இந்த டாப் நடிகருக்கு எதிராக முதல் முறையாக வில்லனாக நடிக்கும் சந்தானம்?

இந்த டாப் நடிகருக்கு எதிராக முதல் முறையாக வில்லனாக நடிக்கும் சந்தானம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜீத் குமார் நடிக்கவிருக்கும் ‘ஏகே 62’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சந்தானம் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது. இப்படத்தை தயாரித்து வரும் லைகா சந்தானத்துக்கு வழக்கமான சம்பளத்தை விட இரண்டு மடங்கு சம்பளம் வழங்குவதாக கூறப்படுகிறது.

ஏகே 62 படத்தில் சந்தானம் காமெடி மற்றும் நெகட்டிவ் சாயல் கலந்த கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்னேஷ் சிவனின் ‘நானும் ரவுடி தான்’ படத்தில் பார்த்திபன் நடித்த மாதிரியே இந்த கதாபாத்திரமும் இருக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Santhanam to play the villain against this megastar?

இதே வருடத்தில் மீண்டும் அடுத்த மோதலுக்கு ரெடியாகும் அஜித் & விஜய்

இதே வருடத்தில் மீண்டும் அடுத்த மோதலுக்கு ரெடியாகும் அஜித் & விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் ‘துணிவு’ & விஜய்யின் ‘வாரிசு’ ஆகிய இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகி மோதியது.

இந்த இரு படங்களும் மக்களின் வரவேற்போடு வசூல் வேட்டை செய்து வருகிறது.

இந்த நிலையில் இதே 2023 ஆம் ஆண்டில் மீண்டும் அஜித் & விஜய்யின் படங்கள் மோத அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் அஜித்தின் 62வது படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவரப்பட திட்டமிட்டுள்ளனர்.

அதேபோல லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் த்ரிஷா மன்சூரலிகான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாக உள்ள ‘தளபதி 67’ படமும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக இந்த ஒரே வருடத்தில் இரண்டு முறை விஜய் – அஜித் படங்கள் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Ajith & Vijay are ready for the next clash again in the same year

அஜித் பட ரீமேக்..: அசத்தலான மொட்டை கெட்டப்பில் சிரஞ்சீவி

அஜித் பட ரீமேக்..: அசத்தலான மொட்டை கெட்டப்பில் சிரஞ்சீவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு சிரஞ்சீவி நடித்த ‘வால்டர் வீரய்யா’ படம் தெலுங்கில் உருவாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

5 நாட்களில் மட்டும் உலக அளவில் ரூ.120 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இதனையடுத்து ‘போலா சங்கர்’ (Bholaa Shankar) என்ற படத்தில் நடிக்கவுள்ளார் சிரஞ்சீவி.

இந்த படம் அஜித் நடித்த ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்காக உருவாகுகிறது. இதை மெஹர் ரமேஷ் இயக்குகிறார்.

தற்போது இதன் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது.

தெலுங்கில் லட்சுமி மேனன் கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஸ்ருதிஹாசன் கேரக்டரில் தமன்னா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்திற்கான சிரஞ்சீவி போட்டுள்ள டான் மொட்டை கேரக்டர் கெட்டப் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Chiranjeevi’s bald look for Ajith film remake

ஆளாக்கி அழகு பார்த்த அன்னை..; வடிவேலு தாய் மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல்

ஆளாக்கி அழகு பார்த்த அன்னை..; வடிவேலு தாய் மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில காலங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்து தற்போது மீண்டும் நாயகனாகவும் காமெடியனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார் வடிவேலு.

இந்த நிலையில் வடிவேலுவின் தாயார் சரோஜினி என்ற பாப்பா காலமானார்.

மதுரை மாவட்டம் விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா (87) நேற்று இரவு உடல்நல குறைவால் காலமானார்.

நடிகர் வடிவேலு அவர்களின் தாயார் திருமதி. சரோஜினி அம்மாள் அவர்கள் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்.. நடிகர் வடிவேலுவின் அன்புத்தாயார் திருமதி. சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா அவர்கள் மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். ‘வைகைப் புயல்’ திரு. வடிவேலு அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tamil Nadu Chief Minister condoles death of Vadivelu’s mother

வடிவேலு என்ற காமெடி கலைஞனை பெற்றெடுத்த தாய் காலமானார்

வடிவேலு என்ற காமெடி கலைஞனை பெற்றெடுத்த தாய் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமா தொடங்கிய காலம் முதல் நாம் பல காமெடி நடிகர்களை பார்த்திருக்கிறோம்.

தற்போது டிஜிட்டல் உலகமயமாகிவிட்ட இந்த காலத்தில் கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் டெக்னாலஜி பெருமளவில் வளர்ந்துள்ளது.

இதனால் நிறைய மீம்ஸ் மற்றும் வீடியோக்கள் வலம் வருகின்றன. இதற்கான நிறைய மொபைல் ஆப்ஸ் உள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த மீம்ஸ் கிரியேட்டர்களின் கடவுளாக பார்க்கப்படுபவர் நடிகர் வடிவேலு.

அவரது காமெடி காட்சிகள் இன்றளவும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சில காலங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்த இவர் தற்போது மீண்டும் நாயகனாகவும் காமெடியனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் வடிவேலுவின் தாயார் சரோஜினி என்ற பாப்பா காலமானார்.

மதுரை மாவட்டம் விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா (87) நேற்று இரவு உடல்நல குறைவால் காலமானார்.

Vadivelus mother Sarojini Pappa passes away

அஜித் சூர்யா போல.?!.; சூப்பர் ஸ்டார் ரஜினி.? விஜய்.?.; ஆனந்த்ராஜ் அதிரடி பதில்

அஜித் சூர்யா போல.?!.; சூப்பர் ஸ்டார் ரஜினி.? விஜய்.?.; ஆனந்த்ராஜ் அதிரடி பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காமெடி நடிகர் சதீஷ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

இதில் நாயகியாக சிம்ரன் குப்தா என்பவர் நடிக்க முக்கிய வேடத்தில் ஆனந்தராஜ் நடிக்கிறார்.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வெங்கி என்பவர் இயக்குகிறார்.

இந்த படத்தின் பூஜையை முடித்து பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

அப்போது பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு ஆனந்தராஜ் பதில் அளித்தார்.

அதில்.. ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டம் விஜய்க்கா? சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வியை கேட்டனர்.

அதற்கு ஆனந்தராஜ் பதில் அளிக்கும் போது…

மக்கள் திலகம் என்றால் அது எம்ஜிஆர் ஒருவர் தான்.. நடிகர் திலகம் என்றால் அது சிவாஜி ஒருவர் தான்.. தற்போது இருவரும் மறைந்து விட்டனர்.. அந்த பட்டம் அப்படியேதான் இருக்கிறது. அது ஒரு அடையாளம் ஆகிவிட்டது.

அந்த பட்டத்தை யாருக்கும் கொடுக்கவில்லை.. யாரும் எடுத்துக் கொள்ளவும் இல்லை.. அது போல தான் சூப்பர் ஸ்டார்.. தம்பி விஜய்யும் அதை விரும்ப மாட்டார் என்றே நம்புகிறேன்.

நண்பர் அஜித் தனக்கு பட்டம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.. அதுபோல சூர்யாவும் பட்டம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்..

மற்றவரின் பட்டத்தை தேடாமல் தங்களுக்கு ஓர் அடையாளத்தை அனைவரும் உருவாக்கிக் கொள்ளலாம்.” என ஆனந்தராஜ் தெரிவித்தார்.

Actor Anandaraj talks about super star title

More Articles
Follows