கமல் என்னுடன் சேரட்டும்; ரஜினி என்ன செய்தார்.? சரத்குமார் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் இருவரும் அரசியல் களத்தில் குதித்துள்ளனர்.

இவர்களின் வருகைக்கு ஒரு பக்கம் ஆதரவும் மறுபக்கம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.

இந்நிலையில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் இவர்களின் வருகை குறித்து அண்மையில் பேசியுள்ளதாவது….

நான் கடந்த 20 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன். ஓய்வு பெறும் காலத்தில் நான் அரசியலுக்கு வரவில்லை.

கமலுடன் கூட்டணி வைப்பீர்களா? என்கிறார்கள். வேண்டுமானாலும் அவர் வந்து என்னுடன் கூட்டணி சேரட்டும்.

காவிரி விவகாரத்தில் ரஜினி உறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை” என்றார்.

Sarathkumar talks about Rajini and Kamal political entry

நேற்று விவசாயிகள்; இன்று ரங்கம்மாள்; உதவிகள் செய்யும் அபிசரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் பாட்டியாக நடித்து புகழ் பெற்றவர் திருமதி ரங்கம்மாள் பாட்டி. வடிவேலுவின் படங்களில் அடிக்கடி இவரை பார்த்திருக்கலாம்.

இவர் தமிழ் திரைப்படங்களில் அவ்வபோது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன் மூலம் வரும் ரூபாயை கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார்.

சில நாட்களுக்கு முன்பு ரங்கம்மாள் பாட்டி மெரீனா கடற்கரையில் பிச்சை எடுத்து வந்ததாக செய்தி ஒன்று வெளியானது.

ஏற்காட்டில், நடுக்காட்டில் ‘சூரபத்மன்’ படப்பிடிப்பில் இருந்த நடிகர் அபிசரவணன், இந்த தகவலை கேள்விப்பட்டதும் வருத்தமடைந்தார்.

உடனே சென்னையில் உள்ள நண்பர்களையும் நடிகர்சங்கத்தினரையும் தொடர்புகொண்டு ரங்கம்மாள் பாட்டியுடன் பேசி அவரை ஏற்காட்டில் நடைபெறும் படப்பிடிப்புக்கு அழைத்து வரச்செய்தார் அபிசரவணன்.

தன்னுடன் ஐந்து நாட்கள் அவரை தங்க வைத்ததுடன் படப்பிடிப்பிலும் அவரை உற்சாகமாக கலந்துகொள்ள செய்தார்.

இந்தநிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து ஊர் திரும்பிய நடிகர் அபிசரவணன் பாட்டியின் வீட்டிற்கு சென்றார்.

அங்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருப்பதைக்கண்டு வருந்திய அபிசரவணன், அந்த வீட்டிற்கு தேவையான கட்டில், பேன், மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்கிக்கொள்வதற்காக ரங்கம்மாள் பாட்டியிடம் உதவித்தொகையாக பத்தாயிரம் ரூபாயை வழங்கினார்.

மேலும் அவரை நடிகர்சங்கத்துக்கு தனது வண்டியிலேயே அழைத்துச்சென்ற அபிசரவணன், சங்கம் மூலமாக அவருக்கு உதவிகள் கிடைக்கவும் தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளார்.

அபிசரவணனின் இந்த அன்பும் கரிசனமும் தன்னை நெகிழ வைத்ததாகவும் அவருடன் இருந்த நாட்களில் தான் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் ரங்கம்மாள் பாட்டி நெகிழ்ச்சியுடன் கூறினார்.

விவசாயிகளாக இருக்கட்டும், நடிகர்களாக இருக்கட்டும் நலிந்த நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு வளர்ந்து வரும் நடிகர் என்கிற நிலையிலும் கூட தம்மால் இயன்ற உதவியை செய்து வரும் அபிசரவணனை தாராளமாக பாராட்டலாம்.

Actor Abi Saravanan helped Old Actress Rangammal

புதிய படங்கள் ரிலீஸ் இல்லை; விஜய்-அஜித்-சூர்யா ரசிகர்கள் ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் கியூப், யூஎப்ஒ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் மூலம் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

இதற்காக சம்பந்தபட்ட அந்த நிறுவனங்கள் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலித்து வருகின்றன.

புதிய படங்களை திரையிடுவதற்கு டிஜிட்டல் சேவை அமைப்புகள் ரூ.22 ஆயிரத்தில் இருந்து ரூ.34 ஆயிரம் வரை கட்டணமாக வசூலித்து வருகின்றன.

இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இல்லையெனில் புதிய படங்களை திரையிட மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

அதன்படி மார்ச் 2 வெள்ளிக்கிழமை முதல் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதனால் தியேட்டர்களில் பழைய படங்களையே திரையிடும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் அஜித், விஜய், சூர்யா ரசிகர்களை கவர தமிழகத்தில் உள்ள ஒரு சில தியேட்டர்கள் அந்த நடிகர்களின் படங்களை திரையிட உள்ளனர்.

அதன்படி மெர்சல், வேதாளம், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை திரையிடுவதால் அந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Vijay Ajith Suriya fans were happy because of Producers Qube issue strike

புதுச்சேரியில் ரஜினி மக்கள் மன்றத்தின் சேவை மைய காவல்படை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெளிநாட்டு ரசிகர்களை ஒருங்கிணைக்க புதுச்சேரியில் ரஜினி மக்கள் மன்றத்தின் சேவை மைய காவல் படை தொடங்கப்பட்டுள்ளது.

இதனை பிரான்ஸ் நாட்டு ரஜினி ரசிகர் திறந்து வைத்தார்.

இவர் பிளஸ் 2 பொதுத்தேர்வில் புதுச்சேரியில் முதல் 3 இடம் பெறுவோருக்கு ரஜினிகாந்த் கையால் சிறப்புப் பரிசு தரவும் திட்டமிட்டு இருக்கிறாராம்.

இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்ற மாநில பொறுப்பாளர் ரஜினி சங்கர் கூறியதாவது..

“புதுச்சேரி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பலர் பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அதில் பலரும் வெளிநாட்டில் வசிக்கின்றனர்.

ரஜினி ரசிகர்களை ஒருங்கிணைக்க உள்ளனர். தற்போது வெளிநாட்டிலிருந்து வந்த ரசிகர் பிரகாஷ், புதுச்சேரிக்காரர்.

அவர் இந்த ஒருங்கிணைப்புப் பணியை செய்ய உள்ளார். அதற்காக தனி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

ரஜினியின் பிரான்ஸ் ரசிகர் பிரகாஷ் கூறுகையில்… “வெளிநாட்டில் ரஜினி ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களை ஒருங்கிணைக்கவே இம்முயற்சி.

தன் கட்சி தொண்டர்கள் இனி காவலர்கள் போல் இருக்க வேண்டும் என்று ரஜினி கூறியதால் இப்பெயரை வைத்துள்ளோம்” என கூறினார்.

Puducherry Rajini fans created a team for Abroad Rajini fans

தில்லுக்கு துட்டு பட 2ஆம் பாகத்தை தொடங்கினார் சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hand Made Films சந்தானம் நடித்து, தயாரித்து வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற “ தில்லுக்கு துட்டு “திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.

இப்படத்தின் பூஜை ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்றது.

இதில் நாயகன் சந்தானம், நாயகி தீப்தி ஷெட்டி, இயக்குநர் ராம்பாலா , ஒளிப்பதிவாளர் தீபக் குமார்பதி, இசையமைப்பாளர் ஷபிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் படபிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ளது.

Santhanams Dhillukku Dhuttu part2 shooting starts

 

 

தமிழ் புத்தாண்டில் தடம் பதிக்க வரும் அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குற்றம் 23 படத்தை தொடர்ந்த நடிகர் அருண்விஜய் மற்றும் தயாரிப்பாளர் இந்திரகுமார் இணைந்துள்ள திரைப்படம் தடம்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் இப்படத்தில் அருண்விஜய்யுடன் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியில் உருவான “தடையறத் தாக்க” பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர்களின் கூட்டணியில் உருவாகும் “தடம்” படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தைத் தொட்டுள்ளது.

படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் தற்போது “தடம்” படத்தின் டப்பிங் இன்று துவங்கியது.

இறுதிக் கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் “தடம்” தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Arun Vijay plans to release his Thadam movie on Tamil New Year

More Articles
Follows