‘வெந்து தணிந்தது காடு’ படத்தை பார்த்தா பித்து பிடிச்சு போய்டூவீங்க.. – சித்தி இதானி

‘வெந்து தணிந்தது காடு’ படத்தை பார்த்தா பித்து பிடிச்சு போய்டூவீங்க.. – சித்தி இதானி

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமலஹாசன் கலந்துக் கொண்டுள்ளார்.

இப்படத்தின் நாயகி சித்தி இதானி மேடையில் பேசியபோது…

“இந்தப் படத்திற்காக நடிகர் சிம்பு 200% உழைப்பை கொடுத்துள்ளார்.

இந்த படத்தை பார்த்த பிறகு ரசிகர்கள் பித்து (பைத்தியம்) பிடித்துப் போவார்கள்.” என்றார்.

அவர் இந்த பேச்சைக் கேட்டவுடன் சிம்பு ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் கரவொலி எழுப்பினர்.

#VTKAudioLaunch

Siddhi Idnani says All of you may go mad after watching Vendhu Thanindhathu Kaadu

JUST IN எனக்காக இல்லனாலும் என் ரசிகர்களுக்காக செய்வேன்.; RJ பாலாஜியிடம் சிம்பு வாக்குறுதி

JUST IN எனக்காக இல்லனாலும் என் ரசிகர்களுக்காக செய்வேன்.; RJ பாலாஜியிடம் சிம்பு வாக்குறுதி

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமலஹாசன் கலந்துக் கொண்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சிலம்பரசன் மற்றும் தயாரிப்பாளர் ஐ சரி கணேசன் ஆகியோர் விழா நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கினர்

ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை ஐசரி கணேசன் தயாரித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை வெளியிடுகிறார்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆர் ஜே பாலாஜி பேசும்போது…

சில வருடங்களுக்கு முன்பு நான் சிம்புவிடம் பேசிக் கொண்டிருந்தபோது….

” நீங்கள் நிறைய படங்கள் செய்ய வேண்டும் என்று கூறினேன். சிம்பு பதில் அளிக்கும் போது.. ‘கண்டிப்பாக எனக்காக இல்லனாலும் என் ரசிகர்களுக்காக செய்வேன்'” என தெரிவித்தார்.

இவ்வாறு ஆர்ஜே பாலாஜி மேடையில் பேசினார்.

RJ Balaji talks about Simbu and his fans in VTK Audio Launch

பாலிவுட் பறக்கும் பேபி.; மானஸ்வி கொட்டாச்சிக்கு ‘மாமனிதன்’ தந்த வாய்ப்பு

பாலிவுட் பறக்கும் பேபி.; மானஸ்வி கொட்டாச்சிக்கு ‘மாமனிதன்’ தந்த வாய்ப்பு

மறைந்த நடிகர் விவேக் உடன் நிறைய படங்களில நடித்தவர் காமெடி நடிகர் கொட்டாச்சி.

இவரின் மகள் மானஷ்ஸ்ரீ தற்போது குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து வருகிறார்.

நயன்தாராவுடன் :இமைக்கா நொடிகள்’ – ரஜினியுடன் ‘தர்பார்’ – விஜய்சேதுபதியுடன் ‘மாமனிதன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போதும் இவரது கைவசம் பத்து தல, சதுரங்க வேட்டை 2.. கும்கி 2.. உள்ளிட்ட நிறைய படங்கள் உள்ளன. நிறைய டிவி விளம்பரங்களிலும் இவரை காணலாம்.

இந்த நிலையில் இவருக்கு தற்போது ஹிந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.

இது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது…

#மாமனிதன்
டெல்லி சர்வதேச திரைப்படவிழா
திரையிடல் காரணமாக
படத்தில் சிறப்பாக நடித்த
பேபி #மானஸ்வி -க்கு
ஹிந்திப் படத்தில் உடனே
நடிக்க அழைப்பு வந்தது,மகிழ்ச்சி.

வாழ்த்துக்கள்
💐

@Actor_Kottachi @Kottachi4 #Manasvi

#maamanithan @VijaySethuOffl
@ahatamil
@onlynikil @Riyaz_Ctc https://t.co/LMNRjULdxr

மானஷ்ஸ்ரீ

Child Artist Manashvi will debut in Bollywood movie

ரோப் இல்லாமல் டூப் இல்லாமல் பறந்த ராஜநாயகம்.; கிர்ர்ர்ர்ரான கிஷோர்

ரோப் இல்லாமல் டூப் இல்லாமல் பறந்த ராஜநாயகம்.; கிர்ர்ர்ர்ரான கிஷோர்

வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில், விமலா ராஜநாயகம் தயாரிக்கும் ‘மஞ்சக்குருவி’ படத்திற்காக செங்கல் சூளையில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது.

அப்பொழுது, ரோப் இல்லாமல் டூப் இல்லாமல் தன்னுடன் ஒரு நடிகர் மோதுவதை பார்த்த நடிகர் கிஷோர், ஆச்சரியத்தில் ஆழ்ந்து, இயக்குனர் அரங்கன் சின்னதம்பியிடம் விசாரிக்கும் போதுதான், அந்த நடிகர் ராஜநாயகம் குங்ஃபூ மாஸ்டர் என்பதும், இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குங்ஃபூ கலைஞர்களை உருவாக்கியவர் என்றும் தெரியவந்தது.

ராஜநாயகம்

உடனே ராஜநாயகத்தை கட்டிப்பிடித்து பாராட்டினார் கிஷோர்.

கிஷோர் கதையின் நாயகனாக நடிக்க, புதுமுகம் விஷ்வா, நீரஜா நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், கோலி சோடா பாண்டி, பருத்திவீரன் சுஜாதா, செந்தி போன்றவர்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தில், அகில இந்திய குங்ஃபூ தலைமை பயிற்சியாளர் மாஸ்டர் ராஜநாயகம் வில்லனாக நடித்துள்ளார்.

ராஜநாயகம்

வேல் ஒளிப்பதிவில், ராஜா முகமது எடிட்டிங் செய்ய, கே.எம்.நந்தகுமார் கலையை கவனிக்க, மிரட்டல் செல்வா சண்டைப் பயிற்சி அளித்துள்ளார்.

சௌந்தர்யன் இசையமைத்திருக்கும் “மஞ்சக்குருவி” படத்தை, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, அரங்கன் சின்னதம்பி இயக்கியுள்ளார்.

ராஜநாயகம்

Manjakuruvi movie shooting spot updates

இனி அரசு பள்ளிகளில் சினிமா பார்க்கலாம் : மாணவர்களுடன் மிங்கிளானார் மிஷ்கின்

இனி அரசு பள்ளிகளில் சினிமா பார்க்கலாம் : மாணவர்களுடன் மிங்கிளானார் மிஷ்கின்

தமிழக அரசின் சமீபத்திய முன்னெடுப்பு ‘அரசு பள்ளிகளில் மாதம் ஒரு திரைப்படம்’. அதன்படி முதலாவதாக சாப்ளினின் The Kid திரையிடப்பட்டது.

இந்த செப்டம்பர் மாதத்திற்கான படம் Children of Heaven.

நேற்று (செப்டம்பர் 1) இயக்குனர் மிஷ்கின் வாலாஜாபாத் அரசு பெண்கள் பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் அப்படத்தைப் பார்த்து பின்பு பேசினார்.

மிஷ்கின்

மிஷ்கினிடம் குழந்தைகள் மாணவர்கள் கேள்விகள் கேட்க, நீண்ட கலந்துரையாடல் நடந்தது.

உரையாடலின் இடையில் ஆரம்பித்தது மழை.

தொடர்ந்து ஓயாமல் மழை பெய்தது.

“இந்த உன்னதமான படத்தைப் பார்த்த மாணவர்கள் நீங்கள் அனைவரும் சொர்க்கத்தின் குழந்தைகள் தான்” என்று உரையை முடித்தார் இயக்குனர் நடிகருமான மிஷ்கின்.

மிஷ்கின்

TN Govt announces Students can watch cinema in School

BREAKING எந்திரன் சர்க்கார் பொன்னியின் செல்வன் பட பாடகர் பாம்பா பாக்யா மரணம்.; அவரது வாழ்க்கை குறிப்பு..

BREAKING எந்திரன் சர்க்கார் பொன்னியின் செல்வன் பட பாடகர் பாம்பா பாக்யா மரணம்.; அவரது வாழ்க்கை குறிப்பு..

பிரபல பின்னணி பாடகர் பாம்பா பாக்யா திடீர் மரணம். இவருக்கு வயது 49.

ஏஆர். ரஹ்மான் வீட்டு டிரைவர் இல்ல திருமண விழாவில் பாக்யராஜ் ஒரு மேடை கச்சேரியில்… “மயிலிறகே மயிலிறகே…” என்ற பாடலை பாடியுள்ளார்.

அந்த விழாவுக்கு வந்திருந்த ரகுமான் இவரது பாடலை கேட்டு பாக்யராஜை சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

‘இராவணன்’ படத்தில் கெடாகறி என்ற பாடலை முதன்முறையாக இவர் பாடினார்.

இவருக்கு பாம்பா என்ற பெயரிட்டவரும் ரஹ்மான்தான். தென் ஆப்பிரிக்காவில் பிரபலமான பாடகர் ஒருவரின் ஒருவரால் கவரப்பட்ட ரகுமான் அவருக்கு இந்த பெயரை சூட்டினாராம்.

பாம்பா பாக்யாவின் இயற்பெயர் பாக்கியராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சினிமாவில் பாடுவதற்கு முன்பு பல மேடை கச்சேரிகளில் பாடியிருக்கிறார்.

முக்கியமாக தேனிசைத் தென்றல் தேவாவின் இசை கச்சேரியில் இவர் முக்கிய நபராக இடம் பெற்றிருந்தார். அதன் பின்னர் விஜய் ஆண்டனி ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டவர்களும் கச்சேரிகளிலும் இவர் பாடியிருக்கிறார்.

இவர் தலைப்பாகை அணிந்தபடி தான் சமீப காலமாக காணப்பட்டார். அதற்கு முக்கிய காரணம் ஏ ஆர் ரகுமான் தான்.

அவர் சொன்னதன் பெயரில் தான் இந்த தோற்றத்தில் அவர் காட்சியளித்து வந்தார்.

சந்தோஷம் தயாநிதி இசையமைத்த ராட்டி என்ற ஆல்பத்தில் “ஏண்டி உன்ன பார்த்தேன்னு நினைக்க வைக்கிறியே…” என்ற பாடல் மிக பிரபலம் ஆனது.

ரஜினி நடித்த எந்திரன் படத்தில்.. “இவன் பேர் சொல்லும்… எந்திரா எந்திரா..” என்ற பாடலை இவர் பாடியிருக்கிறார்.

அதனை தொடர்ந்து ஷங்கர் இயக்கிய 2.0 படத்தில் “புள்ளினங்காள்…” என்ற பாடலையும் இவர் பாடியிருக்கிறார்.

விஜய்யின் ‘சர்க்கார்’ படத்தில் இடம்பெற்ற “சிம்டங்காரன்….” பாடலையும் பாடியவர் இவரே. பிகில் படத்திலும் பாடியிருக்கிறார்.

விரைவில் வெளியாக உள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இடம்பெற்ற ‘பொன்னி நதி…..’ என தொடங்கும் பாடல் ஆரம்ப வரிகளை இவர் பாடியிருக்கிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Play back Singer Bamba Bakya is no more

RIP singer #BambaBakya .. He is known for his beautiful and unique voice.

Raati, Pullinangal, Simtaangatan and the starting bit of Ponni Nadhi will always be special!

More Articles
Follows