உலக ரசிகர்களுக்காக ஸ்ருதி தயாரித்த படம் •த மஸ்கிட்டோ பிலாஸபி•

உலக ரசிகர்களுக்காக ஸ்ருதி தயாரித்த படம் •த மஸ்கிட்டோ பிலாஸபி•

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shruti Haasan produced The Mosquito Philosophy by her own banner Isidro Mediaதனது சொந்த நிறுவனமான இஸிட்ரோ மீடியா சார்பில் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி ’என்ற படத்தை தயாரித்து வெளியிடுகிறார் நடிகை ஸ்ருதிஹாசன். இதனை ‘லென்ஸ்’ பட புகழ் இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார்.

திரையுலகில் தனக்கென தனியாக ஒரு பாதையை உருவாக்கி, அதில் தன் பாணியிலான பயணத்தைத் மேற்கொண்டு, பல மரபுகளை உடைத்தெறிந்து, புதிய வடிவத்தை உருவாக்கி கலை சேவை செய்து வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன்.

இவரின் வித்தியாசமான தேர்வு தான் லென்ஸ் இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். இவரின் இயக்கத்தில் உருவாகும் இந்த ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’ என்ற படத்தை தன்னுடைய சொந்த நிறுவனமான இஸிட்ரோ மீடியா சார்பில் தயாரித்து வெளியிடுகிறார் ஸ்ருதிஹாசன்.

‘லென்ஸ்’ படத்தின் மூலம் சர்வதேச அளவில் ஏராளமான பார்வையாளர்களின் கவனம் ஈர்த்தவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், அத்துடன் இவரது படத்தைப் பார்த்த அனைவரும் இவரின் கதை சொல்லும் பாணியை வெகுவாக ரசித்து பாராட்டினர்.

அதிலும் குறைவான கதாப்பாத்திரங்களை வைத்துக் கொண்டு, தேவையான கருவிகளின் உதவியை மட்டும் பயன்படுத்திக் கொண்டு, எளிமையான பாணியில் கதையை சொல்வதில் தேர்ச்சிப் பெற்றவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

இவரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு திரை ஆர்வலர்களிடத்திலும், ரசிகர்களிடத்திலும் ஏற்பட்டிருந்தது. இந்த படத்திலும் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், குறைவான கதாப்பாத்திரங்களைக் கொண்டு உச்சபட்ச எளிமையான கதை சொல்லும் பாணியைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாராம்.

இந்த படத்தின் கதை தமிழில் சொல்லப்பட்டிருந்தாலும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் புரிந்துகொள்ளப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் வகையிலேயே இது படமாக்கப்படவிருக்கிறது.

ஏனெனில் திரைக்கதை, வசனம் மற்றும் குறைந்த பட்ச தொழில்நுட்ப கருவிகளால் ஒரு உண்மையான காட்சியை திரையில் பிரதிபலிக்க முடிவதில்லை.

இந்நிலையில் படத்தைப் பற்றி இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் பேசும் போது,‘ உலகம் முழுவதிலுமுள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள், தாங்கள் உருவாக்கும் கலை படைப்பை முடிந்தவரை பார்வையாளர்களுக்கு உண்மைக்கு அணுக்கமாக இருக்கும் வகையில் உருவாக்குவதற்காகத்தான் கடினமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’, உண்மையான வாழ்க்கை மற்றும் அதன் உண்மையான நேர விவரத்துடன் கூடிய விவரிப்பாக தயாராகவிருக்கிறது.

இதில் நான்கு நண்பர்களின் கதையின் மூலம் இந்த சமூகம் எப்படி பழங்கால மரபுகளின் வீழ்ச்சியையும், நவீனத்தின் எழுச்சியையும் எதிர்கொள்கிறது என்பதை தங்களுக்குள்ளேயே ஒரு விசாரணையின் மூலம் விவாதித்துக் கொள்கிறது.

அதாவது திரைக்கதை, வசனங்கள் இல்லாமல் சிறிய வழி உரையாடலுடன் கூடிய அடிப்படை யோசனையைப் பற்றிய படமாக படமாக்கப்பட்டிருக்கிறது.

இந்த படத்தின் தயாரிப்பின் போது, ஒரு படைப்பாளியின் சுதந்திரமான தன்னிச்சையான அதிகாரத்தை உணர முடிந்தது. இதனால் சிறிய தருணங்கள் கூட உண்மையுடன் கூடிய உயிர்ப்புள்ளதாக்கியது.’ என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நிறுவனத்தைப் பற்றி அவர் பேசும் போது,‘ இது எப்படி நடந்தது என்று நினைத்துப் பார்க்கும் போது எனக்கு கனவாகத்தான் தெரிகிறது. நான் சரிகா மேடத்துடன் ஒரு நிமிடம் தான் பேசினேன்.

அவர்கள் என்னுடைய திறமையை உணர்ந்து கொண்டு இந்த நிறுவனத்தில் உடனடியாக வாய்ப்பளித்தார்கள். என்னுடைய திறமை மற்றும் சினிமா பற்றிய என்னுடைய கோணத்தின் தன்மையை நம்பும் ஒரு குழுவுடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறேன்.

உலக சினிமாவின் மொழியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த படைப்பில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதமும் கொள்கிறேன்.

உலகம் முழுவதும் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’யை நல்லவிதமாக வரவேற்பார்கள் என்பதை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறோம்.

உலக முழுவதும் உள்ள பார்வையாளர்களுடன் எமது பயணத்தை பகிர்ந்து கொள்ளவும் காத்திருக்கிறோம்.’ என்றார்.

படத்தைப் பற்றி தயாரிப்பாளரான நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில்,‘ எங்கள் நிறுவனமான இஸிட்ரோ, எப்போதும் புதுமையான சுவராசியமான உள்ளடக்கங்களைத்தான் நம்புகிறது.

இது பல்வேறு ஆக்கப்பூர்வமான வடிவங்களைக் கொண்டதாக இருக்கிறது. அத்துடன் உலகத்தரத்திலான கதை சொல்லலையும் இது கொண்டிருக்கிறது. நாங்கள் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’ கதையை கேட்டதும், இயக்குநரை பாராட்டினோம்.

அத்துடன் அவரின் முந்தைய படைப்பான லென்ஸை பார்த்து வியந்தோம். எளிய கதைகளை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்துவதில் அவரின் பார்வையைக் கண்டு ஆச்சரியமடைந்தோம்.

இந்த வழக்கமான சிந்தனை பணிபுரியும் போது சவாலை கொடுக்கும் என்பதால் அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கிறோம்.

இதனை இசிட்ரோ மூலம் வழங்குவதில் பெருமையடைகிறோம். அவருடன் தொழில் முறையிலான உறவு நீடிக்கும் என்றும் நம்புகிறோம்.’ என்றார்.

Shruti Haasan produced The Mosquito Philosophy by her own banner Isidro Media

அரசியல்.? சினிமா.? விரைவில் பார்த்திபன் தரும் ஆச்சரிய செய்தி.!

அரசியல்.? சினிமா.? விரைவில் பார்த்திபன் தரும் ஆச்சரிய செய்தி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Surprise announcement will be there from Actor Parthiban soonநானும் ரௌடிதான், கேணி உள்ளிட்ட படங்களை தொடர்ந்து பார்த்திபன் நிறைய படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

அண்மையில் இவர் அளித்துள்ள பேட்டியில் சினிமா மற்றும் தன் அரசியல் பார்வை குறித்து பேசினார்.
அவர் கூறியதாவது…

குப்பத்து ராஜா என்ற படத்தில் வடசென்னை சேரிப்பகுதியில் வாழும் கதாபாத்திரம், திட்டம் போட்டு திருடற கூட்டம் படத்தில் வித்தியாசமான திருடர் கூட்ட தலைவன், துருவ நட்சத்திரம் படத்தில் ஸ்டைலிஷான ஒரு வேடம்.

இந்த மூன்றுமே வேறு வேறு விதமான கதாபாத்திரங்கள்.

இந்த படங்களை அனைத்துமே கடந்த ஆண்டு வெளியாகி இருக்க வேண்டியவை. தாமதம் ஆனதால் கடந்த ஆண்டு எனக்கு படமே இல்லாதது போல் ஆகி விட்டது.

நான் இப்போது சமூக சேவைகளில் ஈடுபட்டு வருவதால் இப்போதே அரசியலில்தான் இருக்கிறேன்.

காலம் வரும்போது நிச்சயம் முழுநேர அரசியலுக்கு வருவேன். கட்சி தொடங்குவது முக்கியம் அல்ல. சமூகத்துக்கு அவரவர்கள் பங்களிப்பை இதுபோல தொடர்ந்து செய்தாலே போதும்.

எல்லோருக்கும் ஆச்சர்யமான ஒரு அறிவிப்பு விரைவில் வரும்.” என்று கூறினார்.

ஆனால் அது அரசியலா? அல்லது சினிமா பற்றிய அறிவிப்பா? என்பதுதான் இப்போது குழப்பமாக உள்ளது.

Surprise announcement will be there from Actor Parthiban soon

ஜூலையில் தளபதி-63 படத்தின் முக்கிய அறிவிப்பு; டைரக்டர் யார்.?

ஜூலையில் தளபதி-63 படத்தின் முக்கிய அறிவிப்பு; டைரக்டர் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Who will be director for Thalapathy 63 movieஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தளபதி 62 படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

இதனை வரவேற்க காலை முதலே விஜய் ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.

இதனையடுத்து விஜய் அடுத்து நடிக்கவுள்ள தளபதி 63 படத்தின் அறிவிப்பு குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது.

அடுத்த ஜூலை மாதம் தளபதி-63 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டைரக்டர் யார்? என்பது குறித்த தகவல் இல்லை.

ஆனால் வினோத், பா ரஞ்சித், அட்லி, மோகன்ராஜா ஆகியோரிடம் விஜய் கதை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இவர்களில் ஒருவருக்கு விஜய் கால்ஷீட் கொடுப்பார் எனத் தெரிகிறது.

Who will be director for Thalapathy 63 movie

வீரத்தின் உச்சமான அஹிம்சைக்கு உதாரணமானவர் டிராபிக் ராமசாமி: கமல்

வீரத்தின் உச்சமான அஹிம்சைக்கு உதாரணமானவர் டிராபிக் ராமசாமி: கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan praises Traffic Ramasamy and his biopic movieஎஸ்ஏ சந்திரசேகரன் நடிப்பில் ஜூன் 22-ல் அதாவது வரும் வெள்ளியன்று வெளியாகும் ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தைப் பற்றி கமல்ஹாசன் பாராட்டிக் கூறியுள்ளார்.

சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் அடிப்படையில்
உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’.

அவரிடம் உதவி இயக்குநராக இருந்த விக்கி படத்தை இயக்கியுள்ளார்.

பாலமுரளி பாலா இசையமைத்துள்ளார், குகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். க்ரீன் சிக்னல் நிறுவனம் தயாரித்துள்ளது,

‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் முன்னோட்டம் பார்த்த கமல்ஹாசன் படத்தைப் பாராட்டிக் கூறியுள்ளார். அவர் பேசும் போது,“அஹிம்சைதான் சிறந்த வீரம் என்பதை உலகிற்கே உணர்த்திய நாடு இந்தியா. மகாவீரர் காலத்தில் தொடங்கி இது வெவ்வேறு வடிவங்களில் தோன்றி மறைந்திருக்கிறது.

சாதாரண மனிதர்கள் அவர்களின் வீரத்தால் அசாதாரண வீரர்களாக இருந்திருப்பது புதிதல்ல. காந்தியைப் பார்த்திருக்கிறோம். நேருவைப் பார்த்திருக்கிறோம் .ராஜாஜி எவ்வளவு தைரியசாலி என்று தெரியும். அம்பேத்கார் பற்றியும் தெரியும்.

இப்படி சாமான்யர்கள் தங்கள் வீரத்தால் எவ்வளவு உயரம் சென்றவர்கள் என்பதை ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு படியிலும் பார்த்திருக்கிறோம். இவர்களால் தான் இந்தியச் சக்கரம் சுழல்வதாக நம்புகிறேன்.

மகாத்மா காந்தி மாதிரி ஆள் கிடைக்கும் என்று பாராளுமன்ற கிணற்றுக்குள் தேடினால் கிடைக்க மாட்டார்கள். மகாத்மா மாதிரியானவரை பாத சாரிகளுக்குள் தேடினால் கிடைப்பார்கள்.

அப்படித் தேடாமல் கிடைத்தவர் தான் டிராஃபிக் ராமசாமி. இவரை ஊடகங்கள் வெவ்வேறு விதமாய் சித்தரித்ததுண்டு. இவரை ஒரு எக்ஸென்ட்ரிக் என்பதைப் போல சித்தரித்ததுண்டு.

ஆனால் டிராஃபிக் ராமசாமி. எல்லாருடைய மனதிலும் மனசாட்சியாக உறுத்திக் கொண்டிருக்கிறார். அப்படி ஒரு தைரியத்தைச் செயல்படுத்திய வீரர் இவர். அப்படிப் பட்டவரை இருக்கும் போதே படமாக்கும் முயற்சி, அதுவும் அவரே பார்த்துப் பாராட்டி ரசிக்கும் படி படமாக எடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

படக் குழுவுக்கு இதுவே முதல் வெற்றி . அடுத்து வணிக வெற்றியும் வந்து சேரும். எஸ்.ஏ.சி. அரசியல் வாடையில் படம் எடுப்பவரல்ல. முழு அரசியல் படமாக இறங்கி எடுப்பவர்.

அதுவும் அந்தக் காலத்திலேயே அவ்வளவு துணிச்சலாக அரசியல் படங்கள் எடுத்தவர். அவர் ஆரம்பித்து வைத்த அந்த மாதிரியான பாணி இன்றும் தொடர்கிறது.

அவரே ஒரு இயக்குநராக இருந்தும் விக்கி என்கிற இன்னொரு இளம் இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்து அவருக்கும் ஒரு தொடக்கம் அமைத்து இருப்பது பாராட்டுக்குரியது.

நடந்து முடிந்த கதையை படமாக்கும் போது சிலவற்றை வளைக்கலாம். ஆனால் நடந்து கொண்டிருக்கும் கதையைப் படமாக எடுப்பது சிக்கலானது. நடந்த ஒரு கதையை `ஹேராம்` படமாக நான் எடுத்த போது எவ்வளவு சிக்கல்கள் வந்தன என்பதை நான் அனுபவித்திருக்கிறேன்

ஒரு படத்தில் முதலில் பாத்திரப் பொருத்தம் அமைவது கடினம்.பெரிய நடிகர்களுக்கே சில நேரம் அமையாமல் போனதுண்டு. இந்தப் படத்தில் பாத்திரப் பொருத்தம் சிறப்பாக உள்ளது.

எஸ்.ஏ.சியும்இந்த டிராஃபிக் ராமசாமியும் ஒன்றாக நடந்து போகும் போது சகோதர்கள் போல இருக்கிறார்கள். பிற்காலத்தில் அடுத்த தலைமுறை ஒரிஜினல் யார் என்று தெரியாமல் இவரையே டிராஃபிக் ராமசாமியாக ஞாபகம் வைத்திருக்கக் கூடும். அதில் தவறில்லை.

அந்தப் பெயரும் உணர்வும் தான் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியவை. இப்படிப்பட்ட மனிதர்களின் வெற்றி தான் இந்தியாவின் வெற்றி. டிராஃபிக் ராமசாமி என்பவரை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே அறிய வேண்டும். இந்தியாவின் வெற்றி இந்த மாதிரி சாமான்ய வீரர்களால் தான்.

படத்தின் ட்ரெய்லர் பார்க்கும் போதே முழுப் படமும் பார்த்த மாதிரி உணர்ந்தேன் . முழுப்படத்தையும் பார்க்க வேண்டும் என ஆவல் வந்தது. `போராளி` என்று ஒரு பாடல் `கோமாளி `என்று ஒரு பாடல் பார்த்தோம்.

இவரை கோமாளியாக்க எத்தனையோ பேர் குறிப்பாக அரசியல்வாதிகள் முயன்று தோற்றுவிட்டனர் என்பது தான் உண்மை. அந்தத் தோல்வியை மேலும் பிரஸ்தாபிக்கும் வகையிலும் அழுத்தமாக அடிக்கோடிட்டுக் காட்டும் வகையிலும் இப்படம் இருக்கும்.

எஸ்.ஏ.சி. தேர்ச்சி பெற்ற இயக்குநராக இருப்பவர் நடிகராகவும் இருந்து இயக்குநருக்கு உறுதுணையாகவும் இருந்திருக்கிறார், எல்லாம் நன்றாக அமைந்துள்ளன. இப்படத்தை ஓட்டிக் காட்ட வேண்டிய கடமை ரசிகர்களுக்கு உள்ளது.

மீண்டும் சொல்கிறேன் வீரத்தின் உச்சகட்டம்தான் அஹிம்சை,அதற்கு உதாரணம் டிராபிக் ராமசாமி.” இவ்வாறு கமல்ஹாசன் பாராட்டி கூறியுள்ளார்.

Kamalhassan praises Traffic Ramasamy and his biopic movie

traffic ramasamy kamal wish

BIG NEWS: விஜய்-62 பட டைட்டில் இதுதானா.? வைரலாகும் போஸ்டர்

BIG NEWS: விஜய்-62 பட டைட்டில் இதுதானா.? வைரலாகும் போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Thalapathy 62 titled Vera Level goes viralஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா உள்ளிட்டோர் நடித்து வரும் தளபதி 62.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படம் ஒரு அரசியல் படமாக உருவாகி வருவதால், அரசியல் காட்சிகள் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தின் டைட்டிலை நாளை ஜீன் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளனர்.

இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் டைட்டில் லுக் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் வேற லெவல் என டிசைன் செய்துள்ளனர். இது அதிகாரப்பூர்வ தலைப்பு இல்லையென்றாலும் ரசிகர்கள் இதை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Vijays Thalapathy 62 titled Vera Level goes viral

vera level

ஜூன் மாத இறுதியில் ஆவி பறக்க வரும் *இட்லி*

ஜூன் மாத இறுதியில் ஆவி பறக்க வரும் *இட்லி*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

idlyஇயக்குநர் வித்யாதரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ இட்லி “ இப்படம் வருகிற ஜூன் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது.

காமெடி த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன் , கோவை சரளா , மறைந்த நடிகை கல்பனா மற்றும் மனோபாலா , லொள்ளு சபா ஸ்வாமிநாதன் மற்றும் இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் வங்கியை கொள்ளையடிக்கும் மூன்று வயதான பெண்களை பற்றி கதையை கொண்டதாகும். காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் இந்த சமூகத்துக்கு தேவையான கருத்துகள் படத்தின் இறுதியில் வருவது போல் அமைக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் இட்லி குடும்ப ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

இப்படத்தின் இசையமைப்பாளர் தரன் , கண்ணன் (ஒளிப்பதிவு) , ஜெய் பிரவீன் (படத்தொகுப்பு ) , உமா ஷங்கர் (கலை ) மற்றும் பாண்டியன் (உடை ) .

இப்படத்தின் படப்பிடிப்பு 40 நாட்களில் நிறைவுபெற்றது. இப்படத்தின் படம் சென்னையில் படமாக்கப்பட்டது.

பாடல் காட்சிகள் கேரளாவில் படமாக்கபட்டது.

பாபு தூயயவன் மற்றும் G. கார்த்திக் அப்பு மூவீஸ் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

More Articles
Follows