‘முருங்கைகாய் சிப்ஸ்’ போட சாந்தனுவுடன் இணைந்த அதுல்யா

murungakkai chipsவிஜய்யுடன் நடிகர் ஷாந்தனு மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

மேலும் சாந்தனு கைவசம் தற்போது ராவணக்கோட்டம் படம் உள்ளது.

இந்த படம் கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கபட்டுள்ளது.

இப் படங்களை அடுத்து அறிமுக இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கத்தில் அதுல்யாவுடன் இணைந்து நடிக்கிறார்.

இவர்களுடன் மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்துக்கு முருங்கைகாய் சிப்ஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அதை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

ரவீந்தர் சந்திரசேகர், சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் இசையமைப்பாளராக தரண், ஒளிப்பதிவாளராக ரமேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

Overall Rating : Not available

Latest Post