தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இந்தியாவில் சில பகுதிகளில் இதன் சூட்டிங்கை முடித்த கையோடு சில காட்சிகளையும், பாடலையும் படம் பிடிக்க ‘சர்கார்’ படக்குழுவினர் அமெரிக்காவிலுள்ள லாஸ்வேகாஸ் பயணமாகியுள்ளனர்.
இதில் கலந்துக் கொள்வதற்காக வரலட்சுமியும் அமெரிக்கா பயணமாகியுள்ளார்.
அமெரிக்காவில் ‘சர்கார்’ படத்தின் அறிமுக பாடலை படம் பிடிக்க, இந்த பாடலுக்கு ஷோபி மாஸ்டர் நடனம் அமைக்கிறார்.
விஜய் நடித்த ‘கத்தி’ படத்தில் இடம் பெற்ற ‘பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா…’ என்று துவங்கும் பாடலுக்கு ஷோபி மாஸ்டர் தான் நடனம் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
