ஆர் யூ ரெடி..?.. மறுக்கப்படும் விஷயங்களை நேரலையில் விவாதிக்க வருகிறார் ஸ்ருதிஹாசன்

ஆர் யூ ரெடி..?.. மறுக்கப்படும் விஷயங்களை நேரலையில் விவாதிக்க வருகிறார் ஸ்ருதிஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய திரைத்துறையின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஸ்ருதி ஹாசன் தனது பிறந்தநாளை வரும் ஜனவரி 28 ஆம் தேதி கொண்டாடவுள்ளார், அவரது பிறந்தநாளை ஒட்டி, இந்த மாதம் முழுவதுமே அவரது ரசிகர்கள் கொண்டாட ஆரம்பிக்க, ஸ்ருதிஹாசனின் சமூக வலைத்தள பக்கத்தை, தொடர்ந்து பல நாட்களாக அழைப்புகள் மற்றும் வாழ்த்து குறுஞ்செய்திகளால் ரசிகர்கள் மூழ்கடித்துவிட்டனர்.

அனைத்து ரசிகர்களின் பொங்கி வழியும் அன்பில் மூழ்கிதிளைக்கும் நடிகை ஸ்ருதிஹாசன், ஒவ்வொரு ரசிகருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க முயன்று வருகிறார்.

மேலும் இந்த ஆண்டு, ஸ்ருதிஹாசன் தனது பிறந்தநாளில், நமது சமூகம் மற்றும் சுற்றுப்புறம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ரசிகர்களுடன் உரையாட முடிவு செய்துள்ளார்.

இதனையொட்டி மனநலம், திரைப்படம் மற்றும் ஊடகங்களில் பெண்கள், ஃபேஷன் துறையின் நிலைத்தன்மை போன்ற தலைப்புகளில், சமூக வலைதள பக்கத்தில் ஜனவரி 27 முதல் அவர் தொடர்ச்சியான நேரலை நிகழ்வுகளை நடத்தவுள்ளார்.

இந்த நேரலை நிகழ்வுகள் மூலம், ஸ்ருதிஹாசன், பொதுவாக சமூகத்தில் விவாதிக்க மறுக்கப்படும், பல தலைப்புகளில் விவாதங்களை, உரையாடலை மேற்கொண்டு, அந்த விசயங்களின் மீது கவனத்தை ஈர்க்க விரும்புகிறார்.

இந்த நேரலை அமர்வுகளில் ஸ்ருதிஹாசன் பல்வேறு செல்வாக்கு மிக்க பிரபலங்கள் மற்றும் தொகுப்பாளர்களுடன் இணைந்து, இந்த தலைப்புகளைப் பற்றி விரிவாக விவாதிப்பார்.

நம் சமூகத்தில் பேச மறுக்கப்படும் விசயங்களை பற்றி உரையாடலை நிகழ்த்தி, நமது அன்றாட வாழ்க்கையில் இந்த உரையாடல்களை இயல்பாக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளார்.

இது குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் கூறுகையில்..,

நேரடி அமர்வுகளை நடத்துவதன் முக்கிய நோக்கமே, இந்த தலைப்புகளைப் பற்றி சமூகத்தில் ஒரு விவாதத்தை, உரையாடலை துவக்கவேண்டும் என்பதே ஆகும். ஒருவரின் பிறந்தநாளைக் கொண்டாட, பல வழிகள் உள்ளன, ஆனால் என்னைப் பொறுத்தவரை கொண்டாட்டம் என்பது, நான் அக்கறை கொண்ட விஷயங்களைப் பற்றி நேர்மையான விவாதங்களைத் சமூகத்தில் ஏற்படுத்துவதே ஆகும்.

இது குறித்து இன்னும் சமூகத்தில் அதிகம் பேசப்படவேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த தலைப்புகளில் நிகழும், உரையாடலில் நிறைய நபர்களை இணைத்து, நேரலையின் போது பலரிடமிருந்து மாறுபட்ட கண்ணோட்டங்களைப் பெறுவதும், இந்தச் சிக்கல்களை குறித்து அவர்களை சிந்திக்க வைப்பதும், பகிரவும் மற்றும் விவாதிக்கவும் வைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் என்று கூறியுள்ளார்.

Shruti Haasan to conduct live sessions on social topics starting 27th January

‘ஜென்டில்மேன் 2’ அப்டேட் : முடிஞ்சா இசையமைப்பாளரை கண்டுபிடிங்க.. கே.டி.குஞ்சுமோன் தருகிறார் தங்க காசு..!

‘ஜென்டில்மேன் 2’ அப்டேட் : முடிஞ்சா இசையமைப்பாளரை கண்டுபிடிங்க.. கே.டி.குஞ்சுமோன் தருகிறார் தங்க காசு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகில் பிரமாண்ட படங்கள் தயாரிப்பதில், அவற்றை பிரமாண்டமாக விளம்பரபடுத்துவதில் புகழ்பெற்று விளங்கியவர் மெகா தயாரிப்பாளர் ‘ஜென்டில்மேன்’ கே.டி.குஞ்சுமோன்.

ஜென்டில்மேன், காதலன், ரட்சகன் உள்ளிட்ட பல பிரம்மாண்ட படங்களை தயாரித்து தமிழ் சினிமாவையே வியக்க வைத்தவர்.

அந்த காலத்திலேயே பட ரிலீஸ் சமயத்தில் தயாரிப்பாளருக்கு (இவருக்கு தான்) பெரிய பெரிய கட்-அவுட்கள் வைத்து அசத்தியவர் இவர்.

தற்போது கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகவுள்ள, ‘ *ஜென்டில்மேன் 2* ‘ படத்தின் இசையமைப்பாளர் யாரென கண்டுபிடிப்பவர்களுக்கு தங்க காசு பரிசு அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்தவர். சரத்குமார் மற்றும் இயக்குநர் ஷங்கர் முதல் பல ஜாம்பவான்களை திரையுலகில் உருவாக்கிய பெருமை அவரையே சேரும். பிரமாண்ட படங்களை தயாரித்தது மட்டுமில்லாமல் அவற்றின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பிரமாண்டமாக நிகழ்த்திக்காட்டியவர்.

பல காலமாக திரைத்துறையில் ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளார்.

அதன் ஆரம்பத்தையே அதிரடியான அறிவிப்புடன் செய்து, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

தற்போது *ஜென்டில்மேன் 2* படத்தின் ஆரம்பகட்ட பணிகளை துவக்கியுள்ளார். இப்படத்தின் இயக்குநர், நடிகர், தொழில்நுட்ப குழுவினர் எவரும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தற்போது ரசிகர்களுக்கு இதனை ஒரு போட்டியாக அறிவித்து அசத்தியுள்ளார். விரைவில் இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது அறிவிக்கப்படவுள்ளது.

ஆனால் அவர் யாரென சரியாக கணிக்கும் ரசிகர்களில் முதல் மூன்று பேருக்கு தங்க காசுகள் பரிசாக அளிக்கப்படவுள்ளது. படத்தின் மற்ற குழுவினர் அறிவிப்பும் இவ்வாறே நிகழவுள்ளது.

எல்லாவற்றிலும் புதுமையையும் பிரமாண்டத்தையும் கையாளும் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அவர்கள், *ஜென்டில்மேன்2* படத்திலும் பிரமாண்ட அறிவிப்புகளை துவங்கியிருப்பது, ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இடையே பாராட்டை குவித்து வருகிறது.

Producer KT Kunjumon announced his next project

பாலிவுட் சென்ற கோலிவுட் டைரக்டருடன் மீண்டும் இணையும் விஜய்.?

பாலிவுட் சென்ற கோலிவுட் டைரக்டருடன் மீண்டும் இணையும் விஜய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இந்த படத்திற்கு பிறகு தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். விஜய்யின் 66வது படமாக உருவாகும் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.

தமிழ், தெலுங்கில் என ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் விஜய் 67 பட இயக்குனர் என்ற கேள்வி கோலிவுட்டில் நீண்ட நாட்களாக நீடித்து வருகிறது.

இந்த நிலையில் மீண்டும் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம்.

அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தற்போது பாலிவுட்டில் ஷாரூக்கான் மற்றும் நயன்தாரா நடிக்கும் ஹிந்தி படத்தை இயக்கி வருகிறார் அட்லி.

அந்த படத்தை முடித்துவிட்டு விஜய் படத்தை இயக்குவார் அட்லி என நம்பலாம்.

தெறி மெர்சல் பிகில் பட வரிசையில் இவர்கள் இணையும் நான்காவது படமாக அந்த படம் உருவாகும் என எதிர்பார்க்கலாம்.

Actor Vijay joins Atlee for the 4th time ?

10 ஆண்டுகளுக்கு பிறகு ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் புதிய படம்

10 ஆண்டுகளுக்கு பிறகு ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் மெலோடி கிங் இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹாரிஸ் ஜெயராஜ்.

1990 மற்றும் 2000களில் இவரது பாடல்கள் இல்லாதே படங்களே இல்லை எனலாம். எங்கு திரும்பினாலும் ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களே ஒலித்துக் கொண்டிருந்தன.

மின்னலே’, ‘கஜினி’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘சாமி’, ‘அந்தியன்’, ‘லேசா லேசா’, ‘உன்னாலே உன்னாலே’, ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’, அயன், காப்பான் என பல படங்களின் பாடல்களை இவரது ஹிட் வரிசையில் உதாரணமாக சொல்லலாம்.

ரஹ்மான் இசையில் படங்களை இயக்கி கொண்டிருந்த ஷங்கரே திடீரென அந்தியன் படத்திற்காக ஹாரிஸ் ஜெயராஜ் பக்கம் திரும்பினார். இந்த படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.

காப்பான் படத்திற்கு பிறகு வேறு எந்தப் படத்துக்கு இசையமைக்கவில்லை ஹாரிஸ்.

இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு அதற்கு நடிகர் நிதின் நடித்து வரும் ஒரு தெலுங்கு படத்துக்கு தான் இசையமைத்து வருவதாக தெரிவித்துள்ளார் ஹாரீஸ் ஜெயராஜ்.

தமிழுக்கு எப்போ சார் வருவீங்க…???

Harris Jayaraj to join with Actor Nithin for telugu film

சிறப்பு திருமண சட்டப் பிரிவில் நடிகையை 2வது திருமணம் செய்த ஹரிஷ் உத்தமன்

சிறப்பு திருமண சட்டப் பிரிவில் நடிகையை 2வது திருமணம் செய்த ஹரிஷ் உத்தமன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வில்லன் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து பிரபலமானவர் ஹரிஷ் உத்தமன்.

இவர் நிறைய தமிழ்ப் படங்களில் காணப்பட்டாலும் இவரது பூர்வீகம் கேரளா.

சினிமாவில் நடிப்பதற்கு முன்பு பாராமவுன்ட் ஏர்வேஸ் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனங்கள் இவர் பணிபுரிந்துள்ளாராம்.

தமிழில் ‘கௌரவம்’, ‘பாண்டியநாடு’ `தனி ஒருவன்’, ‘பாயும் புலி’, ‘றெக்க’, ‘தொடரி’, ‘பைரவா’, ‘டோரா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலான மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் ஹரிஷ்.

இவர் 2018-ல் மும்பையைச் சேர்ந்த மேக்கப் ஆர்டிஸ்டை திருமணம் செய்துகொண்டிருந்தார். ஆனால் அவர்கள் ஒரு வருடத்திலேயே விவாகரத்து பெற்றனர்.

இந்த நிலையில் தற்போது மலையாள நடிகை சின்னு குருவிலாவை திருமணம் செய்துகொண்டுள்ளார் ஹரிஷ் உத்தமன்.

இவர்கள் சிறப்பு திருமண சட்டப்படி திருமணம் செய்துக் கொண்டதாக கேரள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதாவது மத நம்பிக்கை இல்லாதவர்கள் மணம் செய்துக் கொள்ளும் முறையாம்.

மம்மூட்டியின் ‘கஸபா’ மற்றும் தேசிய விருது வென்ற பகத் பாஃசில் நடித்த ‘நார்த் 24 காதம்’ ஆகிய படங்களில் சிறிய கேரக்டரில் நடித்துள்ளார் சின்னு குருவிலா என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Harish Uthaman and Chinnu Kuruvila enter wedlock

சந்தானம் பட டீஸர் வெளியானது.. அடுத்து கன்னட இயக்குனருடன் கூட்டணி

சந்தானம் பட டீஸர் வெளியானது.. அடுத்து கன்னட இயக்குனருடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜனவரி 21.. இன்று நடிகர் சந்தானம் தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதனை முன்னட்டு இவர் ஹீரோவாக நடித்துள்ள ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தின் டீசர் காலை வெளியானது.

இந்த படத்தின் டீசரை நடிகர்கள் ஆர்யா மற்றும் ஜீவா தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டனர்.

‘வஞ்சகர் உலகம்’ படத்தை இயக்கிய மனோஜ் பீதா இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் நடிகை ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ராம்தாஸ், இந்துமதி, மதன் தட்சிணாமூர்த்தி, ஆதிரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

நவீன் பாலிஷெட்டி மற்றும் ஸ்ருதி ஷர்மா தெலுங்கில் வெளியான ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ (2019) என்ற திரைப்படம் தமிழ் ரீமேக் இதுவாகும்.

விரைவில் கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் என்பவர் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சந்தானம்.

கன்னடத்தில் லவ்குரு, ஆரஞ்ச் ஜூம் ஆகிய படங்களை இயக்கியவர் பிரசாந்த் ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Santhanam’s new film teaser released

More Articles
Follows