தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அங்கு தமிழ்நாடு நாள் பெரு விழா நேற்று கொண்டாடப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசியபோது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது…
தைப்பூசத்திற்கும், தமிழ்நாடு உருவாகிய நாளைக்கும் தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும்.
நாட்டில் இட ஒதுக்கீடு, நீட் தேர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பவே வேல் யாத்திரையை பாஜக கையில் எடுத்துள்ளது.
அயோத்தியில் ராமர் வைத்து அரசியல் செய்தனர். அது போல, கேரளாவில் ஐயப்பனை வைத்து அரசியல் செய்ய நினைத்தனர். ஆனால் அது அவர்களால் முடியவில்லை.
வேலை வைத்து இவர்கள் நடத்தும் அரசியல் செல்லாது. முருகா என்றால் சீமான் முகம் தான் மக்களின் நினைவுக்கு வரும்.
வேல் யாத்திரையை நடத்த நாங்கள் விடமாட்டோம். அதற்கு தடை விதிக்க வேண்டும்.”
இவ்வாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
Seeman speech about lord Murugan
