நிவர் புயல் அலர்ட்.. : புதுச்சேரியை தொடர்ந்து காரைக்காலிலும் 144 தடை உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்று நாளை பிற்பகல் காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்கிறது.

இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நாகை, காரைக்கால், மயிலாடுதுறையில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாம்.

தஞ்சை, திருவாரூர், சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு அனைத்து அம்மா உணவகங்களில் உணவு தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நாளை நவம்பர் 25 (புதன்கிழமை) தமிழகம் முழுவதுமுள்ள அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை என எடப்பாடி அறிவித்துள்ளார்.

நிவர் புயல் கரையை கடக்கும் நேரத்தில் மட்டும் பாதிப்பு இருக்கக் கூடிய பகுதிகளில் பெட்ரோல் பங்க்குகள் புயல் கரையை கடக்கும் வரை மூடப்படும் என தமிழ்நாடு பெட்ரோல் வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தேவையான அளவு பெட்ரோல் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

மேலும் நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் நாளை நவம்பர் 25 கரையைக் கடக்க உள்ளதால் புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல் 26-ந்தேதி காலை 6 மணிவரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் புதுச்சேரியை தொடர்ந்து காரைக்காலிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளை நவ 25 காலை 10 மணி முதல் 26 தேதி அதிகாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்.

Section 144 imposed in Pondy and Karaikal

ஸ்பென்சர் சிக்னலில் பைக்கில் கெத்து காட்டிய ‘யூத்’ மினிஸ்டர் ஜெயக்குமார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதி சென்னை அண்ணாசாலை. இரவும் பகலும் ஓயாமல் வாகனங்கள் செல்லும் சாலை தான் இது.

காலை 11 மணி இருக்கும் வெள்ளை வேட்டி, சட்டை அதுவும் அதிமுக கரை வேட்டியுடன் பைக்கில் ஒருவர் ஹெல்மெட் அணிந்துகொண்டு வேகமாய் வந்து ஸ்பென்சர் சிக்னலில் நிற்கிறார்.

அக்கம் பக்கத்தில் இருந்த வாகன ஓட்டிகள் இவர் யார் என்று சிறிய சந்தேகத்துடன் உற்று நோக்குகின்றனர். அவர்களைப் பார்த்து கையசைத்து சிரிக்கிறார் அவர்.

அப்போது தான் அவர்களுக்கு தெரிகிறது அவர் அமைச்சர் ஜெயக்குமார் என்பது. காரில் இருந்த சிலர் பைக்கில் இருந்த சிலர் இறங்கி அவரை சூழ்ந்துகொண்டு செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.

“என்ன சார் எங்கே போறீங்க?கார்ல ஏன் வரல? பைக்கில் வந்து இருக்கீங்களே” என்று கேட்கிறார்கள்.

அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் சிரித்துக்கொண்டே… ஹெல்மெட் என்பது மிக மிக அவசியம் இன்றைக்கு முகக்கவசம் எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதோ அதே போல தலைக்கவசம் எப்போதும் ரொம்ப முக்கியமானது அதை பலபேர் மறந்துட்டாங்க, இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு ரொம்ப அதிகமா இருக்கு.

இன்னைக்கு தனியார் ஹெல்மெட் கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகிட்டேன். எனவே இளைஞர்களுக்கு ஒரு விழிப்புணர்வை கொடுப்பதற்காகத்தான் நான் ஹெல்மெட் போட்டு பைக்கில் சில கிலோமீட்டர் வலம் வருகிறேன் என்றார்.

இன்று ஒரு நாள் மட்டுமல்ல நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதேபோல ஹெல்மெட் அணிந்துகொண்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க முடிவெடுத்திருக்கிறேன்” என்றார்.

அவரது பதிலை கேட்டு அங்கு இருந்தவர்கள் அமைச்சருக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தனர்.

எப்போதுமே மக்களோடு மக்களாக பயணிக்கக்கூடிய அமைச்சர்களில் முதன்மையானவராக திகழ்பவர் ஜெயக்குமார்.

இந்த விஷயத்திலும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு ஹெல்மெட் அணிந்து பைக்கில் வலம் வருகிறார் அவரது வெற்றிப்பயணம் தொடரட்டும்.

Reason behind minister Jeyakumar bike riding in chennai

நவம்பர் 25 நிவர் புயல்.. : தமிழகத்தில் பொது விடுமுறை..; 24 விரைவு ரயில்கள் ரத்து..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்று நாளை பிற்பகல் காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்கிறது.

இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இரு மார்க்கத்திலும் செல்லும் 24 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் முழுவதுமாக வங்கிக்கணக்கில் திருப்பிச் செலுத்தப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு அனைத்து அம்மா உணவகங்களில் உணவு தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று எழிலகத்தில் புயல் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் முதல்வர்.

அவர் பேசியதாவது…

நிவர் புயல் காரணமாக நாளை நவம்பர் 25 (புதன்கிழமை) தமிழகம் முழுவதுமுள்ள அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை என அறிவித்தார்.

TN govt declares holiday ahead of cyclone Nivar on wednesday

ஆஷா சரத்தின் மூத்த மகள் உத்தராவும் நாயகியானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள சினிமாவில் தன் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் ஆஷா சரத்.

இவர் தமிழில் கமலுடன் பாபநாசம், தூங்காவனம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

அண்மையில் மோகன்லால்-மீனா நடித்துள்ள ‘த்ரிஷ்யம் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதனையடுத்து ‘கெட்டா’ என்ற ஒரு புதிய படத்திலும் நடிக்கவுள்ளார்.

கேரள அரசு விருது பெற்ற இயக்குனர் மனோஜ் கண்ணா இந்த படத்தை இயக்கவுள்ளார்.

இதில் ஆஷா சரத்தின் மூத்த மகள் உத்தரா நாயகியாக அறிமுகமாகிறார்.

Asha Sarath’s daughter Uthara to act in Manoj Kanna film

விபிஎப் கட்டணத்திற்கு மறுப்பு.. முடங்கியுள்ள படங்களை வெளியிட திட்டம்..; தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று முன் தினம் நவம்பர் 22ஆம் தேதி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெற்றது.

இதில் ராம நாராயணனின் மகன் தயாரிப்பாளர் முரளி அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் அளித்துள்ள பேட்டியில்…

என்னை தலைவராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி.

தேர்தலுக்கு முன்புதான் அணிகள். இப்போது எந்த அணியும் கிடையாது. எல்லோரும் ஒரே அணி தாண்.

கொரோனா ஊரடங்கால் கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ளது தமிழ் சினிமா. இதனால் திரையுலகம் பின்தங்கியுள்ளது.

எனவே அனைத்து தயாரிப்பாளர்களையும் மீட்டெடுக்க நடவடிக்கை எடுப்போம்.

தயாரிப்பாளர்கள் செலுத்தி வந்த விபிஎப் கட்டணத்தை இனி தியேட்டர் உரிமையாளர்கள் தான் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்துவோம்.

வெளியிட முடியாமல் தேங்கி கிடக்கும் படங்களை திரைக்கு கொண்டு வர பாடுபடுவோம்.

தற்போதுள்ள அரசு, இனி வரப்போகும் புதிய அரசு ஆகியவற்றுடன் நல்ல உறவை வளர்த்து அரசு தரப்பில் இருந்து அனைத்து சலுகைகளையும் பெறுவோம்.” என்றார்.

TFPC new president Murali on VPF issue

BREAKING ‘கருப்பன் குசும்புக்காரன்’ வசன புகழ் நடிகர் தவசி காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் & ஸ்ரீதிவ்யா நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சூரிக்கு அப்பாவாக நடித்தவர் தவசி.

இந்த படத்தில் ‘கருப்பன் குசும்புக்காரன்’ என்று இவர் பேசிய வசனம் தான் இவரை படு பிரபலமாக்கியது.

தற்போது ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது கேன்சர் (புற்றுநோயால்) பாதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தனது மருத்துவ செலவுக்கு திரைப் பிரபலங்கள் உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

ரஜினிகாந்த் அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

மேலும் டாக்டரும், திருப்பரங்குன்றம் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினருமான சரவணன், மருத்துவ செலவுகள் அனைத்தையும் சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.

நடிகர் தவசிக்கு விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், சௌந்தர ராஜா உள்ளிட்டோர் நிதியுதவி செய்தனர்.

இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

Actor Thavasi who was fighting cancer passed away in madurai

More Articles
Follows