Breaking அண்டாவில் பால்; மாத்தி பேசல என சிம்பு மன்னிப்பும் விளக்கமும்

Breaking அண்டாவில் பால்; மாத்தி பேசல என சிம்பு மன்னிப்பும் விளக்கமும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu aka STR meet fans family and Apollogy on Paal Abhishegamஇரண்டு வாரத்திற்கு கட்-அவுட் வேண்டாம், பாலாபிஷேகம் வேண்டாம் என வீடியோ ஒன்றை வெளியிட்டார் சிம்பு.

அதன் பின்னர் பிளாக்கில் டிக்கெட் வாங்கி படம் பார்க்காதீர்கள், பெற்றோருக்கு டிரெஸ் எடுத்துக் கொடுங்கள் என்றார்.

சிம்புவின் பேச்சை சிலர் வரவேற்றாலும் பலர் கிண்டல் செய்தனர். உங்களுக்கு அவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களா? என கேலி செய்தனர்.

இதனால் பெரிய பெரிய கட்-அவுட் வைங்க. பேனர் வையுங்கள், பாக்கெட்டில் இல்லை அண்டா அண்டாவா பால் ஊற்றுங்கள் என்று புது வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இரண்டு செய்திகளும் நம் தளத்தில் வெளியானது.

இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம், சிம்புவுக்கு கட்-அவுட் வைத்து, தவறி விழுந்து இறந்த மதன், என்பவரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல, அவரது இல்லத்திற்கு இன்று (ஜன.,28, 2019) சென்றார் நடிகர் சிம்பு.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது…. எனது ரசிகர் இறந்ததால் மிகுந்த வேதனையில் இருந்தேன். அவன் இறந்த சமயத்தில் அப்பாவையும், நண்பர் மகத்தையும் அனுப்பி வைத்தேன்.

அந்த ரசிகன் இறந்த பாதிப்பு எனக்குள் இருந்தது. அதனால் அப்போதே எழுமின் படத்தின் இசை வெளியீட்டிலேயே, பேனர், பாலாபிஷேகம் செய்யாதீர்கள் என்று சொல்லியிருந்தேன். ஆனால் அது சரியாக மக்களிடம் போய் சேரவில்லை.

அதனால் தான் மீண்டும் ஒரு முறை பஎன் படம் ரிலீஸின் போது சொல்ல முடிவெடுத்தேன். அதன்படி பாலாபிஷேகம் செய்யாதீர்கள், பெற்றோருக்கு, புடவை, வேஷ்டி எடுத்து கொடுங்கள் என்றேன். அதுவும் சரியாக சேரவில்லை.

ஒரு விஷயத்தை நெகட்டிவ்வாக கூறினால் தான் மக்களிடம் போய் சேரும் என்று நினைத்து, மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு, பெரிய பேனர் வையுங்கள், கட்-அவுட் வையுங்கள், பாக்கெட்டில் இல்லை அண்டாவில் பாலை ஊற்றுங்கள், வேற லெவலில் செய்யுங்கள் என்று ஒரு வீடியோ வெளியிட்டேன்.

தயவு செய்து அந்த வீடியோவை திருப்பி பாருங்கள். பாக்கெட்டில் உள்ள பாலை அண்டாவில் ஊற்றுங்கள் என்று தான் சொன்னேன். எனக்கு பாலாபிஷேகம் செய்யுங்கள் என நான் சொல்லவில்லை.

நான் மாற்றி பேசும் ஆள் கிடையாது. எல்லோரையும் மாற்ற வேண்டும் என்று தான் பேசுகிறேன்.

இதுதான் உண்மை. ஒருவேளை எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டால் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்.

கட்-அவுட்டிற்கு ஊற்றுவதற்கு பதிலாக வாய் உள்ள ஜீவன்களுக்கு கொடுங்கள். மனிதர்களுக்கு, கஷ்டப்படுகிற மக்களுக்கு கொடுங்கள்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலார் சொன்னதை, மறப்பவன் நான் கிடையாது. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், எனக்கு கவலையில்லை.

நல்லதை யார் சொன்னாலும் எடுத்து கொள்ளலாம். எது எப்படி என்றாலும் உண்மை ஜெயிக்கும். எனக்கு ரசிகர்களின் அன்பு போதும், வேறு எதுவும் வேண்டாம்.” என உருக்கமாக பேசினார் சிம்பு.

Simbu aka STR meet fans family and Apollogy on Paal Abhishegam

Exclusive அன்றே சொன்னோம்.; இன்று அஜித் பட அறிவிப்பும் வந்துவிட்டது!

Exclusive அன்றே சொன்னோம்.; இன்று அஜித் பட அறிவிப்பும் வந்துவிட்டது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith team up with Vidya Balan in Thala 59 cast and crew news updatesவினோத் இயக்கவுள்ள தல 59 படத்தில் அஜித் ஜோடியாக வித்யாபாலன் நடிக்கவுள்ளார். முக்கிய வேடத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார் என்ற செய்தியை பத்து நாட்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்தோம்.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என வெளியிட்டு இருந்தோம். (Click Link)

https://www.filmistreet.com/cinema-news/vidya-balan-to-play-female-lead-in-ajiths-pink-remake/

அதன்படி இன்று அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு…

விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் குமார் நடிக்கும் அடுத்த படத்தை பே வியூ ப்ரொஜெக்ட்ஸ் எல் எல் பி என்கிற நிறுவனத்தின் சார்பில் போனி கபூர் தயாரிக்க, வினோத் குமார் இயக்க உள்ளார் என்பது அறிந்ததே.

2019 ஆம் ஆண்டின் கோடை விடுமுறையில் வெளியிட வேண்டும் என்கிற உத்வேகத்துடன் படப்பிடிப்பு குழுவினர் படத்தை துவக்க உள்ளனர்.

ஒரு படத்தின் வெற்றிக்கு அந்த படத்தின் நடிக, நடிகையர் , தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் முக்கியம் என்று கூறுகிறார் தயாரிப்பாளர் போனி கபூர்.

அவர் மேலும் கூறியதாவது…

அஜித் குமாருடனான எனது நட்பு ,அவர் மறைந்த எனது மனைவி ஸ்ரீதேவியுடன் “இங்கிலீஷ் விங்கிலிஷ்” திரைப்படத்தில் நடிக்கும் போது தொடங்கியது.

தனது தாய் மொழியான தமிழில் ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்றும் அதில் அஜித் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்கிற தனது விருப்பத்தை அவர் எதேச்சையாக அஜித் குமாரிடம் கூறி உள்ளார்.

நிச்சயமாக என்று கூறிய அஜித் சொன்னவாறே எங்களை தமிழில் படம் தயாரிக்க அழைத்தார். ஸ்ரீதேவி உயிரோடு இருந்த போதே நாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு , தற்போது உள்ள சூழ்நிலையில் சமூகத்துக்கு தேவையான படத்தை வழங்க வேண்டும் என்று முடிவெடுத்தோம்.

நாங்கள் தேர்ந்து எடுத்த கதையின் கருத்து மீது ஸ்ரீதேவி மிகுந்த நம்பிக்கை வைத்து இருந்தார். அவருடைய கனவை நனவு ஆக்கும் சீரிய முயற்சியில் படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் ஒன்று இணைந்து இருப்பது என்னை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது.

அஜித் குமாருடனான தொழில் முறையான எங்கள் உறவு இந்த படத்துடன் நில்லாமல் , ஜூலை 2019 இல் துவங்கி ஏப்ரல் 2020 இல் வெளியிட திட்டமிட்டு இருக்கும் எங்களது நிறுவனத்தின் மற்றொரு படத்தின் மூலமும் தொடர இருக்கிறது.

நான் சினிமாவை விரும்பி பார்ப்பவன் என்கிற முறையில் ஒரு படத்தை பார்ப்பதற்கு முன் அந்த படத்தின் போஸ்டர் வாயிலாக அந்த படத்தின் நடிக, நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் யார் என்பதை உன்னிப்பாக கவனித்தே முடிவு எடுப்பேன்.

அந்த வகையில் என் படத்துக்கு வரும் ரசிகர்களும் நம்பிக்கையோடு வர திறமையான team வேண்டும் என்று விரும்பினேன். அவ்வாறே அமைந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி. இயக்குநர் வினோத் அவருடைய முந்தைய படங்களின் முலம் தனது பன்முக திறமையை காட்டி விட்டார்.

அவருடைய தொழில் பக்தியும், எண்ணத்தில் இருப்பதை திரையில் கொண்டு வர எடுக்கும் சிரத்தையும் மிக மிக பாராட்டுக்குரியது. கதை என்ன பின்னனியில் அமைந்தாலும் இசை அந்த பின்னணிக்கு வலு சேர்க்கும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவன்.

அந்த வகையில் என்னை மிகவும் ஈர்த்த இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

தனது நடிப்பு திறமையால் நாடெங்கும் எண்ணற்ற ரசிகர்களை கொண்ட வித்யா பாலன் இந்த படம் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகிறார்.

அஜித் குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும். வளர்ந்து வரும் நடிகைகளில் திறமையான ஒருவர் என்று கணிக்க படும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் படத்தின் மைய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தனது திறமையான வாதிடும் திறமையால் எல்லோரையும் கவர்ந்த ரங்கராஜ் பாண்டே இந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் நடிகராக அறிமுகமாகிறார்.

இவர்களுடன் அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியாங், மற்றும் பலர் நடிக்க உள்ளனர்.

இன்னமும் தலைப்பிட படாத இந்த படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவாளர் -நீரவ் ஷா.
கலை இயக்குநர்- கே கதிர்.
சண்டை பயிற்சி- திலிப் சுப்புராயன்.
படத்தொகுப்பு. கோகுல் சந்திரன்.
நிர்வாக தயாரிப்பு- பி ஜெயராஜ்.
ஆடை வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி.

Ajith starrer Thala 59 cast and crew news updates

ரூ 11 கோடி செலவில் 100 நாட்கள் படமாக்கப்பட்ட சண்டைக் காட்சி

ரூ 11 கோடி செலவில் 100 நாட்கள் படமாக்கப்பட்ட சண்டைக் காட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ram Charans Vinaya Vidheya Rama climax fight budget Rs 11 crores தெலுங்கு சூப்பர் ஹீரோ ராம் சரண் கதா நாயகனாக நடிக்கும், மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட படமான “வினயை விதேயா ராமா” தமிழ், மலையாளம் மொழிகளில் வெளியாகிறது.

பிரபல தெலுங்கு இயக்குனர் போயப்பட்டி சீனு இப்படத்தை இயக்குகி உள்ளார்.

‘பாரத் என்னும் நான்’ என்ற படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனதை கவர்ந்த கியாரா அத்வானி கதாநாயகியாகவும் விவேக் ஓபராய் வில்லனாகவும் நடிக்கிறார்கள்.

மேலும் பிரசாந்த்,சினேகா, மதுமிதா,முகேஷ் ரிஷி,ஜெபி,ஹரீஷ் உத்தமன், ஆர்யன் ராஜேஷ், ரவி வர்மன் என்று பெரிய நட்சத்திர வரிசை மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

குடும்ப பின்னணியில் காதல், கலகலப்பு,அரசியல்,செண்டிமெண்ட்,வன்முறை, சாஹசம், என்று பொழுது போக்கு அம்சங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த பிரம்மாண்ட படமாக “வினயை விதேயா ராமா” உருவாகியுள்ளது.

தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்க ரிஷி பஞ்சாபி, ஆர்தர் A வில்சன் ஆகியோர் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளனர்.இப்படத்தின் பாடல் காட்சிகள் பிரம்மாண்ட அரங்குகளில் படமாக்கப்பட்டுள்ளது.

பதினோரு கோடி ரூபாய் செலவில் 100 நாட்கள் கிளைமாக்ஸ் சண்டை காட்சி மட்டும் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர் .கனல் கண்ணன் சண்டை பயிற்சி அளித்துள்ளார்.

வசனம் T.கிருஷ்ணமூர்த்தி,
பாடல்கள்சுகுமார் கணேசன் .

தெலுங்கில் விமர்சனங்களை கடந்து ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிபெற்ற , DDV என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரித்து பிரகாஷ் பிலிம்ஸ் வழங்கும் “வினயை விதேயா ராமா”பிப்ரவரி 1 முதல் தமிழ் நாடு மற்றும் கேரளமெங்கும் வெளியாகிறது.

Ram Charans Vinaya Vidheya Rama climax fight budget Rs 11 crores

ரவுடி பேபி பாடலால் இணையத்தில் இசை ராஜ்யம் நடத்தும் யுவன்

ரவுடி பேபி பாடலால் இணையத்தில் இசை ராஜ்யம் நடத்தும் யுவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Yuvan Shankar Rajas Rowdy Baby song making records in You Tubeயுவன் ஷங்கர் ராஜா எப்போதும் “வைரல் ஹிட்ஸ்” கொடுக்கும் இசை ஐகானாக தன்னை அடிக்கடி நிரூபித்து வந்திருக்கிறார்.

2018 ஆம் ஆண்டில் அடுத்தடுத்து ஹிட் பாடல்களை (ராஜா ரங்குஸ்கி, பேரன்பு, சண்டக்கோழி 2 மற்றும் பியார் பிரேமா காதல்) வழங்கிய யுவன், ஆண்டின் இறுதியில் ‘மாரி 2’ படத்தின் மூலம் இசை ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தை அளித்திருக்கிறார் இவர்.

குறிப்பாக ‘ரௌடி பேபி’ கடந்த ஆண்டில் தமிழ் சினிமாவின் பெரிய படத்தின் பிரமாண்ட பாடலாக மட்டுமல்லாமல், யூடியூபில் மிகவும் குறுகிய காலத்தில் (2 வாரம்) 100 மில்லியன் பார்வைகளை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறது.

தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜாவின் எனர்ஜி ததும்பும் இசையில் ரௌடி பேபி’ பாடலானது, கேட்போரையும், பார்ப்போரையும் ஒரே நாளில் மயக்கியிருக்கிறது.

யூடியூபில் தமிழ் பாடல்களில் நம்பர் 1 இடத்தை பிடித்ததன் மூலம் உலகளாவிய மேடையில் தமிழ் இசையை மீண்டும் உலக அளவில் கவனிக்க வைத்திருக்கிறது.

ஒரு தமிழ் பாடல் முதன்முறையாக வீடியோ பாடல் பட்டியலில் நம்பர் 1 இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மாரி 2 வெறும் 3 பாடல்களை கொண்ட யுவன் ஷங்கர் ராஜாவின் ஒரு அரிய ஆல்பம் என்பதும், அந்த 3 பாடல்களுமே வைரல் வெற்றியை பெற்றுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

‘கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் மற்றும் கேட்க விரும்பும் இசை ஆல்பம்’ என ஒவ்வொருவரின் விருப்ப பட்டியலிலும் உள்ள படங்களை பார்க்கும்போது, யுவன் ஷங்கர் ராஜாவுக்கு 2019 ஆண்டு ஒரு இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் மிகவும் சிறப்பான ஆண்டாக இருக்கும் என்று தெரிகிறது.

கழுகு 2, கண்ணே கலைமானே, சூப்பர் டீலக்ஸ், விஜய் சேதுபதி – சீனு ராமசாமி படம், சிவகார்த்திகேயன் – பி எஸ் மித்ரன் படம், STR – வெங்கட் பிரபுவின் மாநாடு, அஜித்குமாரின் பெயரிடப்படாத பிங்க் ரீமேக் படம், குருதி ஆட்டம், ஆலிஸ் மற்றும் சில திரைப்படங்கள் அவரது பட்டியலில் உள்ளன. ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸின் சார்பில் ஒரு தயாரிப்பாளராக விஜய் சேதுபதி – சீனு ராமசாமி திரைப்படம், ஆலிஸ் மற்றும் பல்வேறு நிலைகளில் உருவாகி வரும் சில படங்களை தயாரித்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா.

Yuvan Shankar Rajas Rowdy Baby song making records in You Tube

ஐப்ரோ அழகி பிரியா வாரியரின் படத்தை வெளியிடும் கலைப்புலி தாணு

ஐப்ரோ அழகி பிரியா வாரியரின் படத்தை வெளியிடும் கலைப்புலி தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kalaippuli S Thanu bagged theatrical rights of Oru Adaar Love Tamilஇணையத்தளத்தில் ஹாட் சென்சேஷனாக பேசப்பட்டு வரும் பிரியா பிரகாஷ் வாரியரின் திரைப்படமான ’ஒரு அடார் லவ்’ – தமிழ் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஒரு ஸ்டார் ஹோட்டலில் நடந்தது.

இயக்குனர் ஓமர் லுலு தற்போது பள்ளி பருவ காதலை முன்வைத்து ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் இருந்து ’மாணிக்க மலராய்’ என்ற பாடலும், படத்தின் டீசரும் வெளியாகி இணையத்தில் வைரலானது. பாடலின் மெட்டை விட, அந்த பாடல் காட்சியில் இடம்பெற்ற பிரியா பிரகாஷ் வாரியர், இளைஞர்கள் இணைய வைரல் அழகியானர்.

குறிப்பாக அவரின் ரியாக்‌ஷன்கள் மட்டும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் பல வெர்ஷனில் ஸ்டேட்சாக மாறியது.

’ஒரு அடார் லவ்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை கண்ட படக்குழுவினர் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் படத்தை உருவாக்கியுள்ளனர்.

கலைப்புலி எஸ் தாணு அவர்களின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ’ஒரு அடார் லவ்’ திரைப்படம் உலகம் முழுவதும் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று வெளியாகிறது.

Kalaippuli S Thanu bagged theatrical rights of Oru Adaar Love Tamil

V Creations
Kalaippuli S Thanu
Presents

Oru Adaar Love – Tamil

Starring
Priya Prakash Varrier
Noorin Sherif
Aneesh Menon
Roshan Abdul Rahoof
Yami Sona
Michelle Ann Daniel
Pradeep Kottayam
Siyadh Shajahan

Technicians
Story & Direction – Omar Lulu
Screen Play & Dialogue – Sarang Jayaprakash, Lijo Panadan
Music Director – Shaan Rahman
Cinematography – Sinu Siddarth
Editor – Achu Vijayan
Art Director – Jospeh Nellikkal

ஊழலுக்கு எதிராக ‘செருப்படி வைத்தியம்’ கொடுக்கும் மலை மன்னன்

ஊழலுக்கு எதிராக ‘செருப்படி வைத்தியம்’ கொடுக்கும் மலை மன்னன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Serupadi Vaithiyam short film slams Corruptionஊழலுக்கு எதிரான ஒரு குறும்படமாக “செருப்படி வைத்தியம்’ உருவாகியுள்ளது ஒரு குறும்படம்.

இக்குறும்படத்தை இயக்கியுள்ளவர் மலைமன்னன். ஒளிப்பதிவு சுபாஷ் அலெக்சாண்டர் . இவர் வேல்ராஜின் உதவியாளர்.

இசை ஜெய K தாஸ் இவர் ஏற்கெனவே 3 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளவர்.

இக்குறும்படத்தில் திரை அனுபவம் பெற்றுள்ள நடிகர்கள் கலை, தயாளன் , ருத்ரன், ஐபா ஜே ஆகியோருடன் இயக்குனரும் நடித்துள்ளார்

படம் பற்றி இயக்குனர் மலைமன்னன் பேசும் போது…

“நாட்டில் நிகழும் ஊழல்களையும் ஒவ்வொரு ஊழலைச் செய்தவர்கள் விடுதலையாகி வெளிவருவதையும் பார்த்த ஒரு சராசரிக் குடிமகனின் சீற்றமாக இப்படம் இருக்கும்.

தெரியாமல் தவறு செய்பவர்களுக்குத் தண்டனை தரலாம். இப்படித் தெரிந்தே ஊழல் தவறுகள் செய்பவர்களுக்குச் செருப்படி கொடுத்து அவர்களின் தன்மானத்தைக் குலைத்தால்தான் மீண்டும் ஊழல் செய்யப் பயம் வரும் என்று போகிறது கதை.

இந்த இயக்குநர் மலைமன்னன் என்பவர் ஏற்கெனவே 4 குறும்படங்கள் இயக்கி் நான்கையும் ஒரே சமயத்தில் ஏ.வி.எம் பிரிவியூ தியேட்டரில் பிரிவியூ செய்தவர்.

“ஆரம்பமே அட்டகாசம் “படத்தில் பாடல்களை எழுதியவர் .இக்குறும்பட முயற்சி ஊழலுக்கு எதிரானது. ஊழல் ஒரு பாவச் செயல் ;ஊழல் ஒரு பெருங்குற்றம்; ஊழல் ஒரு மனிதத் தன்மையற்ற செயல் என்று பொட்டில் அடித்தாற் போல சொல்கிறது இக் குறும்படம்.

15 நிமிடம் ஓடக்கூடிய இப்படம் பார்ப்பவருக்குள் பலமணிநேரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் இயக்குநர் மலைமன்னன். இப்படத்தை ப்ரண்ட்ஸ் ஆப் ப்ரண்ட்ஸ் மற்றும் மரா கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

Serupadi Vaithiyam short film slams Corruption

More Articles
Follows