ஒரே படத்தில் இணைந்த தனுஷ்-சிம்பு… ரசிகர்கள் உற்சாகம்!

ஒரே படத்தில் இணைந்த தனுஷ்-சிம்பு… ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and dhanushதமிழ் சினிமாவில் இரு துருவங்களாக பார்க்கப்படும் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ஒரு படத்தில் இணைந்து நடித்தனர்.

அதன்பின்னர் வந்த ரஜினி-கமல், விஜய்-அஜித், சூர்யா-விக்ரம் ஆகியோரும் படங்களில் இணைந்து நடித்தனர்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களிடையே இரு துருவங்களாக பார்க்கப்படும் சிம்பு-தனுஷ் இணைந்து நடித்தது இல்லை.

ஆனால் தற்போது இருவரும் ஒரு படத்திற்காக இணைந்துள்ளனர்.

தமன் இசையமைப்பில் உருவாகிவரும் திக்கா என்ற தெலுங்கு படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார் தனுஷ்.

இப்படத்தில் உள்ள மற்றொரு பாடலை சிம்பு பாடியிருக்கிறார்.

ஒரே படத்தில் தனுஷ் மற்றும் சிம்பு பாடியிருப்பது ரசிகர்கள் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இப்படத்தில் நாயகனாக சாய் தரம் தேஜா நடித்து வருகிறார். சுனில் ரெட்டி இயக்க, டாக்டர் ரோகின் ரெட்டி தயாரிக்கிறார்.

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது.

விக்ரம்-கௌதம் மேனன்… மீண்டும் இணைவார்களா..?

விக்ரம்-கௌதம் மேனன்… மீண்டும் இணைவார்களா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram-and-gautham-menonநான் எதிர்பாராத கூட்டணி கூட சில சமயம் அரசியலில் நடந்துவிடும்.

ஆனால் மிகவும் எதிர்பார்க்கும் கூட்டணி சினிமாவில் அமைவதில்லை.

கமல், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்டோர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்துவிட்டனர்.

ஆனால் விக்ரம் இதுவரை கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவில்லை.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் விக்ரமுக்கு கௌதம் மேனன் விருது வழங்கினார்.

அப்போது விக்ரம்முடன் பணிபுரிய ஆசை என தெரிவித்தார்.

மேடையில் இணைந்த இந்த கூட்டணி திரையில் இணைவது எப்போது என்பதை காத்திருந்து பார்ப்போம்.

அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்

அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

apj abdul kalam 1st year vishal trustமக்களின் ஜனாதிபதி என அன்போடு அழைக்கப்பட்ட ஏபிஜே அப்துல்கலாம் மறைந்து இன்றோடு முதலாம் ஆண்டு நிறைவு பெறுகிறது.

எனவே நடிகர் விஷால் அவர்களின் தேவி அறக்கட்டளை சார்பில் இன்று (27.7.2016) நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது.

இதில் தென்னிந்தியா நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் அவர்களின் மேலாளர் முருகராஜ் கலந்து கொண்டார்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்த அரவிந்த் ஃபவுன்டேஷனை சேர்ந்த மாணவ மாணவியர்களின் படிப்பிற்கு தேவையான புத்தகம், பேனா, பென்சில் மற்றும் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஆகியவற்றை வழங்கினார்.

மேலும் ஒவ்வொரு மாணவர்களிடமும் ஒரு மரக்கன்றை கொடுத்து வளர்க்கும் படி கொடுக்கப்பட்டது.

இதில் நடிகர் சௌந்தரராஜா, புரட்சி தளபதி விஷால் நற்பணி மன்ற தலைவர் ஜெய சீலன், செயலாளர் ஹரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.​

12 வயது சிறுமியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய தனுஷ்

12 வயது சிறுமியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

12 yr kotiswari familyஒரு யதார்த்த நடிகராக வலம் வரும் தனுஷை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை எனலாம்.

இந்நிலையில் இவரை தன் வாழ்வில் ஒருமுறையாவது பார்த்து விட வேண்டும் என ஒரு 12 வயது சிறுமியின் கடைசி ஆசையை நிறைவேற்றியிருக்கிறார் தனுஷ்.

அந்த சிறுமியின் பெயர் காளீஸ்வரி. ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவரின் கடைசி நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.

எனவே தன்னுடைய கடைசி ஆசையாக தனுஷை சந்திக்க விரும்பினாராம்.

அதன்படி தனுஷ் அவரை சந்தித்து அவருடன் தன் நேரத்தை செலவிட்டுள்ளார்.

கபாலியில் தேவையில்லாத சீன்ஸ் கட்… பெரும் மகிழ்ச்சி!

கபாலியில் தேவையில்லாத சீன்ஸ் கட்… பெரும் மகிழ்ச்சி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali movie stillsசினிமா ரசிகர்கள் கடந்த வெள்ளிக்கிழமையை (ஜீலை 22, 2016) கபாலி தினமாகவே கொண்டாடினர்.

எங்கும் எதிலும் கபாலி மயம்தான், எனவே, ஒரு சில தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்தன.

ஆனால் ரஜினிக்கே உரித்தான வேகம், விறுவிறுப்பு ஆகியவை கபாலியில் இல்லை என பரவலாக குறைகள் எழுந்தன.

எனவே படத்தின் விறுவிறுப்புக்கு தடையாக உள்ள சில காட்சிகளை வெட்டப்பட்டுள்ளன.

மலேசியா மாணவர்களுடன் ரஜினி உரையாடுவது, மற்றும் மனைவிக்காக ரஜினி அலைந்து தேடுவது உள்ளிட்ட சீன்களை வெட்டியுள்ளனர்.

அதாவது கிட்டதட்ட 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாம். இவை கபாலி தெலுங்கு பதிப்பில் மட்டும் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய், ஜெயம் ரவி வழியில் சூர்யா

விஜய், ஜெயம் ரவி வழியில் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor suriyaஎன்னதான் காமெடி மற்றும் பேய் படங்கள் நன்றாக கல்லா கட்டினாலும் உலகம் முழுவதும் ஆக்சன் படங்களுக்கு என்றும் மவுசு இருக்கதான் செய்கிறது.

எனவே ஒவ்வொரு ஹீரோக்களும் தங்கள் படங்களில் ஆக்சனுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

ரஜினியின் கபாலி படத்தை முடித்துவிட்டு சூர்யா நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருக்கிறார் பா.ரஞ்சித்.

இப்படத்தில் பாக்ஸராக நடிக்கவுள்ளதால் அதற்கான பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறாராம் சூர்யா.

பத்ரி படத்தில் விஜய், பூலோகம் படத்தில் ஜெயம் ரவி ஆகியோர் பாக்ஸர்களாக நடித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

More Articles
Follows