தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜவான்’.
இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
‘ஜவான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை தாம்பரம் அருகே உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் நடிகர்கள் ஷாருக்கான், விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் அனிரூத், இயக்குனர் அட்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், ‘ஜவான்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டடத்தில் நடைபெறவுள்ளது.
Shahrukh Khan & crew fly to Dubai to release ‘Jawan’ trailer