கமலை கழட்டி விட்டுட்டு விஜய்யுடன் இணையும் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்த 2.0 படத்தை அடுத்து கமல் நடிக்கவுள்ள இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்தார் ஷங்கர்.

இப்படத்தை லைகா தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளதாக அறிவிப்புகளும் வந்தன.

ஆனால் கமலின் அரசியல் அவதாரம் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளிட்ட பல சம்பவங்களால் இந்தியன்2 படம் நிறுத்தப்பட்டது.

மேலும் கமலின் மேக்அப் சரியில்லை என்ற பிரச்சினையும் சொல்லப்பட்டது.

இதனால் வெறுத்துப்போன டைரக்டர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை அப்படியே டீலில் விட்டுவிட்டு அடுத்த படத்தில் கவனம் செலுத்தவுள்ளாராம்.

இந்த படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகவும் அது விஜய்யின் 65வது படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

Shankar will direct Vijay for Thalapathy 65

கிரிக்கெட் வீரர் பிராவோவுக்கு வேலம்மாள் பள்ளியில் பாராட்டு விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாங்காடு வேலம்மாள் பள்ளி பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வரும் முயற்சியினை செவ்வனே செய்துவருகிறது.

இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், அவர்களைப் பாராட்டும் வகையிலும் 01.07.2019 அன்று உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் விளையாட்டு வீரர் திரு. ட்வைன் ஜான் பிராவோ அவர்களைப் பள்ளிக்கு அழைத்துப் பாராட்டு விழா நிகழ்த்தியது.

மிகப் பிரம்மாண்டமான வரவேற்புகளுக்கிடையி ல் பள்ளிக்கு வருகை தந்த திரு.பிராவோ அவர்கள் பல்வேறு விளையாட்டுகளில் சாதனை புரிந்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டும் நிகழ்ச்சி முதலில் நடைபெற்றது.

பின்னர் பள்ளி மாணவர் தலைவர்கள் பதவியேற்கும் நிகழ்வினைத் துவக்கி வைத்த திரு.பிராவோ மாணவர்களுக்குப் பதவிகள் வழங்கிப் பாராட்டினார். விழாவில் பேசிய திரு.பிராவோ அவர்கள் மனித வாழ்வில் விளையாட்டு பெறும் முக்கியத்துவத்தையும் விளையாட்டுத் துறையில் சாதிக்கும் மாணவர்களுக்கு அமையவிருக்கும் சிறப்பான எதிர்காலம் பற்றியும் சுவைபடப் பேசினார்.

மாணவர்களே எழுச்சியூட்டும் வகையில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வு விளையாட்டுத் துறை மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக அமைந்தது.

மேற்கண்ட நிகழ்ச்சி வேலம்மாள் வித்யாலயா பூவிருந்தவல்லி பள்ளியில் நடைபெற்றது.

 

மாயபிம்பம் – மகன் படம் எடுப்பதற்காக தங்கள் முழு சொத்தை விற்றுக் கொடுத்த பெற்றோர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாயபிம்பம்’ படத்தில் அனைவருமே புதுமுகம் என்பதால் அப்படத்தைத் தயாரிக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை. அதனால் சோர்வடைந்த தங்கள் மகனைப் பார்த்த டைரக்டர் சுரேந்தரின் பெற்றோர், தங்களது ஓய்வூதிய தொகை, அம்மாவின் நகைகள் மற்றும் அவர்களின் வாழ்நாள் சேமிப்புவரை அனைத்தையும் இப்படம் எடுக்கக் விற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு கதை தெரியாது, எப்படியும் தன் மகன் தவறாகப் போகமாட்டான் என்ற நம்பிக்கையில் உதவியிருக்கிறார்கள். படம் முழுவதும் எடுத்து முடித்த பிறகு திரையில் பார்த்த அவரது பெற்றோர்களும், குடும்பத்தாரும் மற்றும் நண்பர்களும் மகிழ்ந்து பாராட்டியிருக்கிறார்கள். பெரிய டைரக்டர்களான பாலாஜிசக்திவேல், சுசீந்திரன், பாண்டிராஜ் , வெற்றிமாறன் போன்றவர்கள் பார்த்து பிரமித்துள்ளார்கள். காதலின் வலியை யதார்த்தமாக சொல்லியிருக்கிறீர்கள் என்று பாராட்டியுள்ளார்கள். படத்தை பார்த்த டைரக்டர் சுசீந்திரனின் தம்பி தாய்சரவணண் இப்படத்தை வெளியிட உதவி செய்துள்ளார்.

ஜூலை மாதம் 2-ம் வாரத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

ப்ரித்வி பாண்டியராஜன் – சாந்தினி நடித்த “ காதல் முன்னேற்ற கழகம் ஜூலை 5 ம் தேதி உலமெங்கும் வெளியாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்க்கொடி முருகன், தயாரிக்கும் படம் ‘காதல் முன்னேற்ற கழகம்.’

இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விபாண்டியராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி நடிக்கிறார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா, அமீர், ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவசேனாதிபதி நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு – ஹாரிஸ் கிருஷ்ணன்

இசை – பி.சி.சிவன்

பாடல்கள் – யுகபாரதி, மோகன்ராஜ், உமாசுப்ரமணியம், மாணிக்கசத்யா

எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்

நடனம் – அசோக்ராஜா

சண்டை பயிற்சி – அம்ரீன் பக்கர்

கலை – பிரகதீஸ்வரன்

தயாரிப்பு நிர்வாகம் – முத்தையா,விஜயகுமார்.

மக்கள் தொடர்பு – மௌனம்ரவி

தயாரிப்பு – மலர்க்கொடி முருகன்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மாணிக்க சத்யா.

படம் பற்றி இயக்குநர் மாணிக்க சத்யா பேசும்போது…

“இந்தப் படம் 1985களில் நடக்கின்ற கதை. கதாநாயகன் நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகர்.

அவரைப் போலவே முடியை வளர்த்துக் கொண்டு ரசிகர் மன்றம் அது ,இது என்று வேலைக்கு போகாமல் அலைந்து கொண்டிருப்பவர். சாந்தினி டீச்சராக நடித்துள்ளார்.

துரோகத்தில் மிக கொடூரமான துரோகமாக கருதப்படுவது நம்பிக்கை துரோகம் தான்.

அதிலும் நட்புக்குள் நடக்கும் நம்பிக்கை துரோகம் மிக மிக கொடூரமானது. அதைத் தான் இதில் சொல்லி இருக்கிறோம். படம் ஜூலை 5 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது என்றார் இயக்குனர் மாணிக்க சத்யா.

இணையத்தில் வைரலாகும் விஜய்யின் ‘பிகில்’ ஐ.டி கார்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘பிகில்’.

இதில் விஜய்யுடன் நயன்தாரா, கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இதில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார்.

இந்நிலையில், படத்தில் விஜய்க்கு கொடுக்கப்பட்ட ஐடி கார்டு இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

அதில் விஜய் புகைப்படத்துடன் மைக்கேல், தலைமை பயிற்சியாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

12 வருஷமாச்சு; நான் எனக்காக படம் நடிக்கல… – சந்தீப் கிஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று நடந்த கண்ணாடி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது :-

பாடலாசிரியர் கோ ஷேஷா பேசும்போது:-

இந்த திரைப்படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. ஏற்கனவே தெலுங்கில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற சந்தீப், இப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

தெலுங்கு படைப்பை தயாரிக்கிறார். த்ரில்லர், காதல் போன்ற வணிக ரீதியாக மட்டுமல்லாமல் இயல்பாகவே இப்படத்தை இயக்கியிருக்கிறார். இயற்கையாகவே எல்லா அம்சங்களும் ஒரு கதம்பமாக அமைந்திருக்கும்.

ஆகையால், குடும்பத்தோடு கண்டு களிக்கும் வகையில் இருக்கும். தமனின் இசை இப்படத்திற்கு தூணாக அமைந்திருக்கிறது. அவருடன் பணிபுரிந்தது உணர்வுமிக்க அனுபவமாக இருந்தது என்றார்.

கலை இயக்குநர் விதேஷ் பேசும்போது:-

இயக்குநருக்கு சந்தீப் செட்டில் ஜாலியாக இருப்பார். படக்குழுவினருடன் சேர்ந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி என்றார்.

ஒளிப்பதிவாளர் வர்மா பேசும்போது:-

இயக்குநர் கார்த்திக் அனைவரையும் ஊக்கப்படுத்துவார். இரண்டு மொழிகளிலும் 45 நாட்கள் உழைத்து படத்தை முடித்திருக்கிறோம். இது என்னுடைய முதல் த்ரில்லர் படம் என்றார்.

நகைச்சுவை நடிகர் கருணாகரன் பேசும்போது:-

‘ஜீவி’ படத்திற்கு ஆதரவு கொடுத்ததற்காக பத்திரியாளர்களுக்கு நன்றி. ‘ஜீவி’ படத்தைப் போலவே இப்படத்திலும் அனைவரும் என்னை ரசிக்கும் வண்ணம் என் கதாபாத்திரம் அமைந்திருக்கும் என்றார்.

உமையாள் ஜெகன் பேசும்போது:-

விஜய் சாரே என்னை மாப்பிள்ளை என்று அழைக்க வைத்த என் மச்சான் முரளிக்கு நன்றி. மென்மேலும் இதுபோன்ற தரமான படங்களை கொடுப்போம் என்றார்.

நாயகி அன்யா சிங் பேசும்போது:- எல்லோருக்கும் வணக்கம்!

இப்படம் எனக்கு முதல் தமிழ் படம். தமிழ் படத்தில் அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்படத்தில் காதல், த்ரில்லர், நகைச்சுவை, அனைத்தும் கலந்திருக்கும் என்றார்.

இயக்குநர் கார்த்திக் ராஜு பேசும்போது:-

உள்குத்து வெளியான பிறகு சரியாக போகவில்லை. இதுபற்றி என் நண்பர்களுடன் கலந்தாலோசிப்பேன். அப்போது தான் இந்த கதை உதித்தது- 3 நாட்களிலேயே எழுதி முடித்து விட்டேன். சுப்பு சாரிடம் கதையை கொடுத்தேன். அவர் படித்து முடித்ததும் இப்படத்தைத் தயாரிக்க ஒப்புக் கொண்டார்.

தெலுங்கில் கொண்டு போக வேண்டும் என்று சந்தீப் விரும்பினார். ஆனால், எனக்கு தெலுங்கில் ஒரு வார்த்தைக் கூட தெரியாது என்றேன். அதற்கு அவரே உதவிபுரிந்து தெலுங்கில் தானே தயாரிப்பதாகவும் கூறினார். சண்டை காட்சிகள் சவாலாகவே இருக்கும். சந்தீப் மற்றும் கருணாகரனின் காட்சிகள் அனைவரும் ரசிக்கும்படியாக இருக்கும்.

இப்படத்தில் கடினமாக உழைத்தது நாயகி அன்யா சிங் தான். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளும் தெரியவில்லையென்றாலும் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் மாற்றி மாற்றி நடித்தார்.

இப்படம் பெற்றோர்களுக்கு மிகவும் பிடிக்கும் விதமாக திடமான கருத்தைக் கூறும் படமாக இருக்கும்

என்னுடைய முதல் படமான ‘திருடன் போலீஸ்’ படத்தைப் பார்த்துவிட்டு என் அப்பா, படம் நன்றாக இருக்கிறது. ஆனால், புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறினார். ஆனால் இப்படத்தில் காட்சிக்குத் தேவைப்பட்டதால் வைத்திருக்கிறேன் என்றார்.

தயாரிப்பாளர் விஜி சுப்புரமணியன் பேசும்போது:-

இந்த படத்தை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு நாயகியாக யாரை தேர்வு செய்யலாம் என்று ஆலோசித்த போது, அன்யா சிங்கை சந்தீப் தான் பரிந்துரை செய்தார்.

இருப்பினும், ஆடிசன் வைத்துத்தான் அவரைத் தேர்வு செய்தோம். அவரும் நன்றாக நடித்திருக்கிறார் என்றார்.

நாயகன் சந்தீப் கிஷன் பேசும்போது:-

டீஸர் பார்த்த பலரும் நேர்மறையான கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தான் படம் வெளியாகும் என்ற நிலை இருக்கிறது. நான் நடிக்க வந்து 12 வருடங்கள் ஆகின்றது. நான் எனக்காக படம் நடிக்கவில்லை. பார்வையாளர்களுக்காக தான் நடிக்கிறேன்.

ஆனால் இப்பொழுது படம் நடிப்பது என்றால் பயமாக இருக்கிறது. ஏனென்றால், ஒவ்வொரு படமும் வெளியிடுவதற்கு பெரும் போராட வேண்டியிருக்கிறது.

இப்டத்திற்காகவும் ஒவ்வொருவரும் போராடிக் கொண்டு தான் இருக்கிறோம். தரமான படமாக வரவேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்திக்கிறோம். இப்படம் நல்ல படமாக வரவேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே இப்படத்தை எடுத்திருக்கிறோம்.

‘மாயவன்‘ படத்தை ஆன்லைனில் பார்த்த பலரும் நன்றாக இருக்கிறது என்று கூறினார்கள். இதன் பிறகு ‘கசடதபற’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்படம் வெளியாகும்போது எல்லோராலும் பேசும்படமாக இருக்கும்.

எல்லோரும் பேய் மற்றும் விலங்குகளை வைத்து படமெடுத்தால் வெற்றியாகும் என்றார்கள். ஆகையால் எந்த பின்னணியில் எடுத்தால் வெற்றியாகும் என்று கூறினாலும், அதை விடுத்து நான் எப்போதும் வித்தியாசமாகத் தான் நடிப்பேன் என்று கூறுவேன்.

இப்படத்தில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் கதையின் அடிப்படை மாறும். மேலும், 2043 வருடத்திலிருந்து ஆரம்பிக்கும். எதிர்காலத்தில் ஆரம்பித்து நிகழ்காலத்தில் முடியும்.

இதுவரை 24 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இப்படத்தைத்தான் தயாரிக்க வேண்டும் என்று தோன்றியது.

இப்படத்தைப் பார்த்து முடித்ததும் இது பேய் படம் என்று யாராவது கூறிவிட்டால் இனிமேல் நடிப்பதையே விட்டுவிடுகிறேன் என்றார்

More Articles
Follows