குற்றங்களை தடுக்க இளைஞர் படை அமைக்கும் சரத்குமார்..!

குற்றங்களை தடுக்க இளைஞர் படை அமைக்கும் சரத்குமார்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sarath kumarநாளுக்கு நாள், இந்தியாவில் கொலை குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் ஸ்வாதி என்ற இளம் பெண் கொலை செய்யப்பட்டார்.

தப்பித்து சென்ற அந்தக் கொலைக்காரன் ராம்குமாரை நேற்று இரவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இதுபோன்ற குற்றங்களை தடுக்க நடிகர் சரத்குமார் ஒரு புதிய இளைஞர் படையை அமைக்க இருக்கிறாராம்.

அதுகுறித்து தன் முகநூல் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது…

“மரம் வெட்டுபவன் குலம் நாசம் என்பார்கள், ஆனால் சக மனிதனை வெட்டுவதை வேடிக்கை பார்க்கும் அளவிற்கு மனித குலம் குரூரமானதாக ஆகிவிட்டதா?

மனித இனத்தை நல் வழியில் எடுத்து செல்ல மீண்டும் ஒரு கண்ணனோ, ஏசுவோ, புத்தரோ, காந்தியோ பிறக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறோமா?

ஒரு சம்பவத்தை பற்றி பேசி தாம் நல்லவர் என்று பறை சாற்றிக்கொள்ளும் வகையில் சிலர் சில கருத்துக்களை உதிர்த்து வருகின்றனர்.

பலருக்கும் இது பொழுது போக்கு போல் ஆகிவிட்டது. பேசுபவர்கள் அனைவரும் இப்படிப்பட்டவர் என சொல்ல முடியாது.

இது போன்ற குற்றங்களுக்கு வாய் வார்த்தைகளால் தீர்வு சொல்வதை விட செயலில் இறங்கினால்தான் கொடுமைகளை தடுக்க முடியும்

ஸ்வாதியை கொலை செய்த கொலையாளி உருவாகுவற்கு அது போன்ற எண்ணங்கள் உருவாகுவது இந்த சமுதாயத்தில் இருந்துதான்.

இந்த சமுதாயத்தை உருவாக்குவதில் நமக்கும் பங்கு இருக்கிறது.

இதற்கு விடை காணும் முயற்சியாக 100 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க இருக்கிறேன்.

அவர்களை தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும், தன்னை பாதுகாத்து கொள்பவர்களாகவும் உருவாக்குவேன்.

பின்னர் இது போன்ற கொடுமைகளை கண் எதிரே நிகழாமல் தடுப்பவர்களாகவும் உருவாக்குவேன்.

என்னுடைய இந்த முயற்சிக்கு ஆதரவு அளிப்பவர்களும், இது போன்ற பணிகளுக்கு விருப்பம் உள்ளவர்களும் என்னை தொடர்பு கொள்ளலாம்.

அரசியல் சாயம் இல்லாத மக்கள் பணியாற்றிட விரும்பும் மக்களை வேண்டி அழைக்கிறேன்.”

என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சண்டக்கோழியில் விஷாலுடன் டூயட் பாடும் மஞ்சிமா..!

சண்டக்கோழியில் விஷாலுடன் டூயட் பாடும் மஞ்சிமா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal and manjimaசண்டக்கோழி படம் பெரிய வெற்றிப் பெற்றதை தொடர்ந்து, மீண்டும் அந்த கூட்டணி இணைகிறது.

இரண்டாம் பாகமாக உருவாகவுள்ள இப்படத்தில் மீண்டும் விஷாலே நாயகனாக நடிக்கிறார்.

விஷாலின் தந்தையாக நடித்த ராஜ்கிரணே இதிலும் அந்த கேரக்டரில் நடிக்கிறார்.

லிங்குசாமி இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மதி ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

இந்நிலையில் நாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார்.

இவர் சிம்புவுடன் அச்சம் என்பது மடமைடயா மற்றும் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணுவுடன் ஒரு படம் என வாய்ப்புக்களை தொடர்ந்து பெற்று வருகிறார்.

‘விக்னேஷ் சிவன் கொடுத்தா வாங்குறேன்…’ நயன்தாரா ஓபன் டாக்..!

‘விக்னேஷ் சிவன் கொடுத்தா வாங்குறேன்…’ நயன்தாரா ஓபன் டாக்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara and vignesh shivanதென்னிந்திய சினிமாவை தன் அழகாலும் நடிப்பாலும் கலக்கி வருபவர் நயன்தாரா.

இவர் பல விருதுகளை வென்று ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று சைமா (SIIMA) விருது விழாவில் 2015ஆம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான (நானும் ரெடிளதான்) விருதை பெற்றார்.

அப்போது பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் அந்த விருதை நயன்தாராவுக்கு கொடுக்க காத்திருந்தார்.

ஆனால் அந்த விருதை விருது பெற காரணமாக இருந்த அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் கையால் பெற வேண்டும் என நயன்தாரா தெரிவித்தார்.

இதை தொடர்ந்து விழாவில் சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

‘சம்பள பாக்கி இருக்கு… அதான் அப்படி…’ சிம்பு தரப்பு பதிலடி..!

‘சம்பள பாக்கி இருக்கு… அதான் அப்படி…’ சிம்பு தரப்பு பதிலடி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Simbuவிண்னைத் தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார் என்றவுடனே ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.

‘அச்சம் என்பது மடமையடா’ என்ற தலைப்பிடப்பட்ட இப்படம் விறுவிறுப்பாக நடந்தது.

ஆனால் ‘தள்ளிப் போகாதே’ பாடல் மற்றும் சில காட்சிகள் படமாக்கப்படவில்லை என்றும் சிம்பு படப்பிடிப்புக்கு வரவில்லை என்றும் கெளதம் மேனன் அண்மையில் தெரிவித்தார்.

இதுகுறித்து, சிம்பு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது..

“கெளதம் மேனனை சிம்பு ரொம்பவே மதிக்கிறார். ஆனால், சம்பள பாக்கி இருக்கிறது.

அதனைக் கொடுத்துவிட்டால் மீதமுள்ள காட்சிகளை முடித்துக் கொடுத்துவிடுவார் சிம்பு.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

‘வீரப்பன் படத்துக்காக டைம், மணி வேஸ்ட் பண்ணாதீங்க…’ முத்துலட்சுமி

‘வீரப்பன் படத்துக்காக டைம், மணி வேஸ்ட் பண்ணாதீங்க…’ முத்துலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

killing veerappan movie stillsபிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா கில்லிங் வீரப்பன் என்ற படத்தை கன்னடத்தில் எடுத்தார்.

அப்படத்தின் தமிழ் பதிப்பு ‛வில்லாதி வில்லன் வீரப்பன்’ என்ற பெயரில் தமிழகத்தில் நேற்று வெளியானது.

இப்படம் தொடர்பாக சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி. அப்போது அவர் பேசியதாவது…

“வீரப்பன் படத்தில் வரும் கதைகள் முற்றிலும் தவறானது. என்னைப் பற்றியும், எனது கணவர் பற்றியும் தவறாக சித்தரித்துள்ளார் இயக்குனர்.

இப்படத்தை யாரும் பார்க்க வேண்டாம். உங்கள் பணத்தையும் நேரத்தையும் செலவழித்து வீணாக்காதீர்கள்.

என் கணவர் பற்றிய உண்மை சம்பவங்களை நானே விரைவில் படமாக எடுக்கிறேன்.

அப்போதுதான் பல உண்மையான விஷயங்கள் தெரிய வரும். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும், என் கணவருக்கும் எவ்விதமான தொடர்பு கிடையாது.” என்றார்.

மேலும் ராம் கோபால் வர்மா மீது கர்நாடக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் முத்துலட்சுமி. தமிழகத்திலும் விரைவில் வழக்கு தொடர உள்ளதாக குறிப்பிட்டார்.

அஜித்துக்கும் அவரது ரசிகர்களுக்கும் நன்றி…’ – அருண் விஜய் நெகிழ்ச்சி..!

அஜித்துக்கும் அவரது ரசிகர்களுக்கும் நன்றி…’ – அருண் விஜய் நெகிழ்ச்சி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arun vijay stillsசென்ற வருடத்தின் சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான சைமா விருதுகள் நேற்று நடந்த SIIMA விருது விழாவில் வழங்கப்பட்டது. அப்போது சிறந்த வில்லன் விருது நடிகர் அருண் விஜய்க்கு கொடுக்கப்பட்டது.

என்னை அறிந்தால் படத்தில் அருமையாக மிரட்டி நடித்திருந்தார் இவர்.

விருது பெறுவதற்காக மேடையேறிய அருண்விஜய் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.

அப்போது…. ‘ரொம்ப சந்தோஷம். நிச்சயமாக இது கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றிதான்.

என்னை அறிந்தால் படத்தில் நடிக்கும்போது ஒரு சகோதரனாகவும் ஒரு நண்பனாகவும் என்னை ஊக்கப்படுத்தியவர் அஜித் சார்.

அவருக்கு இப்போது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயத்தில் எனக்கு பேராதரவு அளித்த அவரது ரசிகர்களுக்கும் நன்றி’ என்றார்.

இவ்விழாவில் சிவகார்த்திகேயனின் ரெமோ பட செஞ்சிட்டாளே சிங்கிள் ட்ராக் பாடலும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows