கேரளாவில் சறுக்கிய *சர்கார்*.; விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தை போன்றே கேரளாவிலும் விஜய்க்கு ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர்.

175 அடி உயர கட்-அவுட், வெளியான 300 தியேட்டர்களில் 220 தியேட்டர்களில் ரசிகர்கள் சிறப்பு காட்சி என களைக்கட்டியது.

மேலும் விஜய்யின் பெண் ரசிகைகளுக்கு சிறப்புக் காட்சி என கேரளாவில் சர்காருக்கு ராஜ மரியாதை இருந்தது.

கேரளாவில் மட்டும் முதல் நாள் 6 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக கூறப்பட்டது.

அதாவது கேரளாவில் ‘பாகுபலி 2’ படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்தது என்றனர். ’மெர்சல்’ வசூலை ஒப்பிடும் போது, இது பெரிய வசூல் அல்ல என்கின்றனர்.

ஆனால், 2ஆம் நாள் முதல் வசூல் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

திரைப்படம் முழுவதும் தமிழக அரசியலையே மையப்படுத்தி எடுக்கப்பட்டதால் கேரள மக்களிடையே அவை எடுபடவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

ஆனால் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் சர்காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

உலகம் முழுவதும் 6 நாட்களில் இதுவரை 200 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆந்திராவில் 6 நாட்களில் சுமார் 13 கோடியை வசூலித்துள்ளது. கர்நாடகாவிலும் 6 நாட்களில் 11 கோடி வசூலை கடந்துள்ளதாம்.

Sarkar box collection reports Disappointment for Vijay fans

மணிரத்னம் படத்திற்கு இசையமைக்கும் 96 பட புகழ் கோவிந்த் வசந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த 96 படத்தின் இமாலய வெற்றிக்கு பாடல்களும் ஒரு காரணமாக அமைந்தன.

அந்த படத்திற்கு இசையமைத்தவர் கோவிந்த் வஸந்தா.

இவர் தற்போது விஜய்சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

தமிழ் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே துல்கர், பஹத் பாசில் ஆகியோரின் மலையாள படங்களுக்கு இசையமைத்து அசத்தியவர் இவர்.

இந்நிலையில் மணிரத்னம் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளதாம்.

இளையராஜாவுக்கு பிறகு மணிரத்னம் படங்களுக்கு ரஹ்மான் தானே இசை, பின்னர் கோவிந்த வசந்தா? எப்படி என்றுதானே யோசிக்கிறீர்கள்.?

இது மணிரத்னம் இயக்கும் படமல்ல. அவர் கதை எழுதி தயாரிக்கும் படத்திற்குதான் கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தை தனசேகரன் என்பவர் இயக்குகிறார்.

இந்தியாவை தோனி வழிநடத்தனும்; விக்னேஷ் சிவனின் விபரீத ஆசை..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் மகேந்திர சிங் தோனி.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் இவருக்கு, தமிழகத்தில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த ரசிகர்கள் பட்டாளத்தில் டைரக்டர் விக்னேஷ் சிவனும் ஒருவர்.

அவர் தோனியை சந்தித்து புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் பதிவிட்டு தன் கருத்தை பதிவு செய்துள்ளார்.

“எனது வாழ்வின் மிகவும் சந்தோஷமான மன நிறைவான நாள். தோனியை சந்திப்பது எனது வாழ்நாள் கனவு.

இதற்கு காரணமான கடவுளுக்கும் உலகத்திற்கும் நன்றி. ஒருநாள் இவர் நம் நாட்டை வழி நடத்துவதைப் பார்க்க காத்திருக்கிறேன். இது என்னுடைய கனவு’ என பதிவிட்டுள்ளார்.

எனவே தோனியை இவர் அரசியலுக்கு வரவேற்கிறாரா? என பலரும் கேட்கின்றனர்.

அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீர்ர் இம்ரான்கான் வெற்றி பெற்று 22வது பிரதமராக பதவியேற்றார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

வாக்கை விற்று வாழ்க்கையை அடகு வைக்காதீர்கள்… கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய பின்னர் தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் கமல்ஹாசன்.

அண்மையில் அரூரில் மக்கள் மத்தியில் பேசினார் கமல். அவர் பேசியதாவது…

ஓட்டு பேரம் பேச நான் இங்கு வரவில்லை. மக்களுக்கு இலவசங்களை தருவேன் என்று வாக்குறுதியும் தர வரவில்லை.

மக்களுக்குத் தேவையானவற்றை மக்களே பெற்றுக் கொள்ளும் வகையில் ஓர் அரசு அமைந்திட எங்கள் கட்சி உழைத்திடும்.

ஓட்டிற்காக ஒரு நாள் பணத்தை பெற்றுக் கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கு உங்கள் வாழ்க்கையை அடமானம் வைத்து விடாதீர்கள்.

சில ஆயிரம் ரூபாய்களுக்கு ஆசைப்பட்டு உங்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான பணத்தை விற்று விடாதீர்கள்.

மக்களின் முழு அதிகாரத்தையும் மக்களிடமே கொடுக்கும் கிராம சபைகளில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்.” என்று பேசினார்.

த்ரிஷாவை இயக்கும் விஷால்..; 5 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் தந்தை ஒரு தயாரிப்பாளராக இருந்தாலும் ஒரு டைரக்டர் ஆக வேண்டும் என சினிமா துறைக்கு வந்தவர் விஷால்.

எனவேதான் நடிகர் அர்ஜீனிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார்.

ஆனால் அர்ஜீன் சிபாரிசின் பேரில் நடிகராக மாறினார்.

பின்னர் நடிப்பு, தயாரிப்பாளர் என பயணிக்க ஆரம்பித்த இவரின் 25வது படம் சண்டக்கோழி2.

தற்போது தெலுங்கு டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்கான அயோக்யா என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

இதனையடுத்து 25 படங்களை நடிகராக முடித்துவிட்டு முதன்முறையாக ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

இதில் த்ரிஷாவை நாயகியாக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் முழுக்க விலங்குகளை மையப்படுத்தை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சமர் என்ற படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்தவர் த்ரிஷா. தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக்ஸி கிரைண்டருடன் *சர்கார்* சக்ஸஸ் பார்ட்டி; வம்பிழுக்கும் விஜய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம், விஜய் நடிப்பு என பெரும் எதிர்பார்ப்பில் உருவான சர்கார் திரைப்படம் கடந்த 6ஆம் தேதி தீபாவளி தினத்தில் வெளியானது.

இதில் அரசியல் தொடர்பான வார்த்தைகளும், அரசு கொடுக்கும் இலவச பொருட்களான டிவி, மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை விமர்சிக்கும் விதமாகவும் காட்சிகள் இருந்தன.

எனவே ஆளும் கட்சி அதிமுக.வினர் எதிர்ப்பு தெரிவிக்க பிரச்சினை பெரிதானது.

பின்னர் அந்த காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை திரையிட்டு வருகின்றனர்.

இப்படம் 6 நாட்களில் உலகமெங்கும் ரூ.200 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படம் வெளியாகி 6 நாட்கள் ஆன நிலையில் படக்குழுவினர் வெற்றி விழாவை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இதில் நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்த கேக்கில் மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்டவைகளை டிசைன் செய்து கேக் வடிவில் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

படத்தில் தானே மிக்ஸி, கிரைண்டர் காட்சிகளை நீக்க சொன்னீர்கள். இப்போது நாங்கள் எங்கள் கேக்கில் வைத்துள்ளோம். இதை உங்களால் என்ன செய்ய முடியும்? என்று விஜய் தரப்பு கேட்கிறதா?

மீண்டும் ரியல் தமிழக சர்காரை வம்பிழுக்கிறதா இந்த ரீல் சர்கார்..? என்பதுதான் தெரியவில்லை.

Sarkar team celebrated success party with Mixie and Grinder

More Articles
Follows