‘ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா பதில் சொல்ல வேண்டும்…’ மன்சூர் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வாரம் டிசம்பர் 5ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்தார்.

ஆனால் அவர் இறப்பதற்கு முன்னால் கிட்டதட்ட இரண்டு மாதங்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தார்.

அப்போது அவர் உடல்நிலை குறித்த படங்களோ, குரல் பதிவோ எதுவும் வெளியாகவில்லை.
இதனால் அவரது மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக பொதுமக்களே பேச ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

செப்டம்பர் 21ஆம் தேதி வரை நலமாக இருந்த முதல்வர் திடீரென எப்படி உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுவார்.

ஒரு முதல்வர் என்றால் அவர் அருகே 24 மணி நேரமும் டாக்டர் குழு ஒன்று இருக்கும். அதையும் மீறி அவருக்கு எப்படி உடல்நலம் இல்லாமல் போகும்?

அப்படியே உடல்நலம் இன்றி போனாலும் அவருடைய உடலுக்கு என்ன? கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன? என்பதை மறைப்பது ஏன்?

உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் இதுகுறித்து தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து உண்மையில் என்ன நடந்தது என்பதை விசாரணை செய்ய வேண்டும்.

அவரின் மரணத்திற்கு யார் காரணமாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்

நான் ஏற்கனவே அதிமுகவில் இருந்தவன் தான். நான்கைந்து முறை அம்மாவை குடும்பத்துடன் நேரில் பார்த்துள்ளேன்.

ரொம்ப அன்பானவர், பாசமிக்கவர். அப்படிப்பட்ட ஒருவர் மறைவு எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்னுடைய குற்றச்சாட்டு என்னவெனில் ஏன் யாருமே இதுகுறித்து கேள்வி கேட்கவில்லை. ‘ஏன் என்று கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை’ என்று எம்ஜிஆரே பாடியுள்ளார்.

இது என்ன நாடா? இல்லை அடிமைகள் வாழும் தேசமா? கேள்வி கேட்க கூட முடியாதென்றால் என்ன ஜனநாயகம்? அதைவிட செத்து மடியலாமே

மருத்துவமனையில் ஐசியூ வில் அட்மிட் ஆனாலும் கண்ணாடி வழியாக பார்க்க அனுமதிப்பதுண்டு.

ஆனால் ஜெயலலிதாவை கவர்னர் உள்பட யாரையுமே பார்க்க அனுமதிக்காதது ஏன்?

எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை சொல்லிவிட்டேன். எனது சந்தேகத்தை தீர்க்க வேண்டியது 73 நாட்கள் உடனிருந்து கவனித்த சசிகலாவும், அப்பல்லோ பிரதாப் ரெட்டியும்தான்.

தேவை பட்டால் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேள்வி கேட்பேன். அதோடு சட்ட ரீதியாக வழக்கும் போடுவேன்.

இவ்வாறு மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

HIV பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நிதி திரட்டும் பிரசன்னா-ஸ்னேகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டூடியோ 9 நிறுவனத்தின் மூலம் ஆர்.கே சுரேஷுடன் இணைந்து கிட்டத்தட்ட 18 படங்களை விநியோகம் செய்தவர். நாசர் அலி. தற்போது Naro Media என்ற நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.

அ.நாசர் அலி (CEO) மற்றும் Dr.ரொஃபினா சுபாஷ் (COO) இருவரும் இணைந்து HIV யினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காகவும், அவர்களின் மேம்பட்டுக்காகவும் நிதி திரட்டும் வகையில் “Just Cricket” எனும் கிரிக்கெட் போட்டியை நடத்தினர்.

இந்த போட்டியில் சென்னையை சார்ந்த 32 அணிகள் கலந்துகொண்டனர்.

இதனால் வரும் நிதியானது HIV யினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நலனுக்கும். மருத்துவ செலவுக்கும். வழங்கப்படுகிறது.

நவம்பர் 27ம் தேதி ஞாயிற்று கிழமை அன்று தொடங்கிய இந்த போட்டியானது சென்ற வாரம் டிசம்பர் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து நடைபெற்றது.

இதன் இறுதிப் போட்டியானது நேற்று டிசம்பர் 11ம் தேதி நந்தனம் YMCA மைதானத்தில் நடை பெற்றது.

இதில் திரைப்படத் தயாரிப்பாளர் R.K .சுரேஷ் மற்றும் இயக்குனர்கள் V.Z.துரை, மீரா கதிரவன் போன்றோரும் நடிகர்கள் ஷாம்,பரத், ஸ்ரீகாந்த், பிரசன்னா, நரேன், போஸ் வெங்கட், ரமணா, அசோக், சந்தோஷ், ப்ரஜன், கோலிசோடா கிஷோர், மாஸ்டர் மகேந்திரன், தீனா மற்றும் நடிகைகள் சினேகா, சங்கீதா க்ரிஷ், தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் தியா ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் “சென்னை 600028” படக்குழுவும், பழைய வண்ணாரப்பேட்டை படக்குழுவும், விழித்திரு படக்குழுவும் வருகைதந்து போட்டியை உற்சாகப்படுத்தினார்..

இந்நிகழ்வில் சினேகா பால் போட பிரசன்னா பேட்டிங் செய்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை உற்சாகப்படுத்தினார். ஷாம் குழந்தைகள் பாடிய பாடலுக்கு கண்கலங்கி ஆறுதல் கூறினார்.

இயக்குனர் வெங்கட் பிரபுவும் அவரது சென்னை 600028 படக்குழுவும் வெற்றிபெற்ற எப் சி சி அணியோடு கிரிக்கெட் விளையாடியாடினார். அனைத்து பிரபலங்களும் இணைந்து ரூபாய் 25,000/- க்கான முதல் பரிசை வழங்கினர். இரண்டாம் பரிசை சீ ஹார்ஸ் அணியும் தட்டிச் சென்றது. அவர்களுக்கு 15,000/- ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

நடிகர் பிரசன்னா குழந்தைகளிடையே பேசும்போது இங்கே யாருடைய வாழ்வும் நிரந்தரம் அல்ல. இருக்கும்வரை சந்தோசமாக வாழ்வோம். நீங்கள் யாரும் தனிப்பட்டவர்கள் அல்ல.

நாங்கள் உங்களுக்காக இருக்கிறோம் என்றபோது குழந்தைகள் அனைவரும் இளகினர். மொத்தத்தில் இந்நிகழ்வு நட்சத்திரங்களுக்கும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் ஒரு உருக்கமான நிகழ்வாக அமைந்தது.

இந்த தொடரின் முதல் பரிசை HOTEL MILLATH நிறுவனமும் இதர பரிசுகளை திரு. அரவிந்த், வேலு மிலிட்டரி ஹோட்டல், அம்மா நானா, WHITE CLIFS ஆகியோரும் வழங்கி வீரர்களை கவுரவப்படுத்தினர் .

மேலும் “7up” நிறுவனம் வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் “Revive” பானம் வழங்கி உற்சாகப்படுத்தினார். நந்தனம் YMCA (பவிலியன்) மைதானத்தில் நிகழ்வு நடைபெற்றது.

பைரவா ஆடியோ & பட ரிலீஸ் தேதி உறுதியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிக்க, பரதன் இயக்கத்தில் உருவான பைரவா படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

படத்தின் டீசர் பெற்ற சாதனைகளை இதற்கு உதாரணமாக சொல்லாம்.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதியை சற்றுமுன் உறுதி செய்துள்ளனர்.

பைரவா பாடல்கள் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது.

இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2017 ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Bairavaa audio and movie release date confirmed

விக்னேஷ் சிவனை வியக்க வைத்த பாத்ரூம் பணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுடன் மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுபவர் தொழிலதிபர் சேகர் ரெட்டி.

இவரது வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோடிக்கணக்கான தங்க கட்டிகளும், ரூபாய் நோட்டுகளும் இவரது வீட்டில் இருந்து கைப்பற்றியுள்ளனர்.

தற்போது கர்நாடகாவில் ஹவாலா முறையில் பண பரிவர்த்தனை செய்யும் ஒரு டீலர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அப்போது அவரது பாத்ரூமில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிறைய தங்க நகைகளும், பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் பலவற்றையும், புதிய 2000 ரூபாய் நோட்டு கட்டுகளையும் வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

பொதுமக்களோ புதிய ஒரு 2000 ரூபாய் நோட்டை வாங்க கால்கடுக்க வங்கி வாசல்களில் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இப்போ அடிச்ச 2000 ருபாய் நோட்டா இவ்ளோ இருக்குன்ன? என ட்விட்டரில் தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார்.

Vignesh ShivN (@VigneshShivN)
Lol ! Ippo aducha 2000 rs notes eh ivalooVaaa

‘ஒன்லி சிங்கிள்…’ சிவகார்த்திகேயன் முடிவுக்கு என்ன காரணம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் சிவகார்த்திகேயன் தன்னுடைய கேரியரை துவங்கும்போது, சிறு வேடம் மற்றும் இரட்டை நாயகர்கள் வேடம் என ஆரம்பித்தார்.

அதன்பின்னர் தனி ஹீரோவாக நடித்து, இன்று அதிகாலை காட்சிக்கே தன்னுடைய படங்கள் திரையிடப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

ரெமோ படத்திற்கு பிறகு வரிசையாக 3 படங்களை ஒப்புக் கொண்டுள்ளார்.

இவரிடம் கதை சொல்ல நிறைய இயக்குனர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சில இயக்குனர்கள் இவரிடம் டபுள் ஹீரோ கதைகளை கொண்டு சென்றார்களாம்.

“டபுள் ஹீரோ சப்ஜெக்ட் வேண்டாம். ஒன்லி சிங்கிள் ஹீரோன்னா ஓகே.

இப்போதான் மார்கெட் உயர்ந்து வருகிறது.

இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.” என்று கூறிவிடுகிறாராம்.

லட்சுமி மேனனின் முடிவுக்கு ரசிகர்கள் ஆதரவு இருக்குமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் லட்சுமி மேனன் அறிமுகமான கும்கி மாபெரும் வெற்றிப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து வந்த சுந்தர பாண்டியன், குட்டிப்புலி, மஞ்சப்பை உள்ளிட்ட படங்களும் வெற்றிப் பெற்றதால் ராசியான நடிகை என பெயர் எடுத்தார்.

மேலும் குடும்ப பாங்கான வேடங்களை செய்து வந்ததால் பெண்களிடமும் ஆதரவு கிடைத்து வந்தது.

ஆனால் சமீபகாலமாக வாய்ப்புகள் குறைந்து விட்டன.

எனவே, இனி கிளாமர் வேடங்களிலும் நடிக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இதுநாள் வரை லட்சுமியை ஹோம்லியாக பார்த்த ரசிகர்கள் இனி அப்படி பார்ப்பார்களா? ஆதரவு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More Articles
Follows