாதங்களாக, இத்தம்பதி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

சென்னை சேத்துப்பட்டில் தனியாக வசிக்கும் சௌந்தர்யா, விவாகரத்துக் கோரி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

பரஸ்பரம் பிரிவது என முடிவெடுத்த நிலையில் வழக்கு இன்று குடும்ப நல நீதிபதி மேரி டில்டா முன்பு விசாரணைக்கு வந்தது.

இருவரும் நீதிபதி முன்பு ஆஜராகி தாங்கள் பிரிவதாக கூறினர். பரஸ்பரம் தாங்கள் விவாகரத்து பெற விரும்புவதாக தெரிவித்தனர்.

இளம் தம்பதிகள் என்பதால் 6 மாதம் இந்த வழக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.

6 மாதத்தில் தம்பதிகள் மனம் மாறினால் சேர்ந்து வாழலாம், இல்லாவிட்டால் விவாகரத்து அளிக்கப்படும். குழந்தை யாரிடம் இருப்பது பராமரிப்பு குறித்தும் அப்போது முடிவு செய்யப்படும்.

More Articles
Follows