தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தெலுங்கு நடிகர் ராம்சரணின் 15வது படத்தை ஷங்கர் இயக்க தில்ராஜூ இந்த படத்தை தயாரிக்கிறார்.
இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.
இவர்களுடன் ஜெயராம், பகத் பாசில் என பலர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அரசியல் திரில்லர் கதையாக இப்படம் உருவாகிறதாம்.
அடுத்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபரில் படத்தை முடித்து 2023ஆம் ஆண்டு சங்கராந்திக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்தப் படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த செல்லமுத்து எழுத்தாளர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில்… “ராம்சரண் நடிக்கவுள்ள படத்தின் கதை தன்னுடையது என குறிப்பிட்டுள்ளார்.
எனவே இயக்குநர் ஷங்கர் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இருவரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது எழுத்தாளர் சங்கம்.
Shankar and Karthik Subbaraj face allegations of story theft over RC 15