தனுஷின் 2 படங்களை தயாரிக்கும் விஸ்வாசம் பட நிறுவனம்

Sathya Jyothi films going to Produce Dhanush 34 and 35th filmsசத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள அஜித்தின் விஸ்வாசம் வருகிற ஜனவரி 10-ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

இதனையடுத்து இந்த நிறுவனம் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த 2 படங்களை தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் தனுஷின் 34வது படத்தையும் ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமார் தனுஷின் 35வது படத்தையும் இயக்கவுள்ளனர்.

தனுஷின் 34-வது படத்திற்கு விவேக் – மெர்வின் இணைந்து இசையமைக்கின்றனர்.

இதுதவிர வெற்றிமாறனின் வடசென்னை 2, அசுரன், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என தனுஷ் பிசியாகி இருக்கிறார்.

இவையில்லாமல் `எனை நோக்கி பாயும் தோட்டா’ படமும் வெளியீட்டுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு படத்தையும் தனுஷ் இயக்கி வருகிறார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Sathya Jyothi films going to Produce Dhanush 34 and 35th films

Overall Rating : Not available

Latest Post