ரஜினி அரசியலுக்கு வருவது அபாரமான முடிவு – ஷாரூக்கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தைப் போலவே இந்தி திரையுலகிலும் பல நட்சத்திரங்கள் ரஜினியின் ரசிகர்களாக உள்ளனர்.

அமிதாப், ஷாரூக்கான், சல்மான்கான், அமீர்கான் உள்ளிட்ட பலரும் ரஜினியின் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்.

சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் லுங்கி டான்ஸ் ஆடி ரஜினியை கௌரவித்த ஷாரூக்கான், தன் சமீபத்திய பேட்டில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பேசியுள்ளார்.

அதில்… எனக்கு அரசியல் ஒத்துவராது. எந்தக் கட்சிக்கும் நான் ஆதரவளிக்க போவதில்லை. பிரச்சாரமும் செய்ய போவதில்லை.

தன்னலமற்ற தொண்டு செய்ய நினைப்போர் அரசியலுக்கு வரலாம். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரலாம். அது ஒரு அபாரமான முடிவு என தெரிவித்துள்ளார்.

Shahrukh Khan welcomes Rajinikant political entry decision

ரஜினி-ஷங்கர்-பாகுபலி கதாசிரியர் கூட்டணியில் முதல்வன்2

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜமௌலியின் தந்தை கே.வி.விஜயேந்திர பிரசாத் அவர்கள் பாகுபலி, பாகுபலி-2 ஆகிய படங்களுக்கு கதை எழுதியவர் என்பது தங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

இவர் தற்போது மெர்சல் படத்திற்கும் கதை எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதல்வன் படத்தின் -2ம் பாகம் குறித்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

என்னை சந்தித்து முதல்வன் படத்தின் 2ஆம் பாகத்திற்கு கதையை எழுதச் சொன்னார்கள்.

அதை எழுதிவிட்டேன். இப்படத்தை யார் இயக்கப் போகிறார்? எனத் தெரியவில்லை.

ஆனால், முதல்வன் முதல் பாகத்தை இயக்கிய ஷங்கரே இப்படத்தையும் இயக்க வாய்ப்புள்ளது. என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கலாம் என கூறப்படுகிறது.

இதன் முதல் பாகத்தில் அர்ஜீன் நடித்திருந்தாலும் ரஜினியை வைத்தே கதையை உருவாக்கியிருந்தார் ஷங்கர்.
ஆனால் அப்போது அரசியல் சூழ்நிலையால் ரஜினி மறுத்தார்.

தற்போது அரசியலில் நுழைய ரஜினி ஆர்வம் காட்டி வருவதால், அவர் நடிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

In Shankar direction Rajini may act in Mudhalvan sequel

மாலை 6 மணிக்கு வேலைக்காரன் தரும் இன்ப அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, சிநேகா, பகத்பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்ஜே.பாலாஜி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் வேலைக்காரன்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை 24ஏஎம் ஸ்டூடீயோஸ் நிறுவனம் சார்பாக ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார்.

தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படம் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படம் குறித்த முக்கியமான அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Surprise announcement from Velaikkaran team today 6pm

சிவாஜிக்கு இனியொரு சிலை செய்வோம்; எந்நாளும் காப்போம்… கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைவையொட்டி அவருக்கு சென்னையில் உள்ள முக்கிய சாலையில் திமுக ஆட்சியின் போது சிலை வைக்கப்பட்டது.

ஆனால் இது போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக பொதுநலன் வழக்கு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து சாலையில் உள்ள சிலையை அகற்றி, சிவாஜி மணி மண்டபத்தில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது.

எனவே கோர்ட் உத்தரவுபடி சிலை நள்ளிரவில் அகற்றப்பட்டது.

இந்த செயலை சிவாஜி ரசிகர்கள் மற்றும் முக.ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட சில பிரபலங்கள் கண்டித்தனர்.

இதுகுறித்து கமல் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

Kamal Haasan‏Verified account @ikamalhaasan

சிவாஜி ரசிகர் மனதிலும் நடிக்க நினைத்த தமிழன் மனதிலும் பதிந்தவர். இனி ஒரு சிலைசெய்வோம் அதைக் எந்த நாளும் காப்போம் அரசுக்குமப்பால் என் அப்பா.

சிவாஜி உயிரோடு இருந்தபோதே கமலை தன் மூத்த பிள்ளை என்று கூறியதும், பிரபுவும், ராம்குமாரும் கமலை எங்கள் அண்ணன் கூறிவருவதும் நாம் அறிந்த ஒன்றுதான்.

மெரினாவில் சிவாஜி சிலை அகற்றப்பட்ட பிறகு அந்த இடத்தில் சில சிவாஜி ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal said another Sivaji Statue should be created

ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைக்க சிம்பு திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 5 நாட்களாக சிம்பு தன் புதிய படம் பற்றிய தகவல்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார்.

இப்படத்தில் பாடல்கள் இல்லை; இடைவேளை இல்லை உள்ளிட்ட புதுமைகளை இதில் புகுத்தவிருக்கிறார்.

மேலும் எவரும் செய்யாத புதிய முயற்சியாக படத்தின் பின்னணி இசை கம்போஸிங்கை முடித்துவிட்டு சூட்டிங்கு செல்லவிருக்கிறார் என்பதை பார்த்தோம்.

இப்படம் பயங்கர திகில் படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தில் எதிர்பாராத ட்விஸ்ட்களை வைத்து படம் முழுவதும் சீட் நுனியில் ரசிகர்களை உட்காரவைத்து அசத்த போகிறாராம்.

இதில் ஒரு திகில் படம் எனவும் சொல்லப்படுகிறது.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, யுவன் இசையமைக்கிறார்.

Simbu plans his next movie should be with seat edged scenes

பிக்பாஸை தடை செய்யனும்; கமல்-சக்தி மன்னிப்பு கேட்கனும்… கோர்ட்டில் மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தினமும் 4 கோடி மக்கள் பார்த்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மற்றொரு புறம் இந்நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என புகார் மனுக்கள் குவிந்து வருகின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கெட்ட வார்த்தைகள் பேசப்படுவதால் அதை வீட்டில் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்க முடியவில்லை என்பதால் தடை செய்ய வேண்டும் என இசை வேளாளர் சங்கம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் நாதஸ்வரம் வித்வான்களை நடிகர் சக்தி அவமதித்துவிட்டதால், அவரும் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Bigg Boss show should be banned Case filed

More Articles
Follows