அஜித் படத்தில் வில்லன் ரோல்; சசிகுமார் ரியாக்ஷன் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என பன்முகம் கொண்டவர் சசிகுமார்.

வெற்றிவேல் படத்தை தொடர்ந்து விரைவில் இவரது நடிப்பில் கிடாரி படம் வெளியாகவுள்ளது.

எனவே அப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

அப்போது அஜித் படத்தில் நீங்கள் வில்லனாக நடிக்கிறீர்களா? என கேட்டதற்கு…

‘அஜித் எனக்கு நண்பன். எனக்கு பிடித்த மனிதர் அவர்.

அவருக்கு வில்லனாக நான் ஏன் நடிக்க வேண்டும்? இது தொடர்பாக யாரும் என்னை அணுகவில்லை’ என்றார்.

கபாலி பெயரில் 165 கிலோ வெள்ளி விற்பனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் தாணு தயாரித்து உருவான கபாலி படத்தின் எதிர்பார்ப்பு இந்திய திரையுலகம் அறிந்ததே.

இப்படத்தின் விளம்பரங்கள் அனைவரையும் வியக்க வைத்தது. விமானம் முதல் டீசர்ட் வரை எதையும் விட்டுவைக்கவில்லை.

மேலும் முத்தூட் நிறுவனம் கபாலி பெயரில் பல கிராம்களில் ரஜினி படம் பொறித்த வெள்ளி நாணயங்களை வெளியிட்டது.

தற்போது ரஜினி பெயரில் விற்கப்பட்ட கபாலி நாணயங்களை

அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதாவது இதுவரை 165 கிலோ வெள்ளியை விற்று இருக்கிறார்களாம்.

மீண்டும் ரெமோ கூட்டணி; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

24ஏஎம் ஸ்டூடியோஸ் சார்பாக ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் ரெமோ. இது இந்நிறுவனத்தின் முதல் படைப்பாகும்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பிரதியை தயாரிப்பாளர் பார்த்துள்ளார்.

இப்படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் இது முக்கியமான படமாக இருக்கும் என்ற தெரிவித்துள்ளார்.

மேலும் இதன் இயக்குனர் பாக்யராஜீக்கு தன் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்து அட்வான்ஸ் தொகையையும் அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மில்லியன் லைக்ஸை பெற்ற விஜய் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் ஒரு சில ஹீரோக்களை மட்டுமே குழந்தைகளுக்கு பிடிக்கும்.

அதில் முக்கியமானவர் நடிகர் விஜய்.

இவரது நடனத்தாலும் காமெடியாலும் குழந்தைகள் வரை கவர்ந்து இருக்கிறார்.

இதனிடையில் விஜய், தன் குட்டி ரசிகை ஒருவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தள பக்கத்தில் வெளியானது.

அது அனைவரையும் கவர்ந்ததால், ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

ரசிகர்களை மதிக்கவில்லை; சர்ச்சை குறித்து விக்ரம் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி 70வது இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

இதுபோன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரிலும் இந்தியா சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் கிராண்ட் பரேட் நடைபெற்றது.

பெடரேஷன் ஆஃப் இந்தியன் அசோஷியேசன் (எஃப்.ஐ.ஏ) சார்பில் நடத்தப்பட்ட இவ்விழாவிற்கு அபிஷேக்பச்சன், விக்ரம் உள்ளிட்டோர் சென்றனர்.

இவ்விழாவில் விக்ரம் யாரையும் கண்டு கொள்ளாமல் செல்போனையே பார்த்து கொண்டிருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து எஃப்.ஐ.ஏ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்..

“தன்னுடைய பட ப்ரோமோஷன் பணிகளில் பிசியாக இருந்த போதும், ஒரு இந்தியராக இந்தியா டே பரேடில் கலந்து கொண்ட விக்ரமுக்கு நன்றி.

பிரகாஷ் எம். சுவாமி சமூகவலைத்தளத்தில் விக்ரமை பற்றி எழுதியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம். அதில் உண்மையில்லை.

அவருக்கும் இந்நிகழ்ச்சிக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. ஆனால் அவரின் பதிவால் விக்ரம் மிகவும் வருத்தமடைந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியன்று சிவகார்த்திகேயனின் டபுள் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நடித்துள்ள படம் ரெமோ.

இதன் பர்ஸ்ட் லுக் வெளியானது முதல், இதன் பல்ஸ் பல மடங்கு உயர்ந்துள்ளது.

மேலும் இப்படத்திற்கு இளைஞர்களின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்களை வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இத்துடன் சிரிக்காதே என்ற பாடலின் ஆங்கில பதிப்பை வெளியிட இருக்கிறார்களாம்.

இப்பாடல் ‘COME CLOSER’ (கம் க்ளோசர்) என்ற வரிகளுடன் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

More Articles
Follows