டீக்கடையில் தொடங்கி உலக அரசியல் பேச வரும் உளவாளி ‘சர்தார்’

டீக்கடையில் தொடங்கி உலக அரசியல் பேச வரும் உளவாளி ‘சர்தார்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘விருமன்’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் அடுத்து, வரும் தீபாவளிக்கு வெளியாகும் படம் ‘சர்தார்’.

கார்த்தியின் தொடர் ஹிட்டை தொடர்ந்து வரும் சர்தார் படத்துக்கு கடும் உழைப்பை கொட்டி.. பிரமாண்ட சினிமாவாக உருவாக்கி வருகிறார்கள் பிரின்ஸ் பிக்சர்ஸ் குழுவினர்.

#இரும்புதிரை, #ஹீரோ ஆகிய வித்தியாசமான படங்களுக்கு பிறகு 3வது படமாக கார்த்தியுடன் கை கோர்த்திருக்கிறார், டைரக்டர் பி.எஸ்.மித்ரன் .

சர்தார் என்றால் பெர்சிய மொழியில் படைத் தலைவன்’னு பொருள். ‘சர்தார்’ ஒரு ஸ்பை த்ரில்லர் கதை. உளவாளி என்பது நமக்கு தெரிந்ததெல்லாம் நாடுவிட்டு நாடு நடக்கிறதுதான்.

ஆனால் நம்மைச் சுற்றியே அவ்வளவு உளவாளிகள் இருக்காங்க. உளவுங்கிறது நாட்டோட ராணுவ ரகசியம் தெரிஞ்சுக்கிற வேலை மட்டுமில்லை.

நமக்கு பக்கத்தில் இருக்கிற ஒரு டீக்கடை பையனிலிருந்து கூட அதை ஆரம்பிக்கலாம். ரொம்ப சிம்பிளான இடத்திலிருந்து தொடங்கி மிகப்பெரிய இடம் நோக்கி இன்டர்நேஷனல் வரைக்கும் உளவு போகுது.

இதில் உலக அரசியலும் இருக்குது. இது சாமானியனை எப்படி பாதிக்கிறது என்பது பற்றிய கதை இது.

பாரதியார் கவிதை போல…
‘நீ என்பது யார்? உடலா, உயிரா, செயலா’..
நம்ம அடையாளம் , செய்கிற செயல்தான். உளவாளிகளும் அப்படித்தான். அலெக்ஸாண்டர், ஹிட்லர் உட் பட பெரும்பாலானோர் வரலாற்றின் முக்கியமான சாதனைகளுக்கு பின்னாடி முக்கிய காரணமாக இருப்பது உளவாளிகள் தான்.

கார்த்தி, ‘சிறுத்தை’யில் ரத்னவேல் பாண்டியனாக விரைப்பும், ஜாலியாக இரண்டிலும் வந்தார்.

இதில் ஜாலியான போலீஸ்காரன் . அலப்பறையா இருக்கும்.

வயதான அப்பாவாக கார்த்தி கன கச்சிதம். இளமை, வயதானவர் இருவருக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கும்.

மூணு மணி மேக்கப்.. அந்த மேக்கப் போட்டு டயலாக் பேசி நடிக்கவே கஷ்டம். இதில் கூடவே ஆக்ஷன் வேறு இருக்கும். அது ரொம்பவே கஷ்டம். இப்படி மெனக்கிட்டு கேரக்டருக்கு உயிர் கொடுத்துள்ளார் கார்த்தி.

ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன்னு
”இரண்டு பேருக்கும் முக்கிய கதாபாத்திரம். மற்றொரு முக்கிய கேரக்டரில்
லைலா நடிச்சிருக்காங்க.

கார்த்தியின் படங்களிலேயே பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார் எஸ்.லட்சுமண்குமார். வரும் தீபாவளி இப்படம் வெளியீடு.

யானை முகத்தானை பார்த்துட்டு அதே டைரக்டருக்கு கால்ஷீட் கொடுத்த யோகிபாபு

யானை முகத்தானை பார்த்துட்டு அதே டைரக்டருக்கு கால்ஷீட் கொடுத்த யோகிபாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் ‘லால் பகதூர் ஷாஸ்த்தி’, ‘வரி குழியிலே கொலபாதகம்’, ‘இன்னு முதல்’ என மூன்று ஹிட் படங்கள் டைரக்ட் செய்தவர் ரெஜிஷ் மிதிலா.

ரெஜிஷ் மிதிலா

இவர் “யானை முகத்தான்” படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.

இந்த படத்தை பற்றி டைரக்டர் பேசுகையில்….

“எனக்கு தமிழ் படங்கள் ரொம்பப் பிடிக்கும். மலையாளத்தில் எனது படம் மூலம் ரமேஷ் திலக் எனக்கு அறிமுகமானார். என்கிட்ட இருந்த ஒரு கதையெய் கேட்ட ரமேஷ், இதற்கு யோகி பாபு சரியாக இருப்பார் என்று சொல்லி அவர்தான் யோகி பாபுவை அறிமுகப்படுத்தினார்.

அதுதான் ‘யானை முகத்தான்’.
பேண்டஸி படமான இதில்,
ஆட்டோ டிரைவராக ரமேஷ் திலக் வருகிறார். விநாயகரின் தீவிர பக்தர். எங்கே கணபதியை பார்த்தாலும் கரம் கூப்பாமல், உண்டியலில் காசு போடாமல் போக மாட்டார்.

ஆனால் கொஞ்சம் பிராடு. அப்படியிருக்கும் ரமேஷ் திலக்கிடம், விநாயகம் என்று சொல்லிக்கொண்டு யோகி பாபு அறிமுகமாகிறார். ஒரு கடவுளை நாம் வேண்டிக்கும்போது, நம்ம கஷ்டங்களை தீர்க்கச் சொல்லி மன்றாடும் போது அவரே நேரில் வருவார் என நாம் எதிர்பார்க்க மாட்டோம்.

அப்படி அவர் வந்து விட்டால், நான் தான் கடவுள் என்று அவர் நிரூபிக்க போராட வேண்டியிருக்கும். ரமேஷ் திலக் வாழ்க்கையில் யோகி பாபு வந்ததால் என்ன வினோத நிகழ்வுகள் நடக்கிறது. அதனால் அவர்கள் வாழ்க்கையில் நடக்கிற திருப்பம் என்ன என்பதே இப் படம்.

யோகிபாபு

ராஜஸ்தானில் ஆரம்பிச்சு,
சென்னை வரைக்கும் பட பிடிப்பு நடத்தி இருக்கோம்.

கதை சொன்னதுமே பிடிச்சுப் போய் தேதிகளை கொடுத்து ரெடியாகிட்டார் யோகி பாபு. அவரே, கருணாகரன், ஊர்வசின்னு கூப்பிட்டு நடிக்கச் சொல்லிட்டார்.

இதனால் எனக்கு முக்கிய கேரக்டர்களுக்கான பாதி வேலை குறைஞ்சு போச்சு. ஒரு கேரக்டருக்குள்ளே வந்து உட்காரும்போது அவருக்குன்னு தனி பாணி வந்திடுது. ஒரு தடுமாற்றமும் இல்லை. வாழ்க்கையோட அடிமட்டத்திலிருந்து யோகி பாபு வந்ததால், டக்குனு உணர்வுகளை கொண்டு வந்து விடுகிறார்.

அடுத்த படத்திலும் அவர் தான் ஹீரோ. அதில் இன்னும் யோகி பாபுவை நல்லா பயன்படுத்தணும்னு ஆசையா இருக்கு. வயலண்ட் அட்வென்சர் படம் அது. படம் முழுக்க சிரபுஞ்சி,மேகாலயாவில் தான் நடக்கும்.

‘வா கிளம்புவோம்’னு யோகி பாபு சொல்லிக்கிட்டே இருக்கார்.. இந்த படத்தை ரிலீஸ் செய்து விட்டு அதற்கு தயாராக வேண்டும்.

நாட்டில் நடக்கிற அத்துமீறல்களை, மனிதர்களின் குற்றத்தை அழகா கோபப்படாமல் பேண்டஸியில் கதையாக சொல்லலாம். குழந்தைகள் வரைக்கும் போய் மனசில் நிற்கணும். உணர்வுபூர்வமான விஷயங்களையும் வெச்சிருக்கோம்.

ஒரு காட்சியில் நடிக்கும் போது ஒருத்தர் மட்டுமே டாமினேட் பண்ணனும்னு நினைச்சுட்டால் அவர் மட்டுமே ரீச் ஆவாங்க. இன்னொருத்தர்கிட்டே பார்வை போகாது. அப்படி இல்லாமல் எல்லோரையும் பின்பற்றி பேசி யோகி பாபு நடிக்கிறது தான் அழகு.

நல்ல பரந்த சினிமா அறிவு இப்ப ரசிகர்கள்கிட்டே வந்திருக்கு. அப்படிப் பட்டவங்களை நம்பித்தான் இந்த யானை முகத்தானை எடுத்திருக்கிறேன்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் எளிய ஆரம்பமாகி, ராஜஸ்தான் பகுதிகளில் நடந்தது.

படக்குழு விவரம்..:

யோகிபாபு, ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி லீலா ( ‘மருது’ பாட்டி ), நாகவிஷால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து, இயக்கம் : ரெஜிஷ் மிதிலா
தயாரிப்பாளர்கள்: ரெஜிஷ் மிதிலா, லிஜோ ஜேம்ஸ்:
தயாரிப்பு நிறுவனம்: தி கிரேட் இந்தியன் சினிமாஸ்
ஒளிப்பதிவு : கார்த்திக்Sநாயர்
படத்தொகுப்பு : சைலோ
இசையமைப்பாளர்: பரத் சங்கர்
ஆடை வடிவமைப்பாளர்: குவோச்சாய்.S
ஒப்பனை: கோபால்
நிர்வாக தயாரிப்பு : சுனில் ஜோஸ்
தயாரிப்பு மேற்பார்வை : ஜெயபாரதி
முதன்மை இணை இயக்குனர்: நிதிஷ் வாசுதேவன்
இணை இயக்குனர்: கார்த்தி
இணை இயக்குனர்: அகில் V மாதவ்
உதவி இயக்குனர்கள்: பிரஜின் MP,
தண்டேஷ் D நாயர், வந்தனா:
விளம்பர வடிவமைப்பாளர்: சிவகுமார்
ஸ்டில்ஸ்: ஜோன்ஸ்
Pro: ஜான்சன்

யோகிபாபு

Yogi Babu’s next fantsy film is titled Yaanai Mugathan

பர்ஸ்ட் காமெடியன்.. நெக்ஸ்ட் ஹீரோ.. இப்போ சிங்கர் ஆக மாறிய சந்தானம்

பர்ஸ்ட் காமெடியன்.. நெக்ஸ்ட் ஹீரோ.. இப்போ சிங்கர் ஆக மாறிய சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதலில் காமெடியனாக தன் சினிமா பயணத்தை தொடங்கியவர் சந்தானம். பல படங்களில் காமெடி செய்து பின்னர் ஹீரோவாக மாறினார்.

தற்போது தான் ஹீரோவாக நடித்து வரும் ‘கிக்’ படத்தில் பாடகராக மாறியுள்ளார் சந்தானம்.. அதன் விவரம் இதோ…

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம் கிக். இவருடன் தன்யா ஹோப், ராகினி திவேதி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலுக்கான விளம்பர வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

அதில் “சாட்டர்டே இஸ் கம்மிங்கு…” (Saturday is cominguu) என்று ஆரம்பிக்கும் பாடலை முதல் முறையாக நடிகர் சந்தானம் சொந்தக் குரலில் பாடியிருக்கிறார்.

இப்பாடலை கவிஞர் விவேகா எழுதியிருக்கிறார். இப்பாடலின் முழு வரிகளுக்கான வீடியோ அக்டோபர் 10ஆம் தேதி மாலை 06.03 மணிக்கு வெளியாகவுள்ளது.எல்லா துயரத்தையும் மறந்து சிரிச்சு, சந்தோஷமா பொழுது போக்குற படம், சந்தானத்தின் “கிக்”.

நமக்கு இருக்கிற கஷ்டம், துக்கம், வறுமை, ஏழ்மை, சோகம்னு எல்லா துயரத்தையும் மறந்து சிரிச்சு, சந்தோஷமா பொழுது போகணும்.. அப்படி நினைத்து வந்தது தான் இந்த ‘கிக்’ படம்.

பல ஹிட் படங்களை கன்னடத்தில் கொடுத்து விட்டு இப் படம் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார் பிரசாந்த் ராஜ்.

டாம்-ஜெர்ரி மாதிரி தான் ஹீரோவும் ஹீரோயினும். விளம்பர நிறுவனத்தில் பணிபுரிகிற சந்தானம் எப்படியாவது கொஞ்சம் குறுக்கு வழியில் கூட போய் வெற்றியை அடைய துடிக்கிறவர்.

‘தாராள பிரபு’ ஹீரோயின் தான்யா ஹோப், நேர்மையாய் விளம்பரத் துறையில் முன்னேற துடிக்கிற கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இரண்டு பேரும் எலியும் பூனையுமாக மோதி கொள்வது தான் கதை. சந்தானத்தை விரும்பி பார்ப்பவர்களுக்கான படம் இது.

எமோஷன், சென்டிமென்ட், டிராமா எல்லாம் கலந்து இருக்கிற ஜனரஞ்சகமான இப்படத்தில், தம்பி ராமையா, பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, ஒய்.ஜி.மகேந்திரா, மொட்டை ராஜேந்திரன், ஷகிலா, ராகிணி திவேதி, வையாபுரி, சிசர் மனோகர், கிங்காங், முத்துக்காளை, சேஷு, கூல் சுரேஷ், அந்தோணி என பல ஆர்டிஸ்ட் இருக்காங்க..

கன்னடத்தில் கவனிக்கப்படுகிற அர்ஜுன் ஜன்யா தான் இசையமைச்சிருக்கார். ஐந்து பாடல்கள் அவரின் இசை முற்றிலும் புதுசு. தமிழ் படம் என்றதும் சந்தோஷமாக கேட்டுட்டு பண்றார்.

இங்கே ஒரு நல்ல இடத்தையும் பிடிக்கணும், முத்திரையையும் பதிக்கணும்னு என்பது அவர் எண்ணம்.

கேமரா : சுதாகர் ராஜ் .
தயாரிப்பு: நவீன் ராஜ்
தயாரிப்பு மேற்பார்வை: பாக்யா
பி ஆர் ஓ: ஜான்சன் .

நயன்தாராவும் த்ரிஷாவும் ஒரே படத்தில் நடிக்கிறார்களா?

நயன்தாராவும் த்ரிஷாவும் ஒரே படத்தில் நடிக்கிறார்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

த்ரிஷா தற்போது மலையாளப் படமான ‘ராம்’ படத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா தொற்று காலத்துக்கு முன்பே படம் அறிவிக்கப்பட்டது, ஆனால் கால தாமதமானது.

தயாரிப்பாளர் ரெட் கார்பெட் சுரேஷ்க்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட மோகன்லால், ஜீத்து ஜோசப் இணைந்து ‘ராம்’ படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க முடிவு செய்துள்ளனர்.

மேலும் நயன்தாராவை முக்கியமான கேரக்டரில் நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, அவர் முதல் பாகத்தின் இறுதியில் தோன்றி அதன் தொடர்ச்சியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என தெரிகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சினிமா வாழ்க்கைக்கு புதிய அர்த்தம் கொடுத்தார் – ஜெயம் ரவி நெகிழ்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சினிமா வாழ்க்கைக்கு புதிய அர்த்தம் கொடுத்தார் – ஜெயம் ரவி நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொன்னியின் செல்வனில் அருண் மொழி வர்மனாக நடித்த ஜெயம் ரவியின் நடிப்பை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டியுள்ளார்.

இது குறித்து ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில், “அந்த 1 நிமிட உரையாடல் எனது நாளை, எனது ஆண்டாக மாற்றியது, மேலும் எனது வாழ்க்கைக்கு ஒரு புதிய அர்த்தத்தை சேர்த்தது.

உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் குழந்தைத்தனமான உற்சாகத்திற்கும் நன்றி தலைவா.

ரஜினிகாந்தின் அங்கீகாரம் தனது சினிமா வாழ்க்கைக்கு புதிய அர்த்தத்தை கொடுத்துள்ளது என்று ரவி தெரிவித்துள்ளார்.

சங்கீத மேடைகளில் சதமடித்த ‘மைக்’ மோகனுக்கு என்ன வச்சிருக்காரோ விஜய்ஸ்ரீ.? நாளை தெரியும்!

சங்கீத மேடைகளில் சதமடித்த ‘மைக்’ மோகனுக்கு என்ன வச்சிருக்காரோ விஜய்ஸ்ரீ.? நாளை தெரியும்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980 – 90களில் தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகர்களில் ஒருவர் மோகன்.

இவர் நடித்த இதயக் கோயில், உதயகீதம், குங்குமச்சிமிழ், பயணங்கள் முடிவதில்லை, மெல்ல திறந்தது கதவு, மௌனராகம் என பல படங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

இவரது படங்களில் பெரும்பாலும் மேடை கச்சேரி இடம் பெறும். அதுபோல இவரது படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகும்.

எனவே இவருக்கு மைக் மோகன் என்ற செல்ல பெயரும் உண்டு. இளையராஜா இசையில் எஸ்பிபி பாடிய பாடல்களுக்கு இவர் நடித்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து பெண்கள் மத்தியிலும் இவருக்கு அமோக ஆதரவு கிடைத்தது.

இவரது படங்கள் குறைந்தபட்சமாக 100 நாட்களை தாண்டி தான் ஓடும். பெரும்பாலான படங்கள் வெள்ளிவிழா கண்டதால் வெள்ளிவிழா நாயகன் (சில்வர் ஜூப்ளி ஸ்டார்) என்ற பெயரும் இவருக்கு உண்டு.

இவரது படங்கள் வெளியாகி 30 – 35 வருடங்களை கடந்து விட்டாலும் தற்போதும் இரவு நேரங்களில் இவரது பாடல்களை கேட்கும் ரசிகர்கள் ஏராளம். அதுபோல ரேடியோ / டிவிக்களிலும் இரவு நேரங்களில் இவரது பாடல்கள் தான் ஒலித்து வருகிறது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

தன்னுடைய பாடல்கள் ஹிட் ஆனதற்கு முக்கிய காரணம் எஸ்பிபி என்பதால் அவரது இறுதிச் சடங்கில் கொரோனா காலத்திலும் கலந்து கொண்டார் மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கிட்டத்தட்ட 15 வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த மைக் மோகனை திரும்பவும் நாயகனாக நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீ.

இவர் இயக்கி வரும் ‘ஹரா’ படத்தில் மோகன், குஷ்பூ, யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், ரயில் ரவி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மோகன் சினிமாவில் பயணித்து வரும் 45 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் மோகன் ரசிகர்கள் நாளை அக்டோபர் 7ல் விழா எடுக்கின்றனர்.

‘கோகிலா’ முதல் ‘ஹரா’ வரை என்ற பெயரில் 45 இயர்ஸ் ஆப் மோகனிசம் (45 Years of Mohanism) என்ற இந்த நிகழ்ச்சியை மிக பிரம்மாண்டமாக நடத்த உள்ளனர்.

இந்த நிலையில் லீயாண்டர் லீ மார்ட்டி இசையில் ‘ஹரா’ படத்தில் இடம்பெற்றுள்ள கயா முயா என்ற பாடலை நாளைய நிகழ்ச்சியில் ரிலீஸ் செய்யவிருக்கிறார் விஜய் ஸ்ரீ.

பல சங்கீத மேடைகளில் பாடி ரசிகர்களை மகிழ்வித்த மோகன் தற்போது ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதால் அவரது புதிய பாடல் எப்படி இருக்கும்? அந்த பாடலை எப்படி உருவாக்கி இருப்பார் விஜய் ஸ்ரீ? என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர் .

இந்தப் பாடல் புரோமோவை தற்போது இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலை விஜய்ஸ்ரீ எழுத சக்தி முரளிதரன் மற்றும் மகாலிங்கம் பாடியுள்ளனர்.

இந்தப் படத்தை விஜய் ஸ்ரீ உடன் இணைந்து கோவை மோகன்ராஜ் என்பவர் தயாரித்து வருகிறார்.

நாளை இந்த பாடல் வெளியாக உள்ளதால் காத்திருந்து பார்ப்போம்..

Make way for the first single #KayaMuya ? from #SilverJubileeStar #Mohan’s #Haraa releasing tomorrow ? Oct 7th

Here is the promo! ?
https://t.co/PmKbzh8Zbf

@khushsundar @iYogiBabu #filmistreet @manobalam @vijaysrig @onlynikil @leanderleemarty @SonyMusicSouth #SPMohanraja https://t.co/TKGkjL6Kvj

ஹரா

first single Kaya Muya from SilverJubileeStar Mohan’s Haraa releasing tomorrow

More Articles
Follows