தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
திகில் கலந்த கிரைம் திரில்லரான ‘சீன் நம்பர் 62’. இப்படத்தின் பெயரும், படம் குறித்த அறிவிப்பும் ஏற்கனவே எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள நிலையில், இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘ஆதாம்’ திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் தடம் பதித்த ‘ஆதாம்’ சமரின் இயக்கத்தில் வளர்ந்து வரும் ‘சீன் நம்பர் 62’ திரைப்படத்தை வேணு ஜி ராமின் நவமுகுந்தா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
மலையாளத்தில் ‘ஷக்தன் மார்க்கெட்’ எனும் திரைப்படத்தை தயாரித்துள்ள இந்நிறுவனம், ‘சீன் நம்பர் 62’ மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறது.
கதிரவன், அமல்தேவ், கோகிலா கோபால், ஜாய்ஸ் எலிசபெத், ஆர் ஜே வைத்தி, ஐஸ்வர்யா நாயர் மற்றும் ராகந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சென்னை, புதுச்சேரி, கொடைக்கானல், பொள்ளாச்சி மற்றும் கேரளாவில் ‘சீன் நம்பர் 62’ படமாக்கப்பட்டுள்ளது.
போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தமிழில் ‘இரட்டையர்’ மற்றும் தெலுங்கில் ‘ஓய் இடியட்’ ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஜிகேவி, ‘சீன் நம்பர் 62’-க்கு இசை அமைக்கிறார்.
விஜய் வெங்கட் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘சதுரங்க வேட்டை’, ‘பாம்பு சட்டை’, ‘பிச்சுவா கத்தி’ மற்றும் தற்போது வெளியாகியுள்ள ‘ஜோதி’ ஆகிய திரைப்படங்களின் படத்தொகுப்பாளரான ராஜா சேதுபதி ‘சீன் நம்பர் 62’-ன் எடிட்டர் ஆவார். பரப்பரப்பான சண்டைக் காட்சிகளை ‘மிரட்டல்’ செல்வா வடிவமைத்துள்ளார். கலை இயக்கத்தை டி கே தினேஷ்குமார் கையாண்டுள்ளார்.
கவிஞர் சிவபிரகாசம் பாடல் வரிகளை எழுதியுள்ளார். அன்சாரி இஸ்மாக் ஒப்பனையையும், சோஹிப் ஜயி உடைகளையும், விளம்பர வடிவமைப்பை சரோவ்வும் கையாண்டுள்ளனர்.
ரஜீஷ் பதம்குளம் திட்ட வடிவமைப்பாளராக பொறுப்பேற்றுள்ளார். மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனிக்கிறார்.
ரசிகர்களை கவரும் பல்வேறு அம்சங்களோடு ‘சீன் நம்பர் 62’ விரைவில் வெளியாகவுள்ளது.
Scene Number 62 first look is revealed