ரஜினிக்கு ஆதரவாக பேசி சீமான் தொண்டர்களிடம் சிக்கிய ஜீவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என சீமான் கடும் ஆட்சேபனை தெரிவித்து வருகிறார்.

சீமானின் பேச்சு நடிகர் லொள்ளு சபா ஜீவா தனது எதிர்ப்பை தெரிவித்து இருந்தார்.

இதனால் ஜீவாக்கு நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் சார்பாக கண்டனங்களும் போனில் மிரட்டல்களும் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜீவா தற்போது கூறியுள்ளதாவது…

மரியாதைக்குரிய அண்ணன் சீமான் அவர்களுக்கு… சில தினங்களுக்கு முன்பு கபாலி படத்தின் சம்பளத்தை கணக்கு காட்ட ரஜினிகாந்த் அவர்களால் முடியுமா என்று நீங்கள் கேட்டதற்கு, உங்கள் கட்சிக்கு வரும் பணத்திற்கு உங்களால் கணக்கு காட்டமுடியுமா என்று ஒரு ரசிகனாக தலைவர் திரு.ரஜினிகாந்த அவர்களின் ஆதரவாளராக நான் எனது கருத்தைப் பதிவிட்டிருந்தேன்.

அது முதல் உங்கள் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் சிலர் தொலைபேசியில் என்னை தொடர்புகொண்டு பேசிவருகிறார்கள் அதில் சிலர் தவறாகவும் மரியாதைக்குறைவான வார்த்தைகளில் பேசுவது வருத்தமளிக்கிறது. இது தமிழர் பண்பாடும் அல்ல.

ஆகையால் உங்களின் சில தம்பிகளுக்கு நீங்கள் விமர்சனங்களை பொது மேடையில் விவாதிப்பது மட்டுமே அரசியல் நாகரீகம் என்பதை சொல்லுங்கள் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கமலின் ‘தசாவதாரம்’ பட இசையமைப்பாளருக்கு விவாகரத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்த ‘தசாவதாரம்’ படத்திற்கு இசையமைத்தவர் ஹிமேஷ் ரேஷ்மியா.

இவர் பொம்மலாட்டம் என்ற தமிழ் படத்திற்கும் மற்றும் ஏராளமான இந்தி படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.

இவருக்கும் கோமல் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடைப்பெற்றது.

தற்போது இந்த தம்பதிக்கு ஸ்வயம் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் ஹிமேஷ்-கோமல் தம்பதிகள் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய முடிவெடுத்தனர்.

அதன்படி இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இசையமைப்பாளர் ஹிமேஷூம், பாலிவுட் நடிகை சோனியா கபூரும் காதலித்து வருவதால்தான் இந்த விவாகரத்து எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

இயக்குனர் பாலாவால் தலைக்காட்ட முடியாத ஜிவி பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாண்டிராஜ் தயாரித்து, அவரது உதவியாளர் வள்ளிகந்தன் இயக்கிய செம படத்தின் ஆடியோ விழா சற்றுமுன் சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இப்படத்தின் நாயகனும் இப்படத்தின் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் இவ்விழாவில் கலந்துக் கொண்டார்.

மேலும் நாயகி, அர்த்தனா, ஆர்யா, சதீஷ், சூரி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் ஜிவி. பிரகாஷ் தலைமுடியை மறைத்தவாறே ஒரு துண்டு ஒன்றை தலையில் கட்டி வந்தார்.

இது பாலாவின் நாச்சியார் படத்தில் உள்ள கெட்டப் வெளியில் தெரியாமல் இருக்க செய்த ஏற்பாடு எனக் கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கா.? சிக்கலை தீர்த்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில்வர் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள படம் அதாகப்பட்டது மகாஜனங்களே.

தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி நாயகனாக அறிமுகமாகு, ரேஸ்மா ரத்தோர், கருணாகரன், பாண்டியராஜன், மனோபாலா உள்ளிட்டோர் நடிக்க, இன்ப சேகரன் இயக்கியுள்ளார்.
இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலரை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

இவ்விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் சிவகார்த்திகேயனை இளம் சூப்பர் ஸ்டார் என்று கூறியதை பார்த்தோம்.

இதுகுறித்து சிவகார்த்திகேயன் பேசும்போது கூறியதாவது…

ஒரு பாய்ண்டை சொல்லி எனக்கு அதிர்ச்சியை கொடுத்தவர் பி.டி.செல்வ குமார் சார்.

என்ன சொன்னீங்கன்னு நான் சொல்ல மாட்டேன். அதெல்லாம் வேண்டாம் சார். அது நானில்லை சார். நாம யாருன்னு தெரியும்.

எங்க இருந்து வந்திருக்கோம்னு தெரியும். அதெல்லாம் புரிஞ்சிட்டுன்னா இந்த மாதிரி விசயங்களை காதில் எடுத்துக்கொள்ளவே மாட்டோம். நம்ம செய்ற வேலை எல்லோருக்கும் ரீச்சாகினா போதும்.

இந்த மாதிரி விசயங்களெல்லாம் வேண்டாம் சார். என் படம் எல்லோருக்கு பிடிச்சிதுன்னா அதுவே போதும். நாம் பாட்டுக்கு ஒரு ரூட்டு எடுத்து போய்க்கிட்டேயிருக்கேன். விமர்சனம் பண்ணினா திருத்திக்கிட்டு நடிப்பேன்” என்றார் சிவகார்த்திகேயன்.

இதன்மூலம் தனக்கு வரவிருந்த சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் சிக்கலை சுலபமாக தீர்த்துவிட்டார் சிவகார்த்திகேயன் எனலாம்.

‘முதல்வராக தடை செய்தால் ரஜினி பிரதமாகிவிடுவார்..’ திருமாவளவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் அரசியல் பேச்சு தமிழகத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

தற்போது அவர் காலா படத்தில் பிஸியாக இருப்பதால், பரபரப்பு கொஞ்சம் தணிந்துள்ளது.

இந்நிலையில் ஆரம்பம் முதலே ரஜினியின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்து வரும் திருமாவளவன் தனியார் டிவி பேட்டியில் கூறியதாவது…

“அரசியல்வாதி என்ற முறையில் ரஜினியை அரசியலுக்கு வரவேற்கிறேன்.

தமிழ்நாட்டை தமிழர்தான் ஆளவேண்டும் என்பதெல்லாம் இனி எடுபடாது. மொழி சார்ந்த கொள்கைகள் மட்டுமே சரிவராது.

ரஜினிகாந்த் தமிழரல்ல என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது.

தமிழ்நாட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார்.

தமிழர் ஆளவேண்டும் என்பதை விட ஒரு நல்ல மனிதர் ஆளவேண்டும்.

ரஜினிகாந்தை தமிழக முதல்வராக்க தடை செய்தோமானால் அவர் இந்த நாட்டின் பிரதமராகி விடுவார்.

ஒரு மாநிலத்தை ஆள தடை செய்தால் அவரை இந்தியாவை ஆள வைத்து விடுவார்கள் என்று தொல் திருமாவளவன் கூறினார்.

திருமாவளவனின் இந்த பேட்டி அரசியல் உலகில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

கடும் குளிர்; நடு ராத்திரி… ‘உரு’ படம் உருவான விதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படத்தை தொடர்ந்து மீண்டும் கலையரசன், தன்ஷிகா இணைந்துள்ள படம் உரு.

இப்படம் அடுத்த வாரம் ஜீன் 16ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

‘வையம் மீடியா’ நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்கி ஆனந்த் இயக்கியிருக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் பேசும்போது…

‘‘உரு’ படம் ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர். உருவத்தை சுருக்கி உரு என டைட்டில் வைத்துள்ளோம்.

இப்படத்தை கொடைக்கானலில் கடும் குளிரில் 40 நாட்கள் இரவில் படமாக்கினோம்.

கலையரசன், தன்ஷிகா, ‘மைம்’ கோபி உள்ளிட்ட பலரும் ரொம்ப கஷ்டப்பட்டனர்.

அவர்களைவிட டெக்னீஷியன்கள் பாவம். அவ்வளவு கஷ்டப்பட்டு இப்படம் இப்போது ஒரு ‘உரு’ வாக வளர்ந்துள்ளது.” என்றார்.

‘மெட்ரோ’ படத்திற்கு இசையமைத்த ஜோஹன் இசையமைக்க, ‘பிச்சைக்காரன்’ பட ஒளிப்பதிவாளர் பிரசன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Kalaiyarasan Dhanshika starring Uru movie updates

More Articles
Follows