ரஜினி விலகியதால் படையெடுக்கும் சிபிராஜ்-சிவா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்து, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் கபாலி வருகிற ஜூலை 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

எனவே இப்படத்தின் வருகையால் பல படங்கள் தள்ளி வைக்கப்பட்டன.

ஆனால் தற்போது கபாலி தள்ளிப் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளதால், மற்ற படங்கள் வரிசைக் கட்ட ஆரம்பித்து விட்டன.

எனவே அன்றைய தினத்தில் ‘ஜாக்சன் துரை’ படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பர்மா’ படத்தை தொடர்ந்து தரணிதரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சத்யராஜ், சிபிராஜ், பிந்துமாதவி, கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சென்சாரில் ‘U/A’ சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இதனைத் தொடர்ந்து திரைவண்ணன் இயக்கியுள்ள ‘அட்ரா மச்சான் விசிலு’ என்ற படமும் ஜூலை-1ல் ரிலீஸ் ஆகிறது.

மிர்ச்சி சிவா, பவர் ஸ்டார் சீனிவாசன், நைனா சர்வார், சென்ட்ராயன், அருண் பாலாஜி, சிங்கமுத்து, மன்சூர் அலிகான், டிபி.கஜேந்திரன், மதுமிதா, ராஜ்கபூர், செல்வபாரதி உட்பட பலர் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

அஜித் சொன்னப்படி காகித கப்பலில் சிவபாலன் அறிமுகம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிறு சிறு கேரக்டர்களில் நடித்தாலும் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் அப்புக்குட்டி.

‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் நாயகனாக நடித்து சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றவர் இவர்.

இதனிடையில் வேதாளம் படத்தின் படப்பிடிப்பின் போது அஜித் இவரது கெட்டப்பை மாற்றி நிறைய புகைப்படங்களை எடுத்தார்.

அப்போது அப்புக்குட்டியின் நிஜப்பெயரான சிவபாலன் என்ற பெயரிலேயே நடிக்க சொன்னார் அஜித்.

அதன்படி தற்போது ‘காகித கப்பல்’ என்ற படத்தில் சிவபாலன் என்ற பெயரில் ஹீரோவாக நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக தில்லிஜா என்பவர் நடிக்கிறார்.

இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன், பரோட்டா முருகேசன், எலி ராஜன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

பிரசன்னா இசையமைக்க, வெங்கட் ஒளிப்பதிவு செய்கிறார்.

எஸ்.சிவராமன் இயக்குகும் இப்படத்தை எவர்கிரீன் மூவி இண்டர்நேஷனல் சார்பில் வி.ஏ.துரை தயாரிக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் கூறியதாவது…

“குப்பை பொறுக்கிற வேலையாக இருந்தாலும், அதை மக்களுக்கு செய்யும் சேவையாகவும் நினைக்கிறான் நாயகன்.

இவரது நல்ல குணத்தை அறிந்த நாயகி இவரையே காதலித்து மணந்து கொள்கிறாள்.

ஆனால் திருமணத்துக்கு பிறகு நாயகிக்கு ஏற்பட்ட ஆசையால் நாயகனின் வாழ்க்கை காகித கப்பலாக மாறுகிறது. அது எப்படி? என்பதை சுவாரஸ்யமாக கூறியிருக்கிறோம்” என்றார்

 

‘நல்லதையே எங்கள் பெற்றோர் செய்து காட்டினார்கள்’ – கார்த்தி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ப்ளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை பாராட்டி தனது அறக்கட்டளை மூலம் கவுரவித்து வருகிறார் சிவகுமார்.

1979 முதல் அதாவது கடந்த 36 வருடங்களாக இந்த சேவையை இவர் செய்து வருகிறார்.

தற்போது சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷன் இப்பணியை தொடர்ந்து செய்து வருகிறது.

இந்நிலையில் இந்தாண்டிற்கான ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 37-ஆம் ஆண்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் 20 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் கார்த்தி தொடக்க உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது….

“இதை எங்கள் குடும்ப விழா என்றே சொல்வேன். எங்கள் அப்பாவும் அம்மாவும் அட்வைஸ் மட்டும் செய்யாமல் நல்ல காரியங்களில் ஈடுப்படுவதை எங்கள் கண் முன்னே செய்து காட்டினார்கள்.

நன்றாக படிக்கும் மாணவர்கள் அவர்களின் படிப்பை சமூகத்திற்கு பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று பேசினார்.

‘கபாலி’ இசையை ‘சிவாஜி’ முன்னிலையில் கொண்டாடிய ரசிகர்கள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கபாலி’ படத்தின் பாடல்கள் நேற்று முன்தினம் வெளியானது.

எனவே இதனை கொண்டாடும் வகையில் சென்னையிலுள்ள உட்லண்ட்ஸ் தியேட்டரில் நேற்று திருவிழா களை கட்டியது.

பாலாபிஷேகம், கையில் கற்பூரம் ஏந்தி ஆரத்தி, 1008 தேங்காய்கள் உடைத்தல் என ஆர்ப்பாட்டத்திற்கு பஞ்சம் இல்லை.

மேலும் இவ்விழாவில் ரஜினி ரசிகர் ஒருவர் கபாலி கெட்டப்பில் வந்திருந்தார். அவரை ஜீனியர் கபாலி என்றே அனைவரும் அழைத்தனர்.

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘சிவாஜி’ படம் திரையிடப்பட்டது. படம் தொடங்குவதற்கும் முன்பும், இடைவேளையிலும் ‘கபாலி’ படத்தின் டீசர் திரை யிடப்பட்டது.

சைதாப்பேட்டை ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த கொண்டாட்டத்தில் அனைத்து ரசிகர் மன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இனிமே கட் கிடையாது… சென்சாரின் கையை கட்டிப் போட்ட கோர்ட்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு திரைப்படத்தின் தரத்தை சென்சார் வழங்கும் சான்றிதழை வைத்து கணிக்க முடியும்.

இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மத்திய அரசு அதிகாரியும், மத்திய அரசால் நியமிக்கப்படும் பிரநிதிகளும் சென்சார் குழுவில் இருப்பார்கள்.

மேலும் சர்ட்டிபிகேட் கொடுப்பதற்காக படங்களின் நிறைய காட்சிகளை வெட்டி எறிவார்கள்.

இந்நிலையில், ‘உட்தா பஞ்சாப்’ என்ற இந்திப் படம் சென்சாருக்கு சென்றபோது கிட்டதட்ட 90 காட்சிகளை குழுவினர் வெட்டி எறிந்தனர்.

எனவே இதனை எதிர்த்து, இந்தி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து, மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனையடுத்து… “சென்சார் இனி சர்ட்டிபிகேட் மட்டுமே வழங்க வேண்டும் காட்சிகளை கட் செய்ய அவர்களுக்கு அதிகாரம் இல்லை” என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து… சென்சார் போர்டு வாரிய சீரமைப்பு குழு உறுப்பினர் கவுதம் கோஷ் கூறியுள்ளதாவது…

“படத்தின் காட்சிகளை வெட்டாமல் இனி சர்ட்டிபிகேட் கொடுக்கப்படும்.

தற்போது ‘யூ’, ‘ஏ’, ‘யூஏ’ என 3 வகையான சர்ட்டிபிகேட் உள்ளது. இனி கூடுதல் வகையான சர்ட்டிபிகேட் வழங்கப்படும்.” என்றார்.

ரஜினி சொன்னதை செயலில் காட்டும் விக்ரம் பிரபு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் பிரபு நடிப்பில் வளர்ந்துள்ள வாகா படம் விரைவில் வெளியாகவுள்ளது.

ராணுவ வீரரின் கேரக்டரை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை குமாரவேலன் இயக்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில், ‘வீர சிவாஜி’ படமும் இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது.

இதனையடுத்து, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், ‘முடிசூடா மன்னன்’ படத்தில் நடித்து வருகிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் மஞ்சிமா மோகன் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளில் 10 படங்களை நெருங்கியது குறித்து கேட்டதற்கு….

“செலக்ட்டிவ்வாக வருஷத்துக்கு ஒரு படம்னு பண்ணாதீங்க. இதுதான் சரியான வயசு, நேரம் எல்லாம்.

எனவே வருஷத்துக்கு ரெண்டு, மூணு படங்கள் பண்ணுங்கன்னு ரஜினி சார் சொன்னார். அவர் சொன்னப்படி செய்து வருகிறேன்.” என்றார்.

More Articles
Follows