காலம் முழுவதும் முன்னணி நடிகராக இருக்க முடியாது..; நடிகர் அஜித் ரூ. 18 லட்சம் ஏமாற்றியதாக தயாரிப்பாளர் புகார்

காலம் முழுவதும் முன்னணி நடிகராக இருக்க முடியாது..; நடிகர் அஜித் ரூ. 18 லட்சம் ஏமாற்றியதாக தயாரிப்பாளர் புகார்

seventh channel manickam narayananகடந்த 1996 ஆண்டில் நடிகர் அஜித் தன் பெற்றோர் பயணம் செல்வதற்காக ரூ.6 லட்சம் தேவை என கேட்டு பெற்றதாகவும் இதுவரை திருப்பி தரவில்லை என செவன்த் சேனல் நிறுவன மாணிக்கம் நாராயணன் குற்றம் சாட்டியுள்ளார்.

பின்னர் அந்த பணத்தை நான் வாங்கவில்லை என அஜித் ஏமாற்றி விட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

அந்த பணத்தை கொடுத்தற்கான வங்கி ஆதாரங்களையும் தற்போது வரை வைத்துள்ளதாக மாணிக்கம் நாராயணன் தெரிவித்துள்ளார்.

அதே போல பின்னர் மற்றொரு படத்திற்கு அட்வான்ஸாக ரூ. 12 லட்சம் கொடுத்து அந்தப் படம் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

வேறு ஒரு படம் நடித்து தருகிறேன் என சொல்லி அந்த வாக்கை காப்பாற்றவில்லை எனவும் அத்தொகையை அஜித் திருப்பிக் கொடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

ஆக மொத்தம் இந்த ரூ.18 லட்சத்தை 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தரவில்லை என தெரிவித்துள்ளார்.

அஜித் மீது வழக்குப் போடப் போவதில்லை எனவும் அவரே தன் நிலை உணர்ந்து பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் எனவும் அவர் முன்னணி் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

அஜித் சமையல் செய்வது மட்டுமே நல்லவர் என்பதற்கான அடையாளம் அல்ல. மனிதர்களை மதித்தால் மட்டுமே நல்லவராக போற்றப்படுவார்கள்.

அஜித் இன்று முன்னணி நடிகராக இருக்கலாம். ஆனால் காலம் முழுவதும் அப்படி இருக்கப் போவதில்லை என கடுமையாகவும் விமர்சித்துள்ளார்.

Seventh Channel producer blames Actor Ajith

இளையராஜா இசையில் அஜித் இயக்கத்தில் உருவாகும் ஆங்கிலப் படம்

இளையராஜா இசையில் அஜித் இயக்கத்தில் உருவாகும் ஆங்கிலப் படம்

இந்திய சினிமாவையே தன் இசையால் கட்டிப் போட்டவர் இசைஞானி இளையராஜா.

சந்தோஷம் முதல் சங்கடம் வரை எந்த காலகட்டத்திலும் இவரின் பாடல்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

இந்த நிலையில் இவர் தற்போது A Beautifully Breakup என்ற ஆங்கிலப் படத்திற்கு இசையமைக்க உள்ளார்

இந்த படத்தை பிரபல இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவிடம் பணியாற்றிய அஜித் வாசன் என்பவர் இயக்கவுள்ளார்.

இதோ அந்த பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்…

Maestro Ilayaraja to score music for English film

அளவற்ற சுதந்திரம் பெற்ற பெண்கள் என்ன செய்வாங்க.?.; பிப்ரவரி 19 முதல் ‘ஆண்கள் ஜாக்கிரதை’

அளவற்ற சுதந்திரம் பெற்ற பெண்கள் என்ன செய்வாங்க.?.; பிப்ரவரி 19 முதல் ‘ஆண்கள் ஜாக்கிரதை’

ஜெம் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் கந்தர்வகோட்டை க முருகானந்தம் தயாரித்துள்ள படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’.

ஜி முருகானந்தம் என்பவர் இயக்கியுள்ள இந்த “ஆண்கள் ஜாக்கிரதை“ வித்தியாசமான திரில்லர் படம்.

ராஜ் கிருஷ்ணா நடித்துள்ளார்.

அளவுக்கு அதிகமான சுதந்திரம் பெண்களையும் தவறு செய்ய தூண்டும் என்பதை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர்.

ஓர் ஆண் தவறு செய்தால் அந்த குடும்பம் மட்டுமே சிதையும்.

ஆனால் ஒரு பெண் தவறு செய்தால் அந்த சமுதாயமே அழியும் என்ற கருத்தை வலியுறுத்தும் இந்த படம் நாளை பிப்ரவரி 19ல் ரிலீசாகிறது..

இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Aangal Jakiradhai Complete Horror entertainer film from Feb 19

‘சக்ரா’ பட ரிலீசுக்கு தடையில்லை என கோர்ட் உத்தரவு..; உண்மை வெல்லும் என விஷால் கருத்து

‘சக்ரா’ பட ரிலீசுக்கு தடையில்லை என கோர்ட் உத்தரவு..; உண்மை வெல்லும் என விஷால் கருத்து

ஆனந்தன் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள படம் ‘சக்ரா’.

இப்படம் நாளை பிப்ரவரி 19ல் வெளியாகவுள்ள நிலையில் இந்தப் படத்திற்கு தடை விதிக்கக்கோரி டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவி என்ற தயாரிப்பாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

‘சக்ரா’ படத்தின் கதையை இயக்குநர் ஆனந்தன் ஏற்கனவே தன்னிடம் தெரிவித்து படத்தை தயாரிக்க ஒப்பந்தம் போட்டுவிட்டு தற்போது ஒப்பந்தத்தை மீறி விஷால் தயாரிப்பில் படம் வெளியிடுவது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு கடந்த முறை நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்த போது தங்கள் தரப்பிடம் காப்புரிமை உள்ளதால் ‘சக்ரா’ படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என டிரைடண்ட் ஆர்ட்ஸ் தரப்பில் வாதாடப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதி, சக்ரா திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, படத்தின் கதை தொடர்பாக இயக்குநர் ஆனந்தன் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தத்துக்கு தங்கள் நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என விஷால் தரப்பில் வாதாடப்பட்டது.

மேலும்,அந்த கதையை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்காத நிலையில் நாங்கள் தயாரித்துள்ளோம்.

இந்த இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டால் தங்கள் நிறுவனத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் எனவும் தெரிவித்து இருந்தனர்.

இதனை கேட்ட நீதிபதி, டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திடம் இயக்குனர் ஆனந்தன் போட்ட ஒப்பந்தத்தை அறிந்தே உள்நோக்கத்துடன் விஷால் படத்தை தயாரித்தாரா? என்பது மேற்கொண்ட விசாரணைக்கு பின்னர் தான் உறுதி செய்ய முடியும்.

‘சக்ரா’ நாளை வெளியாக உள்ள நிலையில் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டால் தயாரிப்பு நிறுவனம், தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என பலரும் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்து படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கினார்.

இந்த படம் வெளியான நாள் முதல் மார்ச் 5-ம் தேதி வரையிலான வசூல் குறித்து மார்ச் 10-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

நடிகர் விஷால் இது குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது…

“ஆமாம், எப்போதும் போல தடைகளை எதிர்கொண்டேன். எப்போதும் எனக்கு உண்மையாக தொழிலுக்கு உண்மையாக இருந்தேன்..

தடை இப்போது நீக்கப்பட்டது.. நாளை சக்ரா படம் உலக அளவில் வெளியிடப்படுகிறது.

பிப்ரவரி 19-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றில் சக்ரா திரைப்படத்துக்கு சிறந்த நாளாக இருக்கும்.

தயாரிப்பாளருக்கு மட்டுமல்ல, திரைப்படத்தில் பங்கேற்ற அனைவரின் விருப்பத்துக்கு ஏற்றவகையில் சரியான நேரத்தில் தடையை நீக்கி உத்தரவிட்ட மதிப்பிறக்குரிய உயர் நீதிமன்றத்துக்கு நன்றி.

உரிய கால அட்டவணையின்படி படத்தை வெளியிடுகிறோம். உண்மை வெல்லும்”

இவ்வாறு நடிகர் விஷால் தன் ட்விட்டர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Actor Vishal finds a solution for the smooth release of Chakra

நான்கு இந்திய மொழிகளில் ஓடிடி-யிலும் ரிலீசாகும் GODZILLA Vs KONG

நான்கு இந்திய மொழிகளில் ஓடிடி-யிலும் ரிலீசாகும் GODZILLA Vs KONG

GODZILLA Vs KONG (2)உலக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஆடம் விங்கார்ட் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “GODZILLA VS KONG”.

இந்த படம் விரைவில் ரிலீசாகும் என அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இப்பட ரிலீஸ் குறித்து டிவீட்டரில் வார்னர் பிரதர்ஸ் பதிவிட்டுள்ளனர்.

இந்த திரைப்படத்தின் டீசரையும் பகிர்ந்திருந்தது அந்த நிறுவனம்.

இந்த திரைப்படம் தியேட்டர்களில் மட்டுமின்றி HBO Max என்ற ஓடிடி தளத்திலும் வெளியாக உள்ளதாம்.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 4 மொழிகளில் ரிலீஸ் செய்யவுள்ளனர்.

மார்ச் இறுதியில் வெளியாகும் என தெரிகிறது.

GODZILLA Vs KONG release details in india

#GoBackModi என பதிவிட்ட ஓவியா மீது சைபர் கிரைமில் புகார்..; மீண்டும் மரண அடி பதிலடி கொடுத்த ஓவியா

#GoBackModi என பதிவிட்ட ஓவியா மீது சைபர் கிரைமில் புகார்..; மீண்டும் மரண அடி பதிலடி கொடுத்த ஓவியா

Oviya (2)கடந்த பிப்ரவரி 14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் #GoBackModi என ட்விட்டரில் பதிவிட்டனர்.

பிப்ரவரி 13-ம் தேதியே நடிகை ஓவியா #GoBackModi கோபேக் மோடி என்ற ஹேஷ்டேக்கைப் பதிவிட்டார்.

அந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, ஓவியா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அலெக்ஸிஸ் சுதாகர் சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்தார்.

“பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் தூண்டிவிடும் செயலில் நடிகை ஓவியா ஈடுபடுவதாகவும், இறையாண்மையை கெடுக்கும் வகையில் நடிகை ஓவியா செயல்பட்டுள்ளதாகவும் அந்த புகாரில் அவர் தெரிவித்து இருந்தார்.

தற்போது இதற்கு மரண அடி பதிலாக மீண்டும் 2 வார்த்தைகளை பதிவிட்டுள்ளார்.

அவருடைய ட்விட்டர் பதிவில், ‘ஜெய்ஹிந்த், கருத்து சுதந்திரம் (freedomofthoughts)’ என தன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் 1 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போதே ஓபன் டைப் ஓவியா என பெயரெடுத்த நடிகை ஆச்சே இவர்.. இப்போ சும்மா விடுவாரா..??

Actress Oviya’s reply to her haters

More Articles
Follows