சிம்புவுடன் கைகோர்க்கும் கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயனுடன் இணைந்த ‘ரஜினி முருகன்’ சூப்பர் ஹிட்டடித்தை தொடர்ந்து டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

விஜய்யின் தளபதி 60, தனுஷின் ‘தொடரி’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ (AAA) படத்தில் சிம்புவுடன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் சிம்பு மூன்று வேடம் ஏற்பதால் இவரையும் ஒரு நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம்.

பேச்சுவார்த்தைகள் முடிந்தவுடன் அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளிவரும்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

தயாரிப்பாளராக தனுஷ் எடுத்த ‘தில்’லான முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட் முதல் பாலிவுட் வரை சென்று பிஸியாக இருக்கும் தனுஷ், அவ்வப்போது தரமான படங்களையும் தயாரித்து வருகிறார்.

எனவே தன்னுடைய படங்களின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகளுக்காக ஒரு புதிய ஸ்டூடியோவை திறந்துள்ளார்.

சென்னை, அடையாறில் அமைந்துள்ள இந்த ஸ்டூடியோ ரூ. 10 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ளது.

இவரின் படங்களின் எடிட்டிங், டப்பிங், பாடல் ரெக்கார்ட்டிங், பின்னணி இசை என அனைத்தும் தேவைக்கும் பணிகளையும் மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

இவையில்லாமல் மற்ற படங்களின் பணிகளுக்கும் இங்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிம்பு-கெளதம் மேனன் பேச்சுவார்த்தை; இனி தள்ளிப் போகாதே…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘அச்சம் என்பது மடமையடா’.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ‘ஒன்றாக என்டர்டெயின்மன்ட்’ சார்பாக கெளதம் மேனன் தயாரித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் நிலையில், திடீரென கெளதம் மேனன் – சிம்பு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் பெரும் ஹிட்டடித்த பாடலான தள்ளிப் போகாதே பாடல் இல்லாமல் படம் வெளியாகும் என செய்திகள் வந்தன.

இந்நிலையில் இருவரும் பேசி சமாதானம் ஆனதை தொடர்ந்து பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளது.

எனவே ‘தள்ளிப் போகாதே’ பாடல் படமாக்கப்பட்டு விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்க உள்ளனர்.

கபாலியால் மோகன்லாலுக்கு எத்தனை கோடி லாபம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்த கபாலிக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாக படத்தின் கேரள உரிமைக்கு பலத்த போட்டி எழுந்தது.

எனவே ரூ. 7.8 கோடி கொடுத்து மோகன்லால் இப்படத்தை வாங்கினார்.

கேரளாவில் உள்ள 400 தியேட்டர்களில் 306 தியேட்டர்களில் இப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக வெளியிட்டார்.

கபாலி வெளியாகி ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில் இதுவரை ரூ. 10.5 கோடியை வசூல் செய்து கொடுத்திருக்கிறதாம்.

மேலும் ‘ஜனதா காரேஜ்’ என்ற தெலுங்கு படத்தில் ஜுனியர் என்டிஆருடன் நடித்திருக்கும் மோகன்லால் அப்படத்தின் சம்பளத்தின் ஒரு பகுதியாக விநியோக உரிமையையும் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி, சூர்யாவை அடுத்து விஜய், அதர்வாவுடன் இணையும் ரஞ்சித்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படம் நன்றாக கல்லா கட்டி வருவதால் ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இப்படத்தின் க்ளைமாக்ஸில் அடுத்த பாகத்தின் தொடர்ச்சி இருந்த நிலையில் கபாலி 2 உருவாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனிடையில் சூர்யா நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருக்கிறார் ரஞ்சித். வடசென்னை பாக்ஸர்களை பற்றி இப்படம் தயாராகவுள்ளது.

இதற்கிடையில் தனது உதவியாளர் ஒருவர் இயக்கும் படத்தை தயாரிக்க இருக்கிறாராம் பா. ரஞ்சித்.
இதில் அதர்வா நாயகனாக நடிக்கிறார்.

இதனிடையில் விஜய்யை சந்தித்து அவரிடமும் ஒரு கதையை சொல்லியிருக்கிறார் ரஞ்சித்.

தற்போது விஜய்யின் க்ரீன் சிக்னலுக்காக அறிவிப்பு வெயிட்டிங்.

மீண்டும் ரஜினி-கமல் ரசிகர்கள் மோதல் உருவாகுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

20 வருடங்களுக்கு முன்பு ரஜினி-கமல் ரசிகர்களின் மோதல் பட்டி முதல் சிட்டி வரை பரவி இருந்தது.

சமீபகாலமாக ரஜினி-கமல் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது இல்லை என்பதால் மோதலுக்கான சூழலும் குறைந்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் அந்த சூழ்நிலை உருவாகிறதா? என்கிற அளவுக்கு சமீபத்திய ஒரு படத்தின் டீசர் இடம் பிடித்துள்ளது.

எங்கிட்ட மோதாதே படத்தில் நட்டி ரஜினி ரசிகராகவும் மற்றும் ராஜாஜி கமல் ரசிகராகவும் நடித்துள்ளனர்.

இந்த டீசரில் ரஜினி, கமலை விட அவர்களது ரசிகர்களுக்கு பவர் அதிகம் என்ற வசனங்களும் இடம்பிடித்துள்ளது.

இப்படம் பார்க்கையில் இவர்களது ரசிகர்கள் மோதிக் கொள்வார்களோ என்ற அச்சமும் கூடவே வளர்கிறது.

ராமு செல்லப்பா இயக்கியுள்ள இப்படத்தில் பார்வதி நாயர், சஞ்சிதா ஷெட்டி, ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ள இப்படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More Articles
Follows