‘ஒருவர் வாழும் ஆலயம்’ பட இயக்குனர் ஷண்முகப்ரியன் காலமானார்

‘ஒருவர் வாழும் ஆலயம்’ பட இயக்குனர் ஷண்முகப்ரியன் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபு ரகுமான் நடித்த திரைப்படம் ‘ஒருவர் வாழும் ஆலயம்’. அழகான காதல் கதையுடன் உருவாக்கப்பட்ட இந்த படம் 35 வருடங்களுக்கு முன்பு வெளியானது.

இந்தப் படத்தை இயக்கியவர் ஷண்முகப்பிரியன்.

தனது இளது பருவத்திலேயே சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், நாடகங்கள் எழுதியவர் இவர்.

அவர் எழுதிய “விளிம்பு” எனும் நாடகமே அவர் கைவண்ணத்தில் “உறவாடும் நெஞ்சம்”என்ற திரைப்படமாக 1976ல் உருப்பெற்றது.

அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்த சிவகுமார் சிறந்த நடிகருக்காக மாநில விருது பெற்றார்.

அவரின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் முதலில் வெளிவந்த “ஒருவர் வாழும் ஆலயம்” எனும் திரைப்படம் 1980களில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக விளங்கியது.

வெற்றிவிழா, பிரம்மா, ஆத்மா போன்ற 50க்கும் மேற்பட்டத் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர் ஷண்முகப்ரியன்.

இந்த நிலையில் உடல்நலக் குறைவால் சண்முகப்பிரியன் இன்று பிப்ரவரி 2ஆம் தேதி காலமானார்.

Shanmugabriyan, the director of ‘Oruvar Vaazhum Aalayam’, has passed away

‘தளபதி 67’ பட பூஜையில் விஜய்யுடன் நெருக்கமான குழந்தை யார் தெரியுமா.?

‘தளபதி 67’ பட பூஜையில் விஜய்யுடன் நெருக்கமான குழந்தை யார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது.

இந்த பட பூஜையில் விஜய்யுடன் நடிக்கும் த்ரிஷா அர்ஜுன் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை ஸ்கிரீன் செவன் ஸ்டுடியோ தயாரிக்கிறது.

இப்படி பூஜையன்று விஜய் மற்றும் த்ரிஷா அருகில் ஒரு சின்ன பெண் குழந்தையும் நின்று இருந்தது.

அவர் தளபதி 67 படத்தில் விஜய் மகளாக நடிப்பார் என கூறப்படுகிறது.

எனவே அந்த குழந்தை யார்.? என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.

பிரபல காமெடி நடிகர் அர்ஜுனனின் மகள் ‘இயல்’ தான் அந்த குழந்தை என தெரிய வந்துள்ளது.

டிக் டிக் டிக், காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களில் நடித்தவர் அர்ஜுனன் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you know who is the closest child to Vijay in ‘Thalapathi 67’ Pooja?

தனுஷ் 50 ஷூட்டிங் இந்த தேதியில் ஆரம்பமாகிறதா?

தனுஷ் 50 ஷூட்டிங் இந்த தேதியில் ஆரம்பமாகிறதா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் இப்போது இயக்குனர் அருண் மாதேஷ்வரனின் முயற்சியான ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பில் ஓய்வில்லாமல் இருக்கிறார். சமீபத்திய தகவல்களின்படி, தேசிய விருது பெற்ற நடிகர், மார்ச் மாதத்திற்குள் கேப்டன் மில்லருக்கான தனது வேலையை முடித்துவிடுவார். அவர் ஏப்ரல் மாதத்தில் தனது 50வது ப்ராஜெக்ட்டின் ப்ரீ புரொடக் ஷனை தொடங்குவார் மேலும் ‘டி50’ மே மாதத்தில் தொடங்குவார் என சொல்லப்படுகிறது

தனுஷின் 50வது படம் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் ஆதரவுடன் பிரமாண்டமாக உருவாக உள்ளது . இது சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் கதை என்று கூறப்படுகிறது.

Dhanush’s 50th movie, D50, to go on the floors on this date?

தளபதி விஜய்யின் வாழ்த்துக்களைப் பெற்ற சந்தீப் கிஷன்

தளபதி விஜய்யின் வாழ்த்துக்களைப் பெற்ற சந்தீப் கிஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மைக்கேல் ரிலீஸுக்கு முன்னதாக நடிகர் சந்தீப் கிஷன் தளபதி விஜய்யைச் சந்தித்து அவருடைய வாழ்த்துக்களைப்பெற்றார் . ட்விட்டரில், தளபதி விஜய்யுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

“#மைக்கேலுக்கான அன்பான வார்த்தைகள், அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி அண்ணா என பதிவிட்டுள்ளார். லோகேஷ் தயாரிக்க ரஞ்சித் படத்தை இயக்குகிறார் … #மைக்கேல் நாளை முதல் உங்கள் அபிமான திரையரங்குகளில். இப்படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் மேனன், திவ்யன்ஷா கௌசிக் மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Sundeep Kishan earns Thalapathy Vijay’s wishes

விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி எப்படி இருக்கிறார்.? அவரே கொடுத்த அப்டேட்

விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி எப்படி இருக்கிறார்.? அவரே கொடுத்த அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாபெரும் வெற்றிப் பெற்ற ‘பிச்சைக்காரன்’ படத்தின் 2ஆம் பாகத்தை இயக்கி தயாரித்து இசையமைத்து நாயகனாக நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

நாயகியாக காவ்யா தாப்பர் நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கான பாடல் காட்சியை மலேசியா லங்காவி தீவில் படமாக்கும் போது பெரும் விபத்து ஏற்ப்பட்டது.

இந்த செய்தியை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

விபத்தானது… “கடலுக்குள் ‘ஜெட் ஸ்கை’ எனப்படும் பைக்கில் நாயகன் நாயகி செல்லும்போது எதிர்பாராத விதமாக மற்றொரு, ‘ஜெட் ஸ்கை’ வாகனத்தின்மீது, பயங்கரமாக மோதியது.

இதில் விஜய் ஆண்டனிக்கு பெரும் காயம் ஏற்பட்டது.

எனவே உடனடியாக மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன்பின்னர் சென்னை திரும்பி சிகிச்சை மேற்கொண்டார்.

இந்த நிலையில் அவரே தன் உடல்நலம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

அன்பு இதயங்களே
நான் 90% குணம் அடைந்து விட்டேன்.
உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன.
என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன்?
வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன்..
அன்புக்கு நன்றி.

Actor Vijay Antony health update is here

விஜய் மில்டன் இயக்கத்தில் ‘வாரிசு’ நடிகர் ஷாம்.; ஹீரோயின் யார் தெரியுமா.?

விஜய் மில்டன் இயக்கத்தில் ‘வாரிசு’ நடிகர் ஷாம்.; ஹீரோயின் யார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் 12 பி என்கிற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷாம்.

அதைத்தொடர்ந்து இயற்கை, 6 மெழுகுவர்த்திகள் என இன்றும் ரசிகர்களிடம் பேசப்படும் அருமையான படங்களில் நடித்துள்ள ஷாம், நல்ல கதை அம்சம் கொண்ட படங்களாக மட்டும் தேர்ந்தெடுத்து வருவதால் தான் தனது 20 வருட திரையுலக பயணத்தில் சீரான வேகத்தில் பயணித்து வருகிறார்.

அதன் பயனாகத்தான் தளபதி விஜய்யுடன் இணைந்து ‘வாரிசு’ படத்தில் அவரது சகோதரராக நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பு ஷாமை தேடி வந்தது.

சமீபத்தில் பொங்கல் பண்டிகை வெளியீடாக ரிலீசான ‘வாரிசு’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் அதில் நடித்துள்ள ஷாமின் நடிப்புக்கும் பாராட்டுக்களைத் தேடி தந்துள்ளது.

அதுமட்டுமல்ல புதிய பட வாய்ப்புகளையும் அவருக்கு பெற்று தந்துள்ளது.

அந்த வகையில் தற்போது ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கிவரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் ஷாம்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்னதாக விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமாரை வைத்து விஜய் மில்டன் இயக்கிய மழை பிடிக்காத மனிதன் படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..

விஜய் மில்டன் படத்தை தொடர்ந்து இன்னும் சில முக்கியமான இயக்குநர்களின் படங்களில் நடிப்பதற்காக நடிகர் ஷாமுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

வாரிசு படத்தின் வெற்றியில் மகிழ்ந்திருக்கும் ஷாம், இனிவரும் வருடங்களில் தன்னுடைய படங்கள் சீரான இடைவெளியில் வெளியாகும் என உறுதி செய்துள்ளார்.

இதன் அறிகுறி விஜய் மில்டன் படம் மூலமாகவே தெரிய ஆரம்பித்திருக்கிறது.

Vijay Milton directs ‘Varisu’ actor Shaam.; Do you know who the heroine is?

More Articles
Follows