தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இசையமைப்பாளர் டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை முதலில் அறிவித்தார்.
இந்நிலையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தில், அறிமுகப் பாடலைப் பாடியிருக்கிறார் செந்தில் கணேஷ்.
இதற்கான பாடல் பதிவு சமீபத்தில் நடைபெற்றது. ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.
மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் இப்படத்தில் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள்.
இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு லண்டனில் முடிவடைந்தது.
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘என்.ஜி.கே.’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, கே.வி.ஆனந்த் இயக்கும் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் சூர்யா.
லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. படத்துக்கு இன்னும் பெயரிடப்படாததால் ‘சூர்யா 37’ என்றே சொல்லப்படுகிறது.
