தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் சிகிச்சை அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளையும் கேட்டு கொண்டார்.
அப்போது ’PPE கிட் எனப்படும் பாதுகாப்பு கவச அடை அணிந்து கொரோனா சிகிச்சை பிரிவுகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா சிகிச்சை பிரிவில் நேரடியாக முதல்வரே ஆய்வு மேற்கொண்டது மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக சமக தலைவரும் நடிகருமான சரத்குமார் அவரது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது…
“கொரோனா சிகிச்சை பிரிவில் பாதுகாப்பு கவச உடை அணிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆய்வு செய்ததில் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு பெரும் நம்பிக்கையும், ஊக்கமும் அளித்தது மட்டுமன்றி பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டதை வரவேற்கிறேன்.
கொரோனா பாதிப்பால் பெற்றோரில் ஒருவரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் பாதுகாப்புக்காக தலா 5 லட்சம் வங்கியில் வைப்புத்தொகை, கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை என நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் தேவையான பணிகளை செய்யும் தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Sarath Kumar praises CM MK Stalin
