தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் படம் ‘இந்தியன் 2’.
அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் மிகப் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
இந்தப் படத்தில் கமலுடன் சித்தார்த் காஜல் அகர்வால் பிரியா பவானிசாகர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
கொரோனா முதல் அலைக்கு முன்பே இந்த படத்தின் சூட்டிங் தொடங்கப்பட்டாலும் பல காரணங்களால் இதன் சூட்டிங் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மூன்று வருடங்களுக்கு பிறகு இதன் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது.
(இதில் நடித்து வந்த விவேக் கொரோனா காலகட்டத்தில் இறந்துவிட்டார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.)
இந்த நிலையில் இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்று செப்டம்பர் 22 முதல் ஆந்திராவில் தொடங்கியுள்ளது.
இது தொடர்பான தகவலை கமல் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் முறுக்கு மீசையுடன் கமல்ஹாசன் இருக்கிறார். அவர் இயக்குனர் சங்கருடன் பேசிக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
