மிக்ஸி கிரைண்டருடன் *சர்கார்* சக்ஸஸ் பார்ட்டி; வம்பிழுக்கும் விஜய்.?

Sarkar team celebrated success party with Mixie and Grinderசன் பிக்சர்ஸ் தயாரிப்பு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம், விஜய் நடிப்பு என பெரும் எதிர்பார்ப்பில் உருவான சர்கார் திரைப்படம் கடந்த 6ஆம் தேதி தீபாவளி தினத்தில் வெளியானது.

இதில் அரசியல் தொடர்பான வார்த்தைகளும், அரசு கொடுக்கும் இலவச பொருட்களான டிவி, மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை விமர்சிக்கும் விதமாகவும் காட்சிகள் இருந்தன.

எனவே ஆளும் கட்சி அதிமுக.வினர் எதிர்ப்பு தெரிவிக்க பிரச்சினை பெரிதானது.

பின்னர் அந்த காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை திரையிட்டு வருகின்றனர்.

இப்படம் 6 நாட்களில் உலகமெங்கும் ரூ.200 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படம் வெளியாகி 6 நாட்கள் ஆன நிலையில் படக்குழுவினர் வெற்றி விழாவை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இதில் நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்த கேக்கில் மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்டவைகளை டிசைன் செய்து கேக் வடிவில் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

படத்தில் தானே மிக்ஸி, கிரைண்டர் காட்சிகளை நீக்க சொன்னீர்கள். இப்போது நாங்கள் எங்கள் கேக்கில் வைத்துள்ளோம். இதை உங்களால் என்ன செய்ய முடியும்? என்று விஜய் தரப்பு கேட்கிறதா?

மீண்டும் ரியல் தமிழக சர்காரை வம்பிழுக்கிறதா இந்த ரீல் சர்கார்..? என்பதுதான் தெரியவில்லை.

Sarkar team celebrated success party with Mixie and Grinder

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0…
...Read More
சர்கார் படத்தை அடுத்த விஜய் நடிக்கவுள்ள…
...Read More
தமிழகத்தை போன்றே கேரளாவிலும் விஜய்க்கு ரசிகர்கள்…
...Read More

Latest Post