சினிமாவிலும் ஹீரோவாகும் ‘சரவணா ஸ்டோர்ஸ் லெஜண்ட்’ சரவணன்

New Projectதமிழகத்தின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று சரவணா ஸ்டோர்ஸ்.

இங்குள்ள தொழிலாளர்களின் ஹீரோவாக பார்க்கப்படுபவர் இதன் உரிமையாளர் லெஜண்ட் சரவணன்.

தனது நிறுவன விளம்பரங்களில் இவரே நடித்து அசத்தி வருகிறார்.

விளம்பரங்களை கலாய்த்து மீம்ச்கள், விமர்சனங்கள் வந்தபோதிலும், அசராமல் நடித்தார்.

தற்போது ஹீரோவாக தமிழ் சினிமாவில் களமிறங்குகிறார் லெஜண்ட் சரவணன்.

இவர் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை ஜேடி -ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கவுள்ளனர்.

இப்படம் வரும் 2020ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய உள்ளனர்.

இப்பட ஹீரோயின் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.

Overall Rating : Not available

Latest Post