2020ஆம் ஆண்டில் செல்வராகவன்-தனுஷ் இணையும் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்வராகவன் தற்போது சூர்யா, ரகுல்பிரீத்தி சிங், சாய் பல்லவி நடித்து வரும் என்.ஜி.கே படத்தை இயக்கி வருகிறார்.

இதனையடுத்து மீண்டும் தன் தம்பி தனுஷ் உடன் ஒரு படத்தில் இணையவிருக்கிறாராம்.

இது புதுப்பேட்டை படத்தின் 2ஆம் பாகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

தற்போது நான்கு ஹீரோக்கள் நடிக்கும் சரித்திர படத்தை இயக்கி வருகிறார் தனுஷ்.

இதனையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் நான்காவது முறையாக இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்.

இதன் பின்னர் ‘ராட்சசன்’ படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் நடிக்கிறார்.

இவற்றை எல்லாம் முடித்துவிட்டு 2019ஆம் ஆண்டு இறுதியில் அண்ணன் செல்வராகவன் படத்தில் நடிப்பார் என்றும் இந்த படம் 2020ல் ரிலீஸ் ஆகும் எனவும் கூறப்படுகிறது.

Selvaraghavan and Dhanush will teams up again at 2020 year

யோகிபாபுவின் காதல் பிரச்சினைக்கு தீர்வு சொல்லும் ஜோதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளுக்கு நாள் ‘காற்றின் மொழி’ படம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஈர்த்து வருகிறது. அப்படத்தின் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பெரிய நடிகர்களின் பெயர்கள் உதாரணத்திற்கு சிம்பு அப்படத்தில் நடித்திருப்பதாக வந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது, அண்மைக் காலங்களில் நகைச்சுவையில் எல்லோரையும் கவர்ந்து வருகிறார் யோகிபாபு. அவர் ‘காற்றின் மொழி’ படத்திற்காக சில காட்சிகளில் நடித்திருக்கிறார். ஜோதிகாவுடன் நடித்த இரண்டு காட்சிகளுமே நகைச்சவை மிகுந்து இருக்கும். அரங்கத்தில் மிகப்பெரிய சிரிப்பலைகளை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது என்று படக்குழு தெரிவிக்கிறது.

RJ வாக நடிக்கும் ஜோதிகாவிற்கு நிறைய பேர் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரவர்களின் காதலைப் பற்றி பேசுகின்றனர். அதில் ஒரு அழைப்பாளராக யோகிபாபுவும் பேச, ஜோதிகா அவருக்கு காதலில் ஏற்படும் பிரச்சனையை எப்படி சரிசெய்வது என்று தீர்வு சொல்லும் விதமாக அந்த காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

BOFTA-வின் G.தனஞ்செயன், S.விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்செயன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தில் விதார்த், லக்ஷ்மி மஞ்சு, M.S.பாஸ்கர், மனோபாலா, குமரவேல், மோகன்ராமன், உமா, பத்மநாபன், சீமா தனேஜா மற்றும் சிந்து ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

A.R.ரகுமானின் உறவினரான A.H.காஷிப் இசையமைத்திருக்கிறார். இவர் ஏற்கனவே இசையமைத்தப் பாடல் அனைவரையும் மயக்கத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, கலையை கதிர் கவனிக்கிறார். உடைகளை பூர்ணிமாவும், பிரவின் KL எடிட்டிங் செய்கிறார். ராதா மோகன் இயக்கிய இப்படத்திற்கு பொன் பார்த்திபன் வசனங்களை எழுதியிருக்கிறார்.

விக்ராந்த் நடிக்கும் புதிய படத்திற்கு திரைக்கதை- வசனம் எழுதும் விஜய் சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் திரைக்கதை அமைத்து வசனத்தை எழுதியிருக்கிறார் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பெறுவதற்காக ஏராளமான திறமையுடன் கடுமையாக உழைத்து வருபவர் நடிகர் விக்ராந்த்.

இவர் தற்போது வெண்ணிலா கபாடி குழு=2, சுட்டு பிடிக்க உத்தரவு, பக்ரீத் என பல படங்களில் நடித்து வருகிறார்.இதைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்குகிறார் இயக்குநர் சஞ்ஜீவ்.

இது குறித்து படத்தை இயக்கவிருக்கும் இயக்குநரும், விக்ராந்தின் சகோதரருமான சஞ்ஜீவ் பேசுகையில்,‘ 2015 ஆம் ஆண்டில் விக்ராந்த் நாயகனாக நடித்த ‘தாக்க தாக்க’ என்ற படத்தை இயக்கினேன்.

இதைத் தொடர்ந்து சில ஆண்டுகள் கழித்து, நடிகர் விஜய் சேதுபதி சார் அவர்களைச் சந்தித்தேன். அவரிடம் ஒரு கதையின் சுருக்கமான வடிவத்தைச் சொன்னேன். அதைக் கேட்டதும், மிக நன்றாக இருக்கிறது. இது விக்ராந்திற்கு பொருத்தமாக இருக்கும் என்று சொல்லியதுடன், இதற்கு நான் வசனம் எழுதவா…?என கேட்டார்.

அவர் இருக்கும் பிசியான ஷெட்யூலில் அது எப்படி சாத்தியம்? என்று எண்ணிக் கொண்டிருந்த போது, அவரே கிடைக்கும் நேரங்களில் பணியாற்றலாம் என்று கூறினார். சொன்னபடி அவர் நடிக்கும் படங்களின் படபிடிப்பு முடிந்த பிறகு, இரவு நேரங்களில் என்னுடன் கதை விவாதத்தில் பங்கு கொண்டு, திரைக்கதையை மெருகேற்றியதுடன், வசனத்தையும் அவரே எழுதினார்.

ஏற்கனவே அவர் தயாரித்து, நடித்த ‘ஆரஞ்சு மிட்டாய் ’ என்ற படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார் என்று தெரியும்.. அதற்கு பிறகு அவர் நடிக்காத படத்திற்கு, மற்றொரு நாயகனுக்காக அவர் வசனம் எழுதுவது என்பது இது தான் முதன் முறை.

விக்ராந்தின் முன்னேற்றத்திற்காக அவர் செய்திருக்கும் இந்த உதவிக்கு நாங்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் நன்றி மறவாமல் இருப்போம். ’ என்றார் இயக்குநர் சஞ்ஜீவ்

வடசென்னை-யில் முதலிரவு காட்சியை நீக்கி விட்டு 2 புதிய காட்சிகள் இணைப்பு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அக்டோபர் 17ஆம் தேதி வெளியான வடசென்னை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 10 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் படத்தில் அமீர் ,ஆண்ட்ரியா நடிப்பில் இடம்பெற்றிருந்த முதலிரவு காட்சி மீனவ சமுதாய சகோதர சகோதரிகளின் மனம் புண்படும்படி இருந்ததாகவும் அக்காட்சியை படத்தில் இருந்து நீக்கும்படியும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தற்போது படக்குழு அந்த காட்சியை நீக்கி விட்டு அதற்கு பதிலாக அமீர்,ஆண்ட்ரியா நடித்துள்ள வேறு இரு காட்சிகளை இணைத்துள்ளனர்.

மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் வசனங்கள் சிலவும் நீக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கார்த்தியின் *தேவ்* பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கும் தேவ் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.

கிரைம் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்.

இவர் கார்த்தியுடன் ஏற்கெனவே தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்திருந்தார்.

மேலும் நவரச நாயகன் கார்த்திக், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே. விக்னேஷ், அம்ருதா, ரேணுகா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கார்த்தியின் அண்ணன் நடிகர் சூர்யா சற்றுமுன் ட்விட்டரில் வெளியிட்டார்.

Karthis Dev first look poster launched by Suriya

யுவன் தயாரிக்கும் 2 படங்களிலும் ஹீரோவாக விஜய் சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, இசையமைப்பதுடன் பாடல்களை பாடுவதும் உண்டு.

இவர் அண்மையில் ஒரு படத்தையும் தயாரித்திருந்தார்.

ஹரிஸ் கல்யாண் மற்றும் ரைசா நடித்திருந்த ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தையும் தயாரித்திருந்தார்.

இந்த படத்தை அடுத்து இரண்டு படங்களையும் தயாரிக்கவுள்ளார்.

இரண்டு படங்களிலும் விஜய் சேதுபதி தான் கதாநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி’ படங்களை இயக்கிய அருண்குமார் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இதில் அஞ்சலி நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் ஆரம்பமாகியுள்ளது.

மற்றொரு படத்தை சீனு ராமசாமி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முதல் ஆரம்பமாகிறது.

More Articles
Follows