தீபாவளி ட்ரீட்: சர்கார் சரவெடி; சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி அதிரடி

Saravana Stores Annachi plans new advertisement with TV Starsஇந்தாண்டு தீபாவளிக்கு விஜய் நடித்த சர்கார் திரைப்படம் வெளியாகவுள்ளது. எனவே விஜய் ரசிகர்கள் இந்த சரவெடிக்காக காத்திருக்கின்றனர்.

தீபாவளி என்றால், சினிமா மட்டும்தானா..? பட்டாசு, இனிப்பு, புத்தாடைகள் இதெல்லாம் சேர்ந்தால் தானே தீபாவளி உற்சாகமாய் இருக்கும்.

இதில் புத்தாடை எடுக்க சென்னையில் பல கடைகள் இருந்தாலும் பலரின் நினைவுக்கு வருவது சரவணா ஸ்டோர்ஸ் தான்.

அதற்கு முக்கிய காரணம் நடிகைகளுடன் சரவணன் அண்ணாட்சி ஆடி பாடும் விளம்பரங்கள் முக்கிய காரணம்.

எந்த டிவி சேனலை வைத்தாலும் அதில் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை நிச்சயம் அண்ணாச்சி வந்துவிடுவார்.

தற்போது தயாராகி வரும் புதிய விளம்பரத்தில் டிவியில் பிரபலமான தொகுப்பாளர்கள், காமெடி நடிகர்கள், சீரியல் நடிகைகள் ஆகியோருடன் ஆடி பாடவிருக்கிறாராம்.

இந்த விளம்பர படங்களை இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரி இயக்க பிருந்தா நடனம் அமைத்துள்ளார்.

ஆக தீபாவளி நெருங்கும் சமயத்தில் அண்ணாச்சியின் ஆட்டம் ஆரம்பம் ஆகும் என எதிர்பார்க்கலாம்.

Saravana Stores Annachi plans new advertisement with TV Stars

Overall Rating : Not available

Related News

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0…
...Read More

Latest Post