சுந்தர்.சியின் உதவியாளர் இயக்கும் படத்தில் சசிகுமார்-நிக்கி கல்ராணி

sasikumar and nikki galraniசசிகுமார், அஞ்சலி, அதுல்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள `நாடோடிகள் 2′ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

தற்போது, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் `கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தில் நடித்து வருகிறார் சசிகுமார்.

இதனையடுத்து உருவாகவுள்ள தன் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது அவரின் 19-வது படமாக உருவாகிறதாம்.

சுந்தர்.சி.-யிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த கதிர் என்பவர் இயக்க இப்படத்தில் நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.

இவர்களுடன் சதீஷ் நடிக்கிறார்.

செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் டி.டி.ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ்., இசையமைக்க, சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார்.

சபு ஜோசப் எடிட்டிங் செய்ய சுரேஷ் என்பவர் கலை இயக்குனராக பணிபுரிய உள்ளார்.

நடிகர் & நடிகைகள் :
சசிகுமார் ( Hero) நிக்கி கல்ராணி ( Heroine), தம்பி ராமைய்யா , யோகி பாபு, கும்கி அஸ்வின், சதிஷ், ஆடம்ஸ், ராதா ரவி, சந்தான லட்சுமி , சரவணா சக்தி, சசிகலா, மணி, யமுனா சிலம்பம் சேதுபதி, ரமணி, விஜய குமார், சுமித்ரா , ராஜ் கபூர், ரேகா , தாஸ், மணி சந்தனா , நமோ நாராயணன், மணி மேகலை, மீரா, மனோபாலா, லாவண்யா , சிங்கம் புலி, சுந்தர், ரஞ்சனா, நிரோஷா, ரமேஷ் கண்ணா, சமர், ரஞ்சிதா, ரம்யா, சாம்ஸ், தீபா கிரி

தொழில்நுட்ப குழு :
இயக்கம் : K .கதிர்வேலு
ஒளிப்பதிவாளர் : சித்தார்த்
இசை : சாம் C .S
படத்தொகுப்பு : V .J சபு ஜோசப்
கலை இயக்கம் : சுரேஷ்
நிர்வாக தயாரிப்பு : N .சிவகுமார்
தயாரிப்பு மேற்பார்வை : பாண்டியன் பரமசிவம்
தயாரிப்பு : T .D ராஜா
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அஹ்மத்

Overall Rating : Not available

Latest Post