ஸ்ரத்தா ஸ்ரீநாத்திடம் இரவில் கதை சொன்ன பரத் நீலகண்டன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இவன் தந்திரன், விக்ரம் வேதா, உள்ளிட்ட படங்களில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது அருள்நிதி ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை எஸ்.பி.சினிமா சார்பில் சங்கர் தயாரிக்கிறார். தர்புகா சிவா இசை அமைக்கிறார்.

பரத் நீலகண்டன் இயக்குகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் பூஜையுடன் துவங்கியுள்ளது.

படம் பற்றி ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறியதாவது:

வழக்கமாக, இரவில் கதை கேட்பதற்கு நான் விரும்ப மாட்டேன். ஆனால் கதை சொல்ல டைரக்டர் பெங்களூர் வந்தார்.

இரவு 9 மணியிலிருந்து 11 வரை கதை சொன்னார். மிகவும் பிடித்தது. நடிக்க ஒப்புக் கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Shraddha Srinath to romance with Arulnith for Bharath Neelakandans movie

சித்தார்த்-கேத்ரீன் தெரசா நடிக்கும் பட சூட்டிங் தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சித்தார்த், கேத்ரின் தெரசா இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்தை சாய் சேகர் என்பவர் இயக்குகிறார்.

இப்படத்தை ‘டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் அஜித்தின் ‘வேதாளம்’ மற்றும் விஜய்சேதுபதி நடித்த ‘றெக்க’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்த கபீர் துஹான் சிங் வில்லனாக மோதவிருக்கிறார்.

முக்கிய வேடத்தில் சதீஷ் நடிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசை அமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படம் குறித்து சாய்சேகர் கூறியதாவது…

“முழுக்க முழுக்க நகரப் பின்னணியில் படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்தில் காதல், ஆக்சன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து உருவாக்க உள்ளோம்.

இந்தப் படத்தில் முதற்கட்டமாக 10 நாள் படப்பிடிப்பு நடத்தவுள்ளோம்.இதில் ஹிரோயின் கேத்ரின் தெரசா சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெறும்.” என்றார்.

Trident Arts Production No 3 Shoot Kick started in Chennai

BREAKING : விஜய்சேதுபதியை பாராட்டி சிம்புவை தாக்கிய ராபர்ட் மாஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் கதாநாயகனாக நடித்துள்ள படம் “ஒண்டிக்கு ஒண்டி”.

ஜேஎம் என்பவர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

சற்றுமுன் இப்பட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக விஜய்சேதுபதி, கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பேரரசு உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவில் ராபர்ட் பேசும்போது…

எனக்கும் விஜய் சேதுபதிக்கும் பழக்கமே இல்லை. ஆனால் அழைத்த உடன் அவர் வந்து விட்டார்.

ஆனால் நன்கு பழக்கமான ஒருவர் (சிம்பு) அழைத்தும் வரவில்லை.

ஒருவேளை நான் அந்த அளவுக்கு வரவில்லை என நினைக்கிறார் போல.

ஆனால் சந்தானம் அழைத்தால் அவர் செல்கிறார். ஒருவேளை அவர் அந்த உயரத்திற்கு வந்து விட்டார் என நினைக்கிறார் போல…

ஒரு நாள் எனக் கும் வருவார். நானும் முன்னேறுவேன்.”

எனப் பேசினார்.

Exclusive சுதந்திர தினத்தன்று சூப்பர் ஸ்டாரின் 2.0 பட டீசர் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் ஆகியோர் இணைந்துள்ள படம் 2.0.

ரூ. 500 கோடியில் தயாராகும் இப்படத்தை முழுக்க முழுக்க 3டியில் உருவாகியுள்ளார் ஷங்கர்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு மேலாக இதன் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்ற நிலையில் இப்படத்தை இந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் 29ல் ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவித்தார் ஷங்கர்.

இந்நிலையில் ரஜினி ரசிகர்ளுக்கு பெரும் விருந்தாக வருகிற சுதந்திர தினத்தன்று 2.0 பட டீசரை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிகிறது.

Shankar plans to release 2point0 Teaser on 15th August 2018

புதிய இசையமைப்பாளர்-நாயகியை அறிமுகப்படுத்தும் விஷ்ணு விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜகஜால கில்லாடி என்று 3 படங்களை கைவசம் வைத்துள்ளார் விஷ்ணு விஷால்.

இந்த 3 படங்களையும் தொடர்ந்து 4வது ஒரு புதிய படத்தையும் இன்று தொடங்கியுள்ளார்.

தனது பெற்றோரின் திருமண நாளில் தனது சொந்த தயாரிப்பில் இப்படத்தை தொடங்கியுள்ளார்.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இப்படத்தை இயக்குனர் வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார்.

இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஷிவானி நடிக்கிறார்.

இவர் பிரபல நடிகர் டாக்டர்.ராஜசேகரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஷிவானி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

மேலும், பிரபு, சரண்யா பொன்வண்ணன், முனிஷ்காந்த், நான் கடவுள் ராஜேந்திரன், சிங்கம் புலி, பிரவீன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தில் பின்னணிப் பாடகரும், நடிகருமான க்ரிஷ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

வேல்ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பை தனது பெற்றோரின் திருமண நாளில் துவங்குவதில் மகிழ்ச்சி என்று விஷ்ணு விஷால் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Singer Krish composing Music for Vishnu Vishals 4th Production movie

*கடமான் பாறை* படத்துக்காக ஆதிவாசி சூரப்பனாக மன்சூரலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “கடமான்பாறை“ என்று பெயரிட்டுள்ளார்.

இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார்.

மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் மன்சூரலிகானிடம் கேட்டோம்…

கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் இப்போது வழிமாறி போகிறார்கள். அப்பா அம்மா, ஆசிரியர் என யார் சொன்னாலும் எதையும் அவர்கள் பொருட்படுத்துவது கிடையாது.

அப்படி இருக்கும் ஒரு காதல் ஜோடி கல்லூரியை கட்டடித்துவிட்டு. ஒரு மலைப்பகுதிக்கு செல்கிறார்கள். அந்த கங்குவாரெட்டி மலை, கஞ்சாமலையை தன் வசம் வைத்திருக்கும் ஆதிவாசி சூரப்பன் மன்சூரலிகானிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.

அவனிடம் பாரஸ்ட் ரேஞ்சர் கூட மாட்டிக்கொண்டால் உயிரோடு திரும்ப முடியாது அந்த மலையில் இருந்து செம்மரக்கட்டை கடத்த முடியாது, கனிமவளங்களை திருட முடியாது.

காட்டிலிருந்து எந்த பொருளும் வெளியே விடாமல் அந்த காட்டின் பாதுகாவலனாக இருக்கும் அவனிடம் சிக்கிய ஜோடி தப்பிதார்களா இல்லையா என்பதுதான் இந்த கடமான்பாறை படத்தின் திரைக்கதை. திகிலூட்டும் காட்சிகள் மக்களை ரசிக்கவைக்கும்.

படப்பிடிப்பு ஆந்திரா மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும், பாண்டிசேரி, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

Mansoor AliKhan movie Kadamaan Paarai news updates

ஒளிப்பதிவு – மகேஷ்.T
இசை – ரவிவர்மா பாடல்கள் – விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், ரவிவர்மா, மன்சூரலிகான்,
கலை – ஜெயகுமார்
நடனம் – டாக்டர் சிவசங்கர், சம்பத்ராஜ், சங்கர், சந்துரு, சிவா
ஸ்டன்ட் – ராக்கி ராஜேஷ்,
தயாரிப்பு நிர்வாகம் – J.அன்வர்
ஒருங்கிணைப்பு – ஜே,ஜெயகுமார் ஆக்கம், இயக்கம் – மன்சூரலிகான்.

 

More Articles
Follows