சந்தோஷ் பாபு ஐஏஎஸ், பத்ம ப்ரியா விலகல்.; மக்கள் காலி மய்யமாகும் மக்கள் நீதி மய்யம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பல நிர்வாகிகள் விலகி வருகின்றனர்.

கமீலா நாசர் கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

அதன் பின்னர் துணைத் தலைவர் மகேந்திரன்.. “தலைவர் கமல் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆனால் அப்படி செய்வது போல தெரியவில்லை.

தமிழகத்தை சீரமைப்பதற்கு முன்னர் அவர் தன் கட்சியை சீரமைக்க வேண்டும். அவர் விரும்பினால் நண்பராக தொடர்வேன்” என அறிக்கை விட்டு பிரஸ் மீட் வைத்து கட்சியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் இன்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு விலகுவதாக அறிவித்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில்… “மக்கள் நீதி மய்யம் கட்சியில் தான் வகித்த பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுகிறேன்.

எனது தனிப்பட்ட காரணங்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு. நட்பையும் நேசத்தையும் காட்டிய கமல் சாருக்கும் அவரது குழுவுக்கும் நன்றி” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் சில நிமிடங்களில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த மநீம வேட்பாளர் பத்ம பிரியா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

“எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

என்னைப் போல் அரசியல் பின்புலம் இல்லாத ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணை உங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி வாக்களித்தமைக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

சில காரணங்களுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுகிறேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும்” என தெரிவித்துள்ளார் பத்மபிரியா.

Santhosh Babu IAS and Padma Priya leave MNM

#BREAKING கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவரது 2ஆம் டோஸ் தடுப்பூசி என அவரது பிஆர்ஓ ரியாஸ் தெரிவித்துள்ளார்.

தனது 2வது மகள் சௌந்தர்யாவுடன் மருத்துவமனைக்கு சென்று 2வது தடுப்பூசி போட்டுக் கொண்டார் ரஜினி.

Super Star Rajinikanth takes his Second dose of Covid-19 vaccine

JUST IN முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சிவகுமார்-சூர்யா-கார்த்தி ரூ.1 கோடி நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிவகுமார் மற்றும் மகன்கள் சூர்யா, கார்த்தி இணைந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கினர்.

அதன்பின்னர் சிவகுமார் பேசியதாவது..

முதலமைச்சர் நிவாரணத்திற்கு ஒரு கோடி நிதியளிப்பு.

தமிழகத்தில் தமிழ் படித்தவருக்கு வேலை கொடுக்க வேண்டும். கலைஞரை 40 வருடங்களாக சந்தித்து இருக்கிறேன். – அவர் அரசியல் வாரிசை முதன்முதலாக சந்தித்ததில் மகிழ்ச்சி”

என பேசினார் நடிகர் சிவக்குமார்.

SivaKumar family donated 1 crore to cm corona relief fund

‘அண்ணாத்த’ சூட்டிங் முடித்துவிட்டு வீடு திரும்பிய ரஜினிக்கு லதா ஆராத்தி.. (VIDEO); முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் ஏற்பாடு செய்திருக்கும் தனி விமானம் மூலம் இன்று மாலை ஐதராபாத்தில் இருந்து அவர் சென்னை திரும்புகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ், மரியம் ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘அண்ணாத்த’.

100 படங்களுக்கு இசையமைத்து விட்ட இமான் முதன்முறையாக ரஜினியின் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

கொரோனா லாக் டவுன் பிரச்னை மற்றும் ரஜினிகாந்தின் உடல்நிலை பாதிப்பால் (அரசியலுக்கு வராமலே அரசியலுக்கு முழுக்கு தனிக்கதை) படப்பிடிப்பு நின்றது.

இதனால் படக்குழு செய்வதறியாமல் தவித்து வந்தது.

தாம் அறிவித்தபடி 2021 தீபாவளிக்கு ‘அண்ணாத்த’ படத்தை ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டினாலும் ரஜினியின் உடல்நலனே முக்கியம் என்பதையும் நினைவில் கொண்டது.

தேர்தலுக்கு பிறகு (முடிவுகளுக்கு முன்பு) கொரோனா காலத்திலும் பலத்த பாதுகாப்புடன் ஐதராபாத்தில் கடந்த 35 நாட்களாக படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

ரஜினி & நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

முக்கியமாக ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை விரைவாக எடுத்து முடித்துள்ளார் சிவா.

இன்னும் சில நாடுகளுக்கு மற்ற நடிகர்களின் காட்சிகளை எடுக்கவுள்ளார் சிவா.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் ஏற்பாடு செய்த சிறப்பு விமானம் மூலம் ஐதராபாத்திலிருந்து சென்னை திரும்பி வீட்டிற்கும் அவர்கள் ஏற்பாடு செய்த காரில் வந்துள்ளார் ரஜினி.

வழக்கம்போல ரஜினியை அவரது மனைவி லதா ஆரத்தி எடுத்து வரவேற்றார்.

இன்று அல்லது நாளை தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார் என கூறப்படுகிறது.

இதன்பின்னர் ‘அண்ணாத்த’ பட டப்பிங்கை முடித்துவிட்டு கொரோனா ஊரடங்கிற்கு பின் உடல்நல பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார் சூப்பர் ஸ்டார்.

Superstar Rajinikanth has wrapped up the shoot of Annaatthe at Hyderabad

JUST IN ‘டாக்டர்’ ரிலீஸ் கேட்டு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் லவ் டார்ச்சர்..; படக்குழு தந்த அதிர்ச்சி அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டாக்டர்’.

சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

சிவாவின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ப்ரியங்கா அருள் நாயகியாக நடிக்க வினய், யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

கடந்த ஜனவரியில் ‘டாக்டர்’ பட ஷுட்டிங் முழுவதுமாக நிறைவடைந்தது.

இதனையடுத்து ‘டாக்டர்’ திரைப்படம் மார்ச் 26-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவித்தனர்.

அதன்பின் தமிழக தேர்தல் தேதி ஏப்ரல் 6 என அறிவிக்கப்பட்டதால் படக்குழு ரிலீஸ் தேதியை மாற்றி மே 14 ரம்ஜான் விருந்தாக படம் ரிலீஸ் என அறிவித்தனர்.

ஆனால் மே 10 முதல் 24 வரை கொரோனா முழு ஊரடங்கு என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதனால் ‘டாக்டர்’ படக்குழு கன்ப்யூசன் ஆகினர்.

ஒருவேளை டாக்டர் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிவிடுமா? தியேட்டரில் பார்த்து ரசிக்க முடியாதா? என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குழம்பியதால் அடிக்கடி ‘டாக்டர்’ ரிலீஸ் அப்டேட் கேட்டனர்.

இந்த நிலையில் கேஜேஆர் நிறுவனம் டாக்டர் ரிலீஸ் குறித்த அப்டேட்டை அறிவித்துள்ளனர்.

அதில்… “கொரோனா காலத்தில் நிறைய உயிர்களை இழந்து வருகிறோம். நிலைமையை புரிந்துக் கொள்ளுங்கள்.

வீட்டில் பாதுகாப்பாக இருங்கள். ரிலீஸ் தேதி பின்னர் அறிவிப்போம்” என அறிவித்துள்ளனர்.

Official update regarding Doctor from KJR Studios

JUST IN விஜய் & ஜீவா படங்களில் நடித்த மாறன் கொரோனா தொற்றால் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தரணி இயக்கிய விஜய்யின் ‘கில்லி’ படத்தில் ஆதிவாசி கேரக்டரில் நடித்தவர் மாறன்.

டிஷ்யூம், சார்பட்டா பரம்பரை, குருவி, வேட்டைக்காரன், ஏழுமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.

மேடை நாடக கலைஞரும், ஸ்டண்ட் கலைஞருமான மாறன் (எ) மணிமாறன் கொரோனா தொற்று காரணமாக இன்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். (வயது 48).

#RIP #ActorMaran #Covid

Ghilli fame Actor Maran passed away due to Covid 19

More Articles
Follows