நவம்பரில் பள்ளிகள் திறப்பு.?; காலாண்டு-அரையாண்டு தேர்வுகள் இல்லை?

நவம்பரில் பள்ளிகள் திறப்பு.?; காலாண்டு-அரையாண்டு தேர்வுகள் இல்லை?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tn school studentsகொரோனா அச்சுறுத்தல் பள்ளிகள் மூடல், கொரோனா தேர்ச்சி, தேர்ச்சி விகிதம், பள்ளிகள் கொரோனா செய்திகள், கல்வித்துறை

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டது.
இதனால் தமிழகத்தில் 1 முதல் 10 வகுப்புகளுக்கு இறுதி தேர்வு நடத்தாமலேயே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக பள்ளிகள் ஜீன் மாதம் திறக்கப்படும். ஆனால் தற்போது ஆகஸ்ட் மாதம் தொடங்கினாலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில், வருகிற நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று, கல்வித்துறை வட்டாரத்தில் இருந்த தகவல்கள் வந்துள்ளன.

மேலும், இந்தாண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் இல்லை என்றும், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இதுவரை இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

லெபனான் பெய்ரூட் துறைமுகம் சிதறியது.; என்ன நடந்தது? என்ன நடக்கிறது.?

லெபனான் பெய்ரூட் துறைமுகம் சிதறியது.; என்ன நடந்தது? என்ன நடக்கிறது.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lebanon explosion rocks Lebanon's capital city Beirut லெபனான் நாட்டில் உள்ள பெய்ரூட் துறைமுகத்தில் திடீரென மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டது.

எவரும் எதிர்பார்க்காத வகையில் துறைமுகத்தில் இருந்த கிடங்கில் வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருள் அதிபயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இது ஒட்டுமொத்த பெய்ரூட்டையும் உலுக்கியது எனலாம்.

அந்த பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகின.

இந்த விபத்துக்கு காரணம்…

பெய்ரூட் துறைமுக கிடங்கில் கடந்த 6 ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டிருந்த ஆபத்து தரக்கூடிய வேதிப்பொருள் வெடித்துள்ளது.

மேலும் துறைமுகத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களிலிருந்து தீ பரவியது கண்டறியப்பட்டுள்ளது.

கிடங்கில் உரிய பாதுகாப்பு இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டின் காரணமாகவே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் மைக்கேல் ஆன் தெரிவித்துள்ளார்.

விவசாயத்தில் உரம் தயாரிக்கவும், வெடி மருந்து தயாரிக்கவுமே அமோனியம் நைட்ரேட் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோர வெடி விபத்தில் சிக்கி இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 4,000-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது என்ன நடக்கிறது..

வெடி விபத்து நடந்த இடத்தில் இருந்த சடலங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகிறது.

இடிந்துள்ள கட்டிட இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருப்பதாலும் எண்ணிப்பார்க்க முடியாத வகையில் பலி எண்ணிக்கை உயரலாம் என லெபனான் அரசு கவலை தெரிவித்துள்ளது.

நாட்டையே உலுக்கிய இந்த வெடி விபத்து தொடர்பாக லெபனான் அதிபர் மைக்கேல் ஆன் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்,
“துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றாமல் மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் 6 ஆண்டுகளாகச் சேமித்து வைக்கப்பட்ட 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்ததால் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இதை சற்றும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்தக் கொடூர விபத்துக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை கொடுக்கும் வரை நான் ஓயப்போவதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஒரு வாரத்துக்கு பெய்ரூட் நகரில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடு முழுவதும் 3 நாட்களுக்குத் துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும், அவசரக்கால நிதியிலிருந்து 100 பில்லியன் லிரா (இந்திய மதிப்பில் சுமார் ரூ.500 கோடி) உடனடியாக விடுவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

புகை, இடிபாடுகள் அனைத்தையும் கடந்து பாதிக்கப்பட்டவர்களுக்காகச் சம்பவ இடத்திற்கும், மருத்துவமனைக்கும் உதவ சென்ற மக்களை நான் பாராட்டுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த கோர விபத்தினால் பெய்ரூட்டில் இருக்கும் அனைத்து ஆஸ்பத்திரிகளும் விபத்தில் படுகாயமடைந்தவர்களால் நிரம்பியுள்ளதாம்.

சிகிச்சை பெற்று வரும் பலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த பகுதியுள்ள உள்ள சுமார் 2 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து, வீதியில் நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மோசமான வேதிப்பொருள் வெடித்துள்ளதால் மக்கள் வெளிக்காற்றை சுவாசிப்பதைத் தவிர்க்குமாறு அரசால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கிட்டதட்ட 240 கி.மீ தொலைவில், கிழக்கு மத்திய தரைக்கடலில் உள்ள சைப்ரஸ் தீவிலும் இந்த வெடிப்பு உணரப்பட்டு இருக்கிறது.
நிலநடுக்கம் வந்துவிட்டதாக சைப்ரஸ் தீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

உலக தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு வெடி விபத்துக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

ரஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் லெபனானுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளன.

Beirut explosion rocks Lebanons capital city

பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய அயோத்தி ராமர் கோயில் சிறப்பம்சங்கள்…

பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய அயோத்தி ராமர் கோயில் சிறப்பம்சங்கள்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PM Modi lays stone of Ram Temple in Ayodhya says Ram belongs to allபாபர் மசூதி இடிப்புக்கு பின்னர் சர்ச்சைக்குரிய நிலமானது அயோத்தி.

இந்த 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

பல ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த சட்டப்போராட்டம் கடந்த ஆண்டு 2019 நவம்பர் மாதம் முடிவுக்கு வந்தது.

அதில், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதைத்தொடர்ந்து இன்று 2020 ஆகஸ்ட் 5ஆம் தேதி.. 29 வருடங்களுக்கு பின்பு இன்று அயோத்தி வருகை தந்தார் பிரதமர் நரேந்திர மோடி

அங்கு அனுமன் ஹார்கி, ராம்லல்லா உள்ளிட்ட தளங்களில் பிரார்த்தனை மேற்கொண்டார்.

இதன் பின்னர் பிரம்மாண்ட ராமர் கோவிலுக்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு 40 கிலோ வெள்ளி செங்கல் கொண்டு அடிக்கல் நாட்டினார் மோடி.

இந்த ராமர் கோவில் பூமி பூஜை வரலாற்று சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

அதாவது 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதிக்கு மாற்றாக, ராமர் கோவிலை கட்ட வேண்டும் என 1990களில் நாடு முழுக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களில் நரேந்திர மோடியும் ஒருவர்.

ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது பாஜகவின் சித்தாந்தமாகவும், தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகவும் இருந்தது.

இந்த விழாவில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜகவின் கருத்தியல் வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உள்ளிட்ட 170 ஆன்மீகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கொரோன வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு, பாஜக கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்கள் (வீடியோ) காணொளி காட்சி மூலம் பங்கேற்றனர்.

இந்த புதிய கோயிலின் சிறப்பம்சங்கள்…

அயோத்தி நகரில் நகரா என்ற கோயில் கட்டிடக் கலை பாணியில், ராமர் கோயில் கட்டப்பட உள்ளது.

மொத்தம் 67 ஏக்கர் நிலப்பரப்பில் ராமர் கோயில் மிக பிரமாண்டமாக அமையவுள்ளது.

இதில் 10 ஏக்கரில் கோயிலும், மீதமுள்ள 57 ஏக்கர் கோயில் வளாகமாகவும் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்தம் 161 அடி உயரம், மூன்றடுக்கு, 5 மண்டபங்கள், ஒரு கோபுரத்தை கொண்டதாக இக்கோயில் வடிவமைக்கப்பட உள்ளது.
ராமர் கோயிலில் மூன்று அடுக்குகள் கட்டப்படவுள்ளது.

தரை தளத்தில் கர்ப்ப கிரகம் மற்றும் ராமரின் பல்வேறு சிலைகளும் அமையவுள்ளன.

முதல் தளத்தில் ராமர் தர்பார் அமைக்கப்பட உள்ளது.

இரண்டாவது தளத்தில் பக்தர்கள் அமர்ந்திருக்கும் இடமாகவும் அமையவுள்ளது.

இந்த கோபுரத்தின் உயரம் 81. 5 அடி என்றும், இந்த கோயிலில் மொத்தம் 360 தூண்கள் அமைக்கப்பட உள்ளது.

ரூ. 300 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகிறது.

கட்டுமானப் பணியின் தலைமைக் கட்டட கலைஞராக, பிரபல கட்டட கலை நிபுணரான சந்திரகாந்த்பாய் சோம்புரா பொறுப்பேற்றுள்ளார்.

இந்த கோயிலை முழுவதுமாக கட்டி முடிக்க குறைந்தப்பட்சம் மூன்றரை ஆண்டுகள் ஆகும் என தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்படும் மலைக்கற்களை தவிர, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், கடந்த 30 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டுள்ள 2 லட்சம் கற்களும் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

PM Modi lays stone of Ram Temple in Ayodhya says Ram belongs to all

பாஜக-வில் இணைகிறார் திமுக MLA கு.க செல்வம்.; ஸ்டாலின் மீது அதிருப்தி.?

பாஜக-வில் இணைகிறார் திமுக MLA கு.க செல்வம்.; ஸ்டாலின் மீது அதிருப்தி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dmk mla ku ka selvamசென்னை மேற்கு மாவட்ட செயலாளரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜூன் 10 தேதி உயிரிழந்தார்.

எனவே அம்மாவட்ட பொறுப்புக்கு அக்கட்சியினரிடையே போட்டி நிலவியது.

இந்த சூழலில் யாரும் எதிர்பாராத வண்ணம் அந்த பொறுப்புக்கு சிற்றரசு நியமிக்கப்பட்டார்.

திமுக.வில் பல சீனியர்கள் இருந்தும் சிற்றரசு நியமிக்கப்பட்டதால் மூத்த நிர்வாகி அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் தொண்டர்களிடையே சலசலப்பும் உருவானது.

மேலும் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் திமுக கட்சியின் தலைமை நிலையச் செயலாளருமான கு.க. செல்வமும் அதிருப்தி அடைந்தார்.

இதனையடுத்து பிஜேபி-யில் இணைய பேச்சு வார்த்தை நடத்தி வந்தார் கு.க. செல்வம் MLA.

இன்று மாலை டெல்லியில் ஜே.பி நட்டா தலைமையில் அவர் பாஜகவில் இணைய உள்ளார் என தகவல்கள் வந்துள்ளன.

இந்நிலையில் ஜே.பி.நட்டாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் கு.க.செல்வம்.

நான் பாஜகவில் இணைய வரவில்லை என்றார். தமிழ்க்கடவுள் முருகனை அவதூறாக பேசியவர்களை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்.

திமுகவில் தனக்கு அதிருப்தி இல்லை. ஆனால் திமுக தலைமை தன்மீது நடவடிக்கை எடுத்தால் பரவாயில்லை என செல்வம் கூறினார்.

எத்தனை மாதம் தான் கொரோனா பயம்.?.; சினிமா பணிகளை தொடங்கினார் அக்‌ஷய்குமார்

எத்தனை மாதம் தான் கொரோனா பயம்.?.; சினிமா பணிகளை தொடங்கினார் அக்‌ஷய்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

akshay kumarகொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடெங்கிலும் பொதுமுடக்கம் விடப்பட்டுள்ளது.

இதனால் கடந்த 6 மாதங்களாக சினிமா சூட்டிங்குகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில் தன் சினிமா பணிகளை தொடங்குகிறார் பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார்.

அட்ரங்கி ரே, பெல்பாட்டம், ரக்‌ஷா பந்தன் போன்ற படங்களை பணிகளை தொடங்கி உள்ளார்.

இது குறித்து நடிகர் அக்‌ஷய்குமார் கூறியதாவது…

கொரோனா பயத்துடன் ஆரம்ப காலங்களில் வாழ்ந்தேன்.

ஆனால் எத்தனை காலம் பயத்துடன் வாழ முடியும்.

ஆரம்பத்தில் கொரோனா வைரஸைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. இதனால் நிறைய பயம் இருந்தது.

அது ஒரு நபரைப் பாதிக்கும் விதம் பற்றி அறிந்திருக்கவில்லை.

ஆனால் இப்போது உடலில் நோய் எதிர்ப்பு திறன் இருந்தால், கொரோனாவை வெல்ல முடியும் என்பதை அறிந்துள்ளோம்.

எனவே எங்கள் குழு முழுமைக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து பணிகளை தொடங்கிவிட்டோம்..” என தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகர் சேதுவுக்கு ஆண் குழந்தை பிறந்தது..; குட்டி சேது வந்திருப்பதாக மனைவி உருக்கம்

மறைந்த நடிகர் சேதுவுக்கு ஆண் குழந்தை பிறந்தது..; குட்டி சேது வந்திருப்பதாக மனைவி உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

doctor sethuramanகண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் சேது என்ற சேதுராமன்.

இவர் நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர் ஆவார். இவர் ஒரு டாக்டர்.

Zi Clinic என்கிற தோல் சிறப்பு மருத்துவமனையை சென்னையில் நடத்தி வந்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு உமையாள் என்பவரை சேது திருமணம் செய்தார்.

இத்தம்பதிக்கு சஹானா என்ற பெண் குழந்தை உள்ளது.

கடந்த 2020 மார்ச் மாதம் 26-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 36.

சேது மரணமடையும் போது அவரது மனைவி 5 மாதம் கர்ப்பமாக இருந்தார்.

தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தங்கள் குடும்பத்தில் மீண்டும் சேதுராமனே குட்டி சேதுவாக வந்திருப்பதாக குடும்பத்தினர் உருக்கத்துடன் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

More Articles
Follows