கனா-வை சிவகார்த்திகேயன் தயாரிக்க வேண்டிய அவசியமில்லை.. : சத்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா.

ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிக்க, சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்த படம் கடும் போட்டிக்கு இடையே வெளியாகினாலும் மிகப்பெரிய வெற்றியை பெற்று, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு ஷீல்டு வழங்கும் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த படம் உருவாக மூலக்காரணமாக இருந்தாலும் அமைதியாக இங்கு அமர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். கிரிக்கெட் தெரியாத என்னையும் இந்த 11 பேர் அணியில் சேர்த்துக் கொண்ட சிவா சாருக்கு நன்றி.

எந்த ஹீரோவும் இல்லாமலேயே ஒரு ஸ்டாருக்குண்டான ஓபனிங்கை இந்த படத்துக்கு பெற்று தந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். எல்லோரும் சிறப்பாக உழைத்திருந்தாலும் மிகுந்த வருத்தத்தோடு நிறைய காட்சிகளை வெட்டி எறிந்து விட்டேன். அதனால் இந்த படத்துக்கு நான் தான் எல்லோருக்கும் வில்லன் என்றார் எடிட்டர் ரூபன்.

சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பது போல, கதையில் எனக்கு ஸ்கோப் இருந்ததால் நான் சிறப்பாக வேலை செய்ய முடிந்தது. அருண்ராஜாவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

நானே கிராமத்தை சேர்ந்தவன் தான் என்பதால் அது எளிதாக இருந்தது, கால்பந்து விளையாடி இருந்ததாலும் ஸ்டேடியம் சம்பந்தப்பட்ட காட்சிகளும் ஓரளவுக்கு பணிபுரிய முடிந்தது என்றார் கலை இயக்குனர் இளையராஜா.

சிவாவின் தன்னம்பிக்கையை பாராட்டியே ஆக வேண்டும். இந்த படத்துக்கு இவ்வளவு செலவு செய்யலாம் என கணித்து படத்தை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்.

படம் துவங்கும் போதே இது வெற்றி விழா காணும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஒரு நடிகர் என்பவர் கதையில் நிறைய விஷயங்களை சேர்த்து அதை மெற்கேற்றுவார். சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் என எல்லோருமே மிகச்சிறப்பாக அதை செய்திருக்கிறார்கள் என்றார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்.

நான் நாயகியாக நடித்தபோதே சத்யராஜ் சாருடன் ஜோடியாக நடிக்க ஆசைப்பட்டேன், ஆனால் அது இப்போது நிறைவேறி இருக்கிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ் மிகவும் திறமையான நடிகை, இந்த ஆண்டின் அனைத்து விருதுகளும் அவருக்கு கிடைக்கும் என நம்புகிறேன் என்றார் நடிகை ரமா.

சிவா நட்புக்கு மரியாதை கொடுத்து எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். சத்யராஜ் சாரின் பாஸிட்டிவிட்டி இந்த குழுவில் இருந்த இளைஞர்கள் எல்லோருக்கும் ஒரு ஊக்கமாக இருந்தது.

தர்ஷன் எனக்கு ஒரு தம்பி. அவர் வெற்றி பெற்றால் நானே வெற்றி பெற்ற மாதிரி. எனக்கு பாடல் எழுத சொல்லிக் கொடுத்த நண்பன், இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ். என் முதல் படத்தில் எனக்கு உறுதுணையாக நின்றவர். நான் இயக்கினேன் என்று சொல்வதை விட, என்னை நிறைய பேர் இயக்கினார்கள். அவர்களிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்றார் அருண்ராஜா காமராஜ்.

அந்த காலத்தில் தொடர்ச்சியாக 100 நாட்கள் வெற்றி விழா கொண்டாடிக் கொண்டே இருந்தோம். ஒரு கட்டத்தில் இந்த விழாக்கள் எங்களுக்கு சலித்தே விட்டது.

இந்த கட்டத்தில் இப்படி ஒரு மகிழ்ச்சியான விழாவை பார்க்க எனக்கே மகிழ்ச்சியாக இருக்கிறது.

சிவகார்த்திகேயன் நட்பை பற்றி பேசியே ஆக வேண்டும். உதவி செய்யணுமே என்றோ கைமாறு எதிர்பார்த்தோ அவர் செய்யவில்லை. சிவகார்த்திகேயன் ஒரு மிகப்பெரிய ஹீரோ. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டுக்கு இந்த மாதிரி படத்தை எடுக்க வேண்டிய அவசியமே இல்லை.

ஆனால், நாயகியை மையப்படுத்திய ஒரு படத்தை தயாரித்து படத்தின் முதுகெலும்பாக இருந்து இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.

இந்தியில் அமீர்கான் தாரே ஜமீன் பார் படத்தின் மூலம் செய்த விஷயத்தை சிவா இங்கு செய்திருக்கிறார் என்றார் நடிகர் சத்யராஜ்.

திரு(மறு)மண அழைப்பிதழுக்கு பூஜை செய்த சௌந்தர்யா ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்த்தின் 2வது மகள் சவுந்தர்யா சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் என்பவரை முதலில் திருமணம் செய்தார்.

கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளில் நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றனர்.

இவர்களுக்கு பிறந்த ஒரு வேத் என்ற 4 வயது மகன் தற்போது சவுந்தர்யாவுடன் இருக்கிறார்.

இதனையடுத்து கோவையைச் சேர்ந்த தொழில்அதிபர் வணங்காமுடி என்பவரின் மகனும் நடிகருமான விசாகனை சவுந்தர்யா மறுமணம் செய்ய உள்ளார்.

எளிமையான முறையில் கடந்த மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது.

திருமணம் அடுத்த பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் சவுந்தர்யா தன் அம்மா லதா ரஜினியுடன் இரவு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.

அப்போது திரு(மறு)மண அழைப்பிதழை ஏழுமலையானின் திருப்பாதங்களில் வைத்துப் பூஜை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இணையத்தில் புதுப்படங்கள்; நடவடிக்கை எடுக்காத விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தியேட்டர்களில் படங்களில் வெளியாகும் அதே நாளில் திருட்டுத்தனமான இணையங்களிலும் படங்கள் வெளியாகிறது.

இந்த நடவடிக்கையை தடுக்காவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடப் போவதாக ராஜா ரங்குஸ்கி மற்றும் ஒரு குப்பை கதை படத்தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் சென்னை தி. நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில், இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் சக்தி வாசன் மற்றும் முகமது அஸ்லாம் ஆகியோர் மனு அளித்தனர்.

பின் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

சிறு தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இணையதள திரைப்படத் திருட்டு விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

கனா பட லாபத்தில் விவசாயிகளுக்கு உதவும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண்ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இப்படத்தின் வெற்றி விழாவில் அவர் பேசியதாவது…

நடிகர் தான் என் அடையாளம், அது தான் நிரந்தரம். தயாரிப்பாளர் என்பதெல்லாம் அதில் இருந்து கிடைத்தது தான். நிறைய படங்களுடன் ரிலீஸ் ஆனாலும், அதில் ஹீரோ இல்லாத ஒரு படம் தான் இது.

ஆனாலும் வெற்றியை எட்ட காரணம் அதை ரிலீஸ் செய்து கொடுத்த ஆருத்ரா ஃபிலிம்ஸ்க்கு நன்றி. வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனக்கு திருப்புமுனை தந்த படம், இது நான் தயாரித்த முதல் படம்.

என் சினிமா கேரியரின் இந்த இரண்டு முக்கியமான தருணங்களில் உடன் இருந்திருக்கிறார் சத்யராஜ் சார். திபு நினன் தாமஸ் இசை படத்துக்கு பெரிய பலம், வைக்கம் விஜயலக்‌ஷ்மி அவர்களின் குரலும் ஆசிர்வாதமும் நல்ல துவக்கத்தை தந்தது.

ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு தேசிய விருது கிடைக்கும் என்று ஒரு கமெண்ட் பார்த்தேன். அது இந்த படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி, வேறு படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி. அந்த விருதுக்கு தகுதியானவர்.

20 மேட்ச்க்கான காட்சிகளை படம் பிடித்து கொடுத்தாலும் அதை சிறப்பாக கட் செய்த ரூபனுக்கு நன்றி. தினேஷ் கிருஷ்ணன் மிக அழகாக ஒளிப்பதிவு செய்பவர். என்னை பாலசுப்ரமணியம் சாருக்கு பிறகு அழகாக காட்ட நிறைய முயற்சிகள் எடுப்பார்.

எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் எல்லா சுமையையும் தன் தோளில் தாங்கிய கலையரசுக்கு நன்றி. அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியுமடா என்ற வரி எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நான் நம்புகிறேன், உணர்கிறேன்.

இந்த படம் எங்கள் பேனருக்கு லாபகரமான படம். இந்த லாபத்தில் விவசாயிகளுக்கு முடிந்தவரை செய்ய இருக்கிறோம் என்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இந்த நிகழ்வில் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை மேடைக்கு அழைத்து கனா படக்குழுவினர் கௌரவித்தனர். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், நடிகர் தர்ஷன், நடிகை ரமா, பாடலாசிரியர்கள் ஜிகேபி, மோகன்ராஜன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

விஷால்-மைக்கேல் ராயப்பனிடம் ஒரு கோடி கேட்டு சிம்பு வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்து வெளியான படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்தில் சிம்புவுடன் தமன்னா, ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்தை சிம்பு ரசிகர்களே ரசிக்கவில்லை என்பதால் படம் படு தோல்வியை அடைந்தது.

இந்த படத்தில் நடிக்க 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது என்றும் பட தோல்வியை காரணம் காட்டி 1 கோடியே 51 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாக நடிகர் சிம்பு புகார் கூறி இருந்தார்.

இதுதொடர்பாக சிம்புவும், மைக்கேல் ராயப்பனும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால், மைக்கேல் ராயப்பனுக்கு ஆதரவாக ஒருதலைபட்சத்துடன் செயல்படுவதாக சிம்பு புகார் கூறியுள்ளார்.

மேலும் தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதாகவும் மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிம்பு மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

எனவே விஷாலும், மைக்கேல் ராயப்பனும் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் சிம்புவின் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.

இந்த மனு இன்று நீதிபதி கல்யாண சுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது.

நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்கள் கட்ட பஞ்சாயத்து செய்வதாக சிம்பு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், புதிய படங்களில் தாம் ஒப்பந்தம் செய்து கொள்வதில், தயாரிப்பாளர் சங்கமோ, நடிகர் சங்கமோ தலையிடக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

வாதங்களைக் கேட்ட நீதிபதி, இது தொடர்பாக ஜனவரி 18 ஆம் தேதிக்குள் பதிலளிக்க விஷால், மற்றும் மைக்கேல் ராயப்பனுக்கு உத்தரவு இட்டுள்ளார்.

மலேசியாவை மலைக்க வைக்கும் *பேட்ட* புரோமோசன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.

இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

இப்படத்தை மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தியாவை தவிர உலகமெங்கும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது.

இந்நிறுவனத்தின் விளம்பர யுக்தியை கண்டு உலக மக்கள் பலரும் வியந்து போய் உள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற ‘ட்ரிப்ட் சேலஞ்ச் 2018’ (DRIFT Challenge 2018) கார் ரேசில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட கார் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது.

மேலும் மலேசியாவில் பல கார்களில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அதுபோல் பேருந்துகளில் ஒட்டப்பட்ட போஸ்டர் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தற்போது மலேசியாவின் முக்கிய வீதிகளிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வீடியோக்கள் ஒளிபரப்பட்டு வருகிறது.

இதைப்பார்த்த ரஜினி ரசிகர்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற ரசிகர்களிடையும் அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மலேசியாவில் இதுவரைக்கும் யாரும் செய்யாதளவிற்கு ‘பேட்ட’ படத்தின் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது.

மலேசியாவில் திரைப்படத் துறையில் முத்திரை பதித்து வரும் மாலிக் ஸ்டிரீம்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்தின் 23ஆவது திரைப்படமான “பேட்ட” 3 கோடி வெள்ளிக்கு வசூல் சாதனை படைக்கும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ அப்துல் மாலிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் நடைபெற்ற விழாவில் ‘பேட்ட’ படங்கள் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அறிமுகம் செய்யப்பட்டது.

மலேசியாவில் 140 திரையரங்குகளில் “பேட்ட” திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் “உல்லாலா” பாடலை மலாய் பாடகர்கள் அஸ்வான், முவாட்ஸ் இருவரும் தமிழ்மொழியில் பாடி அசத்தியுள்ளனர். தற்போது, இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இத்துடன், மலாய் பாடகர்கள் பாடிய வீடியோ, மலேசிய வீதிகளில் செய்யப்பட்டுள்ள விளம்பர வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

Rajinis Petta movie promotions were rocking in Malaysia

More Articles
Follows