கட்டப்பாவுக்கு ராஜ மரியாதை; தமிழருக்கு பெருமை சேர்த்த சத்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் ஆகியோர் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவான படம் பாகுபலி.

இந்த இரண்டு படங்களும் இந்திய சினிமாவின் பெருமையை உலகளவில் கொண்டு சென்றது.

இதில் ராஜ விசுவாசியான கட்டப்பா பாகுபலியை கொல்வது போல காட்சி இருந்தது.

இதனால் சத்யராஜ் நடித்த கட்டப்பா கேரக்டருக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில், இதுநாள் வரை பாலிவுட் நடிகர்களுக்கு மட்டுமே கிடைத்த கவுரவம் இவருக்கு கிடைத்துள்ளது.

லண்டனில் உள்ள மேடம் துஸ்ஸாத் மியூசியம், சத்யராஜின் கட்டப்பா போன்ற மெழுகு சிலையை வைத்து கவுரவப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக தெலுங்கு நடிகர் பிரபாஸூக்கு பாகுபலி தோற்றத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டது.

லண்டனின் மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் தமிழ் நடிகர் ஒருவரின் மெழுகுச்சிலை இடம்பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Sathyaraj is the first tamilan got his statue at Madame Tussauds London Museum

இமயமலை சென்று திரும்பியவுடன் ரஜினியின் அடுத்த திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மையில் தனியார் கல்லூரியில் நடந்த ஒரு விழாவில் என்னை தேர்ந்தெடுத்தால் ‘தமிழக அரசியலில் எம்ஜிஆர் அமைத்த ஆட்சியை கொடுப்பேன் என்றார் ரஜினிகாந்த்.

இந்நிலையில்
இன்று அதிகாலை இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த் கூறியதாவது…

“ இமயமலையில் 10 அல்லது 15 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ளேன்.

அரசியல் இயக்கம் தொடங்குவது குறித்து முடிவெடுத்த பிறகு இமயமலை செல்கிறேன்.

புதிதாக எந்த வேண்டுதலும் இல்லை. தர்மசாலாவிலிருந்து இமயமலை சென்று, அடுத்து பாபா குகைக்கு சென்று வழிபட உள்ளேன் என தெரிவித்தார்.

இமயமலை சென்று திரும்பியதும்,ரஜினிகாந்த் கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகம் செய்யஇருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .

உதயநிதி வலையில் இரண்டு மேயாத மான்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்து வரும் படம் ‘கண்ணே கலைமானே’.

சீனுராமசாமி இயக்கும் இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார்.

‘கண்ணே கலைமானே’ படத்தை தொடர்ந்து உதயநிதி இயக்குனர் அட்லியின் உதவியாளர் ஈனாக் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் ‘மேயாத மான்’ படப் புகழ் பிரியா பவானி சங்கர் மற்றும் இந்துஜா கதாநாயகிகளாக நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது என்றும் இந்த படத்தின் பூஜை வருகிற தமிழ் புத்தாண்டன்று நடக்கவிருக்கிற்து என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது

அம்பிகா மகன்-லிவிங்ஸ்டன் மகள் இணையும் கலாசல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைத்தாய் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.சி.பாலு தயாரிக்கும் படம் ‘கலாசல்’.

இதில் அம்பிகாவின் மகன் ராம் கேசவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா அறிமுகமாகிறார்.

இவர்களுடன் ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன்பாப், அபிஷேக், பானுசந்தர், சாய்பிரியா ஆகியோர் நடிக்கிறார்கள்.

பாபுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு நிஜாமுதீன் இசை அமைக்கிறார். கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்கிறார்.

அஸ்வின் மாதவன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவர் சுந்தர்.சி, பத்ரி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது..

சினிமாவில் சாதனை புரிந்த அம்பிகாவின் மகன், லிவிங்ஸ்டன் மகள் இருவரையும் வைத்து முதல் படம் இயக்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

மனிதனின் தேவைகள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. நமக்கு தேவை இல்லை என்று நினைக்கிற வி‌ஷயங்களை கடவுளுக்கு காணிக்கையாக செலுத்திவிட்டு, வேண்டியதை கேட்டு பெறுவது ஒரு வியாபாரம் தான்.

நாம் வேண்டாம் என்று செலுத்துகிற காணிக்கை வி‌ஷயங்கள் கார்பரேட் முதலாளிகளால் அப்பாவி மக்கள் மீது எப்படியெல்லாம் திணிக்கப்பட்டு வியாபாரமாக்கப்படுகிறது என்பதுதான் இந்த படத்தின் கதை” என்றார்.

படப்பிடிப்பு வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது.

இரவுக்கு ஆயிரம் கண்கள் பட சாட்டிலைட் உரிமையை பெற்ற சன்டிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருள்நிதி நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் `இரவுக்கு ஆயிரம் கண்கள்’.

அறிமுக இயக்குநர் மு.மாறன் இயக்கும் இந்த படத்தை `ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் டில்லி பாபு தயாரித்திருக்கிறார்.

இந்த படத்தில் அருள்நிதி உடன் மஹிமா நம்பியார், அஜ்மல், வித்யா பிரதீப், சாயா சிங், சுஜா வருணி, ஆனந்த்ராஜ், ஜான் விஜய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இரவுக்கும், இரவில் நடைபெறும் பல மர்மங்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கும்.

அந்த வகையில் ஒரு பிரச்சனையில் இருந்து ஒரு சராசரி மனிதன் எப்படி வெளியே வருகிறான் என்பதை, ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி த்ரில்லர் கதையாக இந்த படம் உருவாகி உள்ளதாம்.

அண்மையில் இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் இதன் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.

சாம்.சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தை ஏப்ரலில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை விஜய் திருப்திபடுத்திடுவார்… : ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா ’என பெயரிட்டுள்ளனர்.

இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன், நடிகர் சத்யராஜ், படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட காலா டைரக்டர் ரஞ்சித் பேசியதாவது….

ஸ்டூடியோ கிரீன் என்ற பட நிறுவனத்தின் ஆதரவால் தான் என் திரையுலக பயணத்தைத் தொடங்கினேன். இந்நிறுவனம் தயாரித்த மெட்ராஸ் என்ற படம்தான் எனக்கான பாதையை தெளிவுப்படுத்தியது.

அதே போல் தமிழ் சினிமாவில் ‘நோட்டா ’படமும் மிக முக்கியமான படமாக இருக்கும். ஏனெனில் படத்தின் பெயரிலேயே அரசியல் இருக்கிறது. இயக்குநர் ஆனந்த் சங்கரின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும் என்று நம்புகிறேன்.

அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் தமிழிலும் வெற்றி பெறுவார்.

ஏனெனில் தமிழர்கள் திறமையை மதிப்பவர்கள். இதற்கு அட்டக்கத்தி மற்றும் அருவி என பல உதாரணங்களை சொல்லலாம். தமிழ் ரசிகர்களை விஜய் தன்னுடைய நடிப்பு திறனால் திருப்திபடுத்திடுவார் என நம்புகிறேன்.” என்று பேசினார்.

More Articles
Follows