தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
‘டெடி’ படத்திற்கு பிறகு சக்தி செளந்தரராஜன் இயக்கத்தில் 2வது முறையாக ஆர்யா இணைந்துள்ள படம் ‘கேப்டன்’.
இதில் ஐஸ்வர்யா லட்சுமி, காவ்யா ஷெட்டி, சிம்ரன், ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
‘கேப்டன்’ தலைப்பை தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்திரிடமிருந்து பெற்றுள்ளனர்.
இப்படத்தை தி ஷோ பீப்பிள் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து வருகிறது.
வரும் செப்டம்பர் 8-ல் ரிலீசாகிறது.
இந்த நிலையில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சந்தானம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
“எனக்கு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் கதைகள் வருகின்றன. ஒருவேளை பாஸ் என்ற பாஸ்கரன் படம் பார்ட் 2 எடுத்தால் அதில் ஆர்யாவுடன் நடிப்பேன். அவர் எனக்கு நெருக்கமான நண்பர்” என்றார்.
